அஜித்-தின் விவேகம்’ டீசர் வேர்ல்ட் ட்ரெண்ட்!

அஜித்-தின் விவேகம்’  டீசர்  வேர்ல்ட் ட்ரெண்ட்!

சிவா இயக்கத்தில் தல அஜித் – காஜல் அகர்வால் இணைந்து நடித்திருக்கும் இப்படம் வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் முதல் போஸ்டர் வெளியானது முதலே படம் குறித்து ஒவ்வொரு நாளும் ருசீகரமான தகவல் வந்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் விவேகம் படத்தின் டீசர் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. ஆம்.   சர்வதேச அளவில் ‘யு’ டியூப் லைக்களில் 2வது  இடத்தில் உள்ள டீசர் மார்க்வெல்லின்  ‘அவஞ்சர்ஸ் ஏஜ் ஆப் அல்ட்ரான்’ இந்த டீசர் வெளியாகி 3 வருடங்கள் ஆகிறது. இதற்கு இதுவரை 8 கோடி பார்வையாளர்களும், 5 லட்சத்து 24 ஆயிரத்து 32 லைக்குகளும் கிடைத்துள்ளன.

ஆனால் .. அஜித்தின் ‘விவேகம்’ படத்தின் டீசர் வந்து 3 மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் ஒரு கோடியே 9 லட்சம் பார்வையாளர்களும்,6 லட்சத்து 27 ஆயிரம் லைக்குகளும் கிடைத்துள்ளன. இதன் மூலம் குறுகிய காலத்தில் உலக அளவில் அதிக சாதனை படைத்து முதல் இடம் பிடித்த டீசர் இது என்ற பெருமையை ‘விவேகம்’ படைத்திருக்கிறது. முதல் இடத்தில் ‘ஸ்டார் வார்ஸ்: தி லாஸ்ட் ஜேடி’ படத்திற்கு 5 லட்சத்து 66 ஆயிரம் லைக்குகள் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இப்படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். தற்போது இதன் தமிழக வியாபாரம் படுகிரண்டாக முடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்த போது, “ரஜினி படங்களுக்குப் பிறகு கடுமையான போட்டிக்கு இடையே வியாபாரமாகியுள்ளது. கண்டிப்பாக அஜித் படங்களில் விநியோக வியாபாரத்தில் இந்தப் படம் முதன்மையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பாடல்கள், டீஸர், போஸ்டர்கள் என அனைத்துமே மக்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது தான் இதற்கு காரணம்” என்று தெரிவித்தார்கள். மேலும் ‘விவேகம்’ வியாபாரத்தினால் தயாரிப்பாளர்களும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

error: Content is protected !!