நீட் தேர்வு வேண்டாமுன்னு சொல்வோரே அதிகம் : ஏ.கே.ராஜன் அறிக்கை தாக்கல்!

நீட் தேர்வு வேண்டாமுன்னு சொல்வோரே அதிகம் : ஏ.கே.ராஜன் அறிக்கை தாக்கல்!

மெடிக்கல் காலேஜ் ஸ்டூடன்ஸ்களைத் செலக்ட் செய்ய நடத்தப்படும் நீட் எக்ஸாம் பாதிப்புகள் குறித்து விளக்கும் 165 பக்க ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ஜூலை 14ந்தேதி புதன்கிழமை சமர்ப்பித்தது.

தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்த ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை, கடந்த ஜூன் 10ம் தேதி தமிழக அரசு அமைத்தது..
நீட் தேர்வின் பாதிப்புகள்குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் என யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம் என இக்குழு அறிவித்திருந்தது.

அந்த வேண்டுகோளை ஏற்று 89,342 பேர் நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இந்த கருத்துகளை பரிசீலனை செய்த ஆய்வுக்குழு, பல கட்டமாக ஆலோசனைகளை நடத்தியது. இந்த குழுவுக்கு எதிராக பா.ஜ., தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஏ.கே.ராஜன் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் தங்களின் அறிக்கையை இன்று (14-7-2021) காலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் அளித்தனர்.

அறிக்கை தாக்கல் செய்தப்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே.ராஜன், ”165 பக்கம் கொண்ட ஆய்வறிக்கை முதல்வரிடம் வழங்கப்பட்டு உள்ளது. ஆய்வுக்குகுழுவிடம் கருத்து தெரிவிவித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் நீட் தேர்வு வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வின் தாக்கம் தொடர்பான முக்கிய கருத்துகள் முதல்வரிடம் விளக்கப்பட்டுள்ளது. கருத்துக்கள் அடிப்படையிலான ஆய்வறிக்கையை வழங்குவது மட்டும் தான் எங்களுடைய பணி. அதனடிப்படையில் முடிவு எடுப்பது அந்த முடிவை அமல் படுத்துவது தமிழக அரசின் பணியாகும். இதற்கு மேல் எங்களால் சொல்ல முடியாது. மற்றவைகளை எல்லாம் தமிழக அரசு தான் அறிவிக்கும்”என்று ஏ.கே.ராஜன் கூறினார்.

error: Content is protected !!