December 9, 2022

ம் கோலிவுட் சினிமாக்கள் மட்டும், ஆதர்ச புருஷர்களாகக் காட்டப்படும் நாயகர்களை மையம் கொண்டே கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் அவர்களின் முகங்களுக்காகவே மக்கள் திரையரங்குக்கு வரும் போக்கும் இருக்கிறது. அதனால் இந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்குக் கதை, கருத்து எல்லாம் இரண்டாம்பட்சம்தான். ஆனால் இதிலிருந்து மாறுப்பட்டு சினிமா என்னும் ஊடகத்தின் மூலம் நேசம், பாசம் தொடங்கி சில பல நாட்டு நடப்புகளை வெளிச்சமிட்டுக் காட்ட தூண்டுவோரில் தல -யாக இருக்கிறார் அஜித். இவர் கடந்த சில படங்களில் காதலிப்பது போன்ற காட்சிகளை எல்லாம் தவிர்க்க சொல்லி விட்டு கொஞ்சம் அரிதான விவகாரங்களைக் கையில் எடுப்போருடன் பயணம் செய்வது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் ஹெச். வினோத்துடன் இணைந்து கொடுத்துள்ள வலிமை பக்கா எண்டர்டெயினராகவே இருக்கிறது.

கதை என்னவென்றால் போலீஸ் ஆபீசர் அஜித், .குற்றம் செய்பவர்களின் கையை உடைத்துவிட்டு, அவர்கள் குடும்பத்திற்கு பணம் உதவிசெய்வது வாடிக்கை. இவர் அம்மா, குடிகார அண்ணன், வெட்டியாக பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கும் தம்பி, அக்கா என்று வாழ்ந்து வரும் சூழலில் சென்னையில் பெரும் குற்றங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன. குறிப்பாக சங்கிலி பறிப்பு சம்பவங்கள், போதைப் பொருள் தொடர்பான நிகழ்வுகள், கொலைகள் பெரும் எண்ணிக்கையில் நடக்கின்றன. அதாவது கொலம்பியாவில் இருந்து பாண்டிச்சேரிக்கு போதைப் பொருட்கள் வருகிறது. அவைகளை பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு பைக்கில் மர்ம இளைஞர்கள் கடத்துகிறார்கள். இச்சூழலில் இந்த வழக்கை விசாரிக்கும் அஜித் கடத்தல் (பைக்) கேங் தலைவன் கார்த்திகேயா என்பதையும் அக்கூட்டத்தில் தன் தம்பியும் உண்டு என்பதை எல்லாம் கண்டுபிடிக்கிறார். அதை அடுத்து வில்லனான கார்த்திகேயா ஹீரோ அஜித் பேமிலியைக் பழைய நம்பியார் பஆணியில் கடத்திப் போய் விட அவர்களை மீட்டு வில்லனை பழிவாங்குவதுதான்

அர்ஜுன் என்ற நேமில் அஜித் வழக்கம் போல் து அசத்தி இருக்கிறார். அதிலும் ஆக்சன், காமெடி, சென்டிமென்ட், நடனம் என அனைத்திலும் அபரிதமான திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பவர்.பைக் ஆக்சன் காட்சியில் மிரள வைத்திருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் கார்த்திகேயா ஸ்கோர் செய்கிறார். இவரது உடல் அமைப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது. நாயகியாக வரும் ஹுமா குரேஷி, ஆக்சனில் மாஸ் காண்பித்திருக்கிறார். போலீஸ் அதிகாரிகளாக வரும் செல்வா, ஜி.எம்.சுந்தர், தினேஷ் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

வேற மாறி பாடல் ஆடவும், அம்மா பாடல் உருகவும் வைத்திருக்கிறது. நீரவ் ஷாவின் கேமரா ஒர்க் அபாரம்

நாட்டில் நடக்கும் போதைப்பொருள், பைக் கொள்ளையர்களை மையமாக வைத்து கிரைம் திரில்லர் கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் வினோத். ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன்: அதிகாரம் ஒன்று’, ‘நேர்கொண்ட பார்வை’ ஆகிய படங்களை உருவாக்கித் தனிக் கவனம் பெற்ற இந்த டைரக்டர் பைக்குகளை வைத்து நடக்கும் குற்றங்களை முதல் காட்சியிலேயே விறுவிறுப்பைக் காட்டி அசர வைத்திருக்கிறார் . ஆனால் பார்ப்பதற்கு ஹாலிவுட் திரைப்படத்தை பார்க்கும் அனுபவத்தை வழங்க வேண்டும், என்று மட்டும் யோசித்து உழைத்திருக்கும் எச் வினோத், படத்தின் திரைக்கதையில் இன்னும் கொஞ்சூண்டு கவனம் செலுத்தியிருந்தால் வலிமை மேலும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனாலும் நடக்கும் குற்றங்களைத் தடுக்க அர்ஜுன் என்ற போலீஸ் ஆபீசராக அஜீத் வந்ததும், சூடு பிடித்து.பரபரப்பான பைக் துரத்தல் காட்சிகள், விறுவிறுப்பான ஆக்ஷன் என போரடிக்காமல் திரைக்கதையை நகர்த்தியதில் முழு மதிப்பெண் வாங்கி விட்டார். கூடவே , அம்மா மகன், அண்ணன் தம்பி பாசம் என அனைத்து ரசிகர்களும் கவரும் விதத்தில் உருவாக்கி .இருப்பதுதான் ஹைலைட்..

மேலும் ஆக்‌ஷன் காட்சிகளை அடுத்து பெரிய பலமாக இருப்பது வசனங்கள்தான். ‘உன் மேல கல்லெறிஞ்சா அந்த கல்லையெல்லாம் எடுத்து ஒரு மாளிகை கட்டி அதுல கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கீழ குனிஞ்சி பார். உன்னோட எதிரிகள் அதே கல்லை வைத்துக்கொண்டு உன்னை அண்ணாந்து பார்த்து கொண்டிருப்பார்கள்’ ‘வலிமைங்கிறது அடுத்தவனைக் காப்பத்தத்தான்… அழிக்க இல்லை,’ ‘வறுமைன்னு சொல்லி தப்பு பண்ணாதே… அப்படி சொல்லி உழைச்சு சாப்பிடுற ஏழைகளைக் கேவலப்படுத்தாதே’, ‘தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்கிறவன் சமநிலை தவறுனா, அவன் கோபம் எப்படி இருக்கும்னு காட்டுவேன்’ போன்ற வசனங்களை அஜித் பேசும் போது தியேட்டர்களில் ரசிகர்களின் சத்தம் காதை கிழிக்கிறது.

மொத்தத்தில் ‘வலிமை’ முழுமையான பொழுதுப் போக்கு

மார்க் 3.5/5