கோயிலுக்கு போக ஆசையா? அப்ப இதைப் படிங்க!

கோயிலுக்கு போக ஆசையா? அப்ப இதைப் படிங்க!

இந்தியாவில் கோயிலிலும் திருவிழாக்களிலும் மக்கள் திரள் நிறைந்திருக்கும். மாசி மாதம், ஹோலிப் பண்டிகை என ஆன்மிக உற்சவங்களும் கொண்டாட்டங்களும் களைகட்டியுள்ள இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் மக்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இந்தியாவிலுள்ள உலகப் பிரசித்தி பெற்ற கோயில்களின் நிர்வாகங்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன.

இந்த நிலையில், மார்ச் 13-ம் தேதி மாதாந்திர மண்டலகால பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்படுகிறது. அனால், கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்கள் ஐயப்ப தரிசனம் செய்ய மலைக்கு வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது, திருவாங்கூர் தேவசம்போர்டு. ராமேஸ்வரத்துக்கு வருகிற சுற்றுலாப் பயணிகளையும் வெளிநாட்டவர்களையும் காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள். தேவைப்படும் பட்சத்தில் மருத்துவப் பரிசோதனையும் செய்யப்படுகிறது

மேலும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வெளிநாட்டு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இந்த முடிவை தேவஸ்தானம் எடுத்துள்ளது. சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 4 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்தியாவில் கொரோனா பரவிவருவதால் அவற்றை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தினந்தோறும் 1 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். அனைத்து இடங்களிலும் பக்தர்கள் அதிகளவில் இருப்பதால் இடைவெளியுடன் செல்வது இயலாதது.

இவ்வாறு செல்லும்போது வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டுக்கு சென்று வந்தவர்கள், வெளிநாட்டினர் ஏழுமலையான் கோயிலுக்கு வரவேண்டுமென்றால், இந்தியாவிற்கு வந்து 28 நாட்களுக்கு பிறகுதான் கோயிலுக்கு வர வேண்டும். மேலும் தங்களுடைய உடல் ஆரோக்கியத்தை பரிசோதனை செய்துகொண்டு வர வேண்டும். பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுத்திருப்பதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

முன்னதாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காசி விசுவநாதர் கோயில் கடவுளுக்கும் முக கவசம் அணிவிக்கப்பட்டு உள்ளதாக புகைப்படத்துடன் வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இது குறித்து அந்த கோவில் பூசாரி கூறியபோது கடவுளுக்கு எந்த நோயும் பரவாது என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் கடவுளை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக காசிவிசுவநாதர் சிலைக்கு கொரோனா வைரஸ் பாதுகாப்பு முகக்கவசத்தை அணிவித்து உள்ளோம் என்று கூறியுள்ளார் மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கடவுள் சிலைகளை யாரும் தொட வேண்டாம் என்று பொதுமக்களிடம் அவர் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

error: Content is protected !!