தமிழ் படங்களில் நடிக்கத் தயார்!- மிஸ் சூப்பர் Globe’ அக்‌ஷரா ரெட்டி பேட்டி – விடியோ!

இந்திய அளவில் 22 மாநிலங்கள் கலந்துகொண்ட “மிஸ் சூப்பர் globe 2019” அழகிப் போட்டியில் சென்னையை சேர்ந்த மிஸ். அக்சர ரெட்டி என்பவர் தமிழ்நாடு சார்பில் அந்தப் போட்டியில் கலந்துகொண்டு அழகி பட்டம் வென்றார்.

இதைத்தொடர்ந்து அவர் இன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகம் சார்பில் மிஸ் சூப்பர் குளோப் இந்தியா 2019 போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்ததாக அக்டோபர் மாதம் துபாயில் 45 நாடு களிலிருந்து கலந்து கொள்ளும் உலக அழகி போட்டி நடைபெற இருக்கிறது. அதில் நான் இந்தியா சார்பில் கலந்து கொள்கிறேன் என்றார்.

மேலும் பேசிய அவர் தமிழக அரசியல்வாதிகளில் ஜெயலலிதாவை எனக்கு பிடிக்கும் எனவும், தற்போது பாலியல் சம்பவம் தொடர்ந்து நடைபெறுவது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தார்.

பாலியல் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் அப்போதுதான் இதுபோன்ற குற்றங்கள் தடுக்கப்படும் என்றார்.

அதுபோன்று me to அமைப்பு மூலம் பெண்கள் தங்களுடைய கருத்தை தைரியமாக சொல்ல முடிகிறது என்றார். பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் இன்னும் ஏன் கடுமையாக தண்டிக்கப்பட வில்லை என்று தெரியவில்லை என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் தமிழ் படங்களில் நடிக்க தயாராக இருப்பதாகவும், மேலும் ரஜினி விஜய் அஜித் சூர்யா ஆகியோர் படங்களில் நடிக்க ஆசை இருப்பதாகவும் தெரிவித்தார்.