ஈரான் கப்பலில் சிறைப் பிடிக்கப்பட்டிருந்த 24 இந்தியர்கள் விடுவிப்பு!

anகிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்கு முன்னர் அதாவது கடந்த ஜூலை மாதம் பிரிட்டனுக்குச் சொந்த மான ஜிப்ரால்டர் அருகே கைது செய்யப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பலில் இருந்த கப்பல் கேப்டன் மற்றும் மாலுமிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட அனைவரும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

சிரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு ஈரான் எண்ணெய் கப்பல் ரோஸ் 1 சென்று கொண்டிருந்த பொழுது அதனை மடக்கி ஜிப்ரால்டர் போலீசார் கைது செய்தனர். அந்தக் கப்பலில் பனாமா கொடி பறக்க விடப்பட்டிருந்தது.

முடக்கப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பலில் கேப்டன் ,தலைமை நிர்வாகி, இரண்டு துணை மாலுமிகள் இந்தியர்கள். இவர்கள் மீது ஜிப்ரால்டரில் விசாரணை நடந்தது .

விசாரணைக்குப்பின் ஆகஸ்ட் 15ஆம் தேதி 4 இந்தியர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

ஈரான் எண்ணெய் கப்பலை தன்வசம் ஒப்படைக்கும்படி அமெரிக்கா கோரியுள்ளது. அமெரிக்காவின் கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக ஜிப்ரால்டர் நீதிமன்றம் உறுதி அளித்துள்ளது.