ஆண்டவன் உலகத்தின் முதலாளி பாடலைப் படைத்த ஆலங்குடி சோமு! –

இவர் அந்தக் காலத்து ஆள். ஆனால் இவர் படைத்த பாடல்கள் இந்த காலத்து பசங்களை இப் போதும் ஈர்க்கும் வரிகளைக் கொண்டவை. கருத்தாழமிக்க, ரசனையைத் தூண்டும் அற்புத மான பாடல் வரிகளை தமது கற்பனை வளத்தாலும் எழுத்துத் திறமையாலும் இக் கவிஞர் நமக்கு அளித்துள்ளார். அவரின் பல பாடல்கள் இன்பமான நேரங்களில் மட்டுமல்ல, கவலை யுறும் நேரங்களிலும் நமது மனத்தை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் மருந்தாக திகழ்கின்றன. இதற்காக தமிழ்த் திரையுலகில் 1960-களில் நுழைந்து 1990-களின் இறுதிக் காலம் வரை திரையிசைப் பிரியர்களுக்குப் பல வெற்றிப் பாடல்களைத் தந்தவர் ஆலங்குடி சோமு. இத்தனைக்கும் இவர் நுழைந்த காலக் கட்டத்தில் தஞ்சை ராமையாதாஸ் , சுரதா , அண்ணல் தாங்கோ , புரட்சிதாசன் , மருதகாசி , க.மு. செரீப் , அவினாசிமணி ,எஸ்.டி.சுந்தரம், மு.கருணா நிதி, கே.பி.காமாட்சி, விந்தன். வில்லிபுத்தன் மக்களன்பன் , கு.மா.பாலசுப்ரமணியம் , மாயவனாதன், ,கே.எஸ். கோபால கிருஷ்ணன் , கே.டி. சந்தானம், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் , கண்ணதாசன் என்ற பல கவைஞர்கள் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். அவர்களையெல்லாம் தாண்டி மனதில் நின்றவர் சோமு .சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த ஆலங்குடியைச் சேர்ந்தவர்தான் இந்த இன்னிசைப் படைப்பாளி சோமு.

சினிமாக்களுக்கு திரைக்கதை எழுத வேண்டுமென்ற ஆவலோடு கோடம்பாக்கம் நாடி வந்த சோமுவுக்கு பாட்டெழுதும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தவர் இவரது பள்ளித் தோழனும், பக்கத்து ஊர்க்காரருமான கவிஞர் புரட்சி தாசன். இந்த சோமுவைத் தயாரிப்பாளர் சின்னப்பா தேவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது‘’யானைப்பாகன்’’ திரைப்படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்த தேவர் இப்படத்திற்குப் பாடல் எழுதும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி ஆலங்குடி சோமு எழுதிய முதற்பாடல் 1960-இல் வெளிவந்த ‘’யானைப்பாகன்’’ திரைப்படத்தில் ஏ.எல்.இராகவனும், எல்.ஆர்.ஈஸ்வரியும் இணைந்து பாடிய ’ஆம்பளைக்குப் பொம்பளை அவசியந்தான்’’ என்ற பாடல். இஃது ஓர் நகைச்சுவைப் பாடல். படத்தில் இப்பாடல் காட்சியில் நகைச்சுவைச் செம்மல் குலதெய்வம் ராஜகோபாலும் மனோரமாவும் நடித்திருந்தனர். பாடலும் வெற்றியைப் பெற்றது.

1961-இல் ‘கொங்கு நாட்டுத் தங்கம்’ படத்துக்காக ’கந்தா உன் வாசலிலே கார்த்திகைத் திருநாள்’, 1963-இல் ‘கலையரசி’ படத்தில் ’நீல வானப் பந்தலில்’, ’காஞ்சித் தலைவன்’ படத்தில் ‘அவனியெல்லாம் புகழ் மணக்கும் அம்மன் அருள்’, பி.பானுமதி பாடிய ’மயங்காத மனம் யாவும் மயங்கும்’ போன்ற பாடல்கள் ஆலங்குடியாரின் பிரபலமான பாடல்களாகும்.

1964-ஆம் ஆண்டு இரண்டு படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். அவை ‘தொழிலாளி’, ‘தெய்வத்தாய்’. ‘தொழிலாளி’ படத்தில் ‘ஆண்டவன் உலகத்தின் முதலாளி’ என்ற பாடல் பொதுவுடமை, சகோதரத்துவம், ஒற்றுமை என்பவற்றை அழகாக எழிய தமிழில் எடுத்துக் கூறிய பாடல். சோமு எம்.ஜி.ஆருக்காக எழுதிய முதல் பாடலும் இதுதான்.

1965-ஆம் ஆண்டு 10 படங்களுக்குப் பாடல் எழுதும் சந்தர்ப்பம் அமைந்தது. ‘இரவும் பகலும்’, ’எங்க வீட்டுப் பிள்ளை’, ‘ஒரு விரல்’, ‘கார்த்திகை தீபம்’, ‘எங்க வீட்டுப் பெண்’, ’பூஜைக்கு வந்த மலர்’, ‘நாணல்’, ’நீர்க்குமிழி’, ‘விளக்கேற்றியள்’ என்பவை அந்த பத்தில் அடக்கம். ‘இரவும் பகலும்’ படத்தில் ஆறு பாடல்களை எழுதினார். நடிகர் எஸ்.ஏ.அசோகன் பாடிய ஒரே பாடலான ‘இறந்தவன சுமந்தவனும் இறந்திட்டான்’, டி.எம்.எஸ்.பாடிய ‘இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்’ பாடல்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றப் பாடல்களாகும்.

இதே ஆண்டில் ‘எங்க வீட்டுப் பிள்ளை’க்காக இவர் எழுதிய எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினருடன் பாடிய கண்களும் காவடிச் சிந்தாகட்டும், காளையர் நெஞ்சத்தைப் பந்தாடட்டும்’ என்ற பாடலை எழுதித்தரும்படி கேட்டவுடன் ஏழே நிமிடங்களில் எழுதிக்கொடுத்தார் ஆலங்குடி சோமு. எம்.ஜி.ஆரிடம் ஆலங்குடி சோமுவை அறிமுகப்படுத்தியவர் நடிகர் எஸ்.ஏ.அசோகன். இதே படத்தில் வரும் பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ’மலருக்குத் தென்றல் பகையானால்’ பாடலும் இவர் எழுதியதே.

1968-இல் வெளிவந்த ‘குடியிருந்த கோயில்’ படத்தில் இவர் எழுதிய ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்’ என்ற டி .எம்.எஸ், பி.சுசீலா பாடிய பாடலைக் கேட்டு ரசிக்காத உள்ளங்கள் இல்லையெனலாம். இப்படத்தின் பாடல்களை நான்கு கவிஞர்கள் எழுதினார்கள். திரையில் இந்தப் படத்தின் தலைப்புப் பட்டியலில் ஆலங்குடி சோமுவின் பெயரும் இடம்பெற்றிருக்கும். இசைத்தட்டில் இந்தப் பாடல் கவிஞர் வாலி எழுதியதாகத்தான் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் இணையதளங்களிலும், கவிஞர்களின் பாடல் பட்டியல் களிலும் ஆலங்குடி சோமு என்பதாகத்தானிருக்கும். இதே படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ‘துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை’ என்ற பாடலும் இவர் எழுதியது .

1960 தொடங்கி, 1997 வரை 35 ஆண்டுகளில் எண்பது படங்களுக்கு 170 பாடல்கள் எழுதியுள்ளார் ஆலங்குடி சோமு. இவர் கடைசியாக எழுதியது ‘பொற்காலம்’ படத்திற்கு எழுதியது 1997-இல் வெளிவந்தது.

இவர் கே.பாலசந்தரின் இயக்கத்தில் நாகேஷ், ஜெமினிகணேஷ், ராஜஸ்ரீ, பேபி ராஜி, வசந்தா, விஜயலலிதா நடித்த ‘பத்தாம் பசலி’ என்ற படத்தையும், ஜெய்சங்கர், ஜெயகௌசல்யா, ஜே.பி.சந்திரபாபு, சுருளிராஜன், மனோகர், ஏ.சகுந்தலா, ரமாபிரபா, ஜஸ்டின் நடித்த ‘வரவேற்பு’ என்ற படத்தையும் சொந்தமாக தயாரித்தார். இவ்விரு படங்களும் வெற்றி பெறவில்லை. ஆனால் பத்தாம் பசலியில் இடம் பெற்ற ‘அம்மாடி எம்புட்டு தூரம் நடக்குறது’, ‘வெள்ளை மனம் கொண்ட பிள்ளையொண்ணு’, ’போடா பழகட்டும் ஜோடி’, ‘பத்தாம் பசலி மாமா…. மாமோய், அந்தப் பாடம் படிக்கலாமா’ ஆகிய பாடல்கள் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. அது போல ‘வரவேற்பு’ படத்தில் இடம்பெற்ற ‘பொன் வண்ண மாலையில் நீ தொடும்போது’, ‘வரவேண்டும் மகராஜா தரவேண்டும் புதுரோஜா’, ‘ஆடல் அரங்கம் எந்தன் விழிகள்’ ஆகிய பாடல்களும் அன்றைய காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல்களாகும்.

எம்.எஸ்.வியிடம் அநேக சிறப்பான பாடல்களை எழுதியிருக்கிறார். “ஆண்டவன் உலகத்தின் முதலாளி”, “தாயில்லாமல் நானில்லை”, உள்ளத்தின் கதவுகள் கண்களடா”, போன்ற பல கருத்துள்ள தத்துவப்பாடல்களை இவர் எழுதியுள்ளார். இவர் எழுதிய “பொன் மகள் வந்தாள், பொருட்கோடி தந்தாள்” என்றபாடல் ஆல்டைம் ஃபேவரைட்.

பிற்காலத்தில் வாத நோயினால் பாதிக்கப்பட்டு இதே நாளில் இயற்கை எய்தினார்.

aanthai

Recent Posts

“மஞ்சக்குருவி” படத்தின் பாடல் & டிரைலர் வெளியீட்டு விழாத் துளிகள்!

V.R Combines விமலா ராஜநாயகம் தயாரிப்பில், சௌந்தர்யன் இசையில், "மஞ்சக்குருவி" படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.…

6 hours ago

சர்வதேச அளவில் தலைசிறந்த 1000 பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியல்!

சர்வதேச அளவில் தலைசிறந்த 1000 பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில், முதலிடத்தில் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இடம் பிடித்துள்ளது. முதல் 100…

7 hours ago

தாஜ்மகால் மாதிரி தஞ்சை பெரிய கோவிலையும் பார்க்க மக்கள் வரப் போறாங்க- சரத்குமார் நம்பிக்கை!

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம்…

9 hours ago

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு தடை: மத்திய அரசு அதிரடி உத்தரவு

கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சையில் சிக்கி வந்த பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா(பிஎஃப்ஐ) மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5…

18 hours ago

மகளிர் கல்லூரியின் விழாவில் கலந்து கொண்ட துருவ் விக்ரம்!

சென்னையிலுள்ள எம் ஓ பி வைஷ்ணவ மகளிர் கல்லூரில் நடைபெற்ற ‘விஷ் 22’ (Vish 22) எனும் கல்லூரி கலை…

1 day ago

ஈரான்: ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டத்தில் வெளிநாட்டு சதி?

ஹிஜாப்பை முறைப்படி அணியவில்லை என்று கூறி போலீசார் தாக்கியதில் மாஷா என்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும்…

1 day ago

This website uses cookies.