’தலை’யாய் அல்லாமல் ஓல்டு ரேஸ்மேட் அஜித்குமாராய் பிடிக்கும்!

அஜித் என்ற மூன்றெழுத்து மந்திரம்……அஜித் பற்றி நான் அவ்வளவாக எழுதியது இல்லை, அதே சமயம் பல தடவை அவரின் சிறு சிறு காமன் மேன் செயல்பாடுகளை பெரிதுபடுத்தும் அபத்தமான ரசிகர்களை கலாய்த்து தான் எழுதியிருக்கிறேன். ஆனாலும் இந்த அல்டிமேட் ஸ்டார் அஜித்தை எனக்கு 1990 முதல் தெரியும்.

என்னுடைய க்ளீன் ஷேவ் மூஞ்சிக்கு மிக முக்கிய காரணம் என்னவென்று சில க்ளோஸ் நண்பர் களுக்கு தெரியும், 1992 இருங்காட்டுகோட்டை ரேஸில் விழுந்து என் முகத்தில் 143 தையல்கள் போட வேண்டும் என மருத்துவமனை டாக்டர்கள் கூறியதில் அதிகம் நொறுங்கி போனது நான் என்னுடைய தாயார். இருந்தும் அந்த பிள்ஸ் மைனஸ் எக்ஸ் தையல்கள் மார்கோடு எப்படி நான் நடமாடுவேன் அதை விட என்னை கொன்று விடுங்கள் என்று கூட கதறி அழுது இருக்கிறேன். மூக்கு பிளந்து விட்டது, கண்கள் இமை சுத்தமாய் கிழிந்து தொங்கி கொண்டிருந்தது அது போல பல அவலங்கள் அன்று, ஆனாலும் மனம் தளராமல் ஆஸ்திரேலியாவுக்கு எமர்ஜென்ஸி விசா வாங்கி ஸ்கின் கிராஃப்டிங் என்னும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி முகத்தை தேற்றினாலும் சிரிக்கும் போது லைட்டா கோணலாக இருக்கும் மூக்கு பிளவுன்ட பகுதி நன்கு தெரியும், இமை கிழிந்தி தைத்தது எல்லாம் தெரியும் இன்றும், மிச்ச தையல்கள் எல்லாம் க்ளு ஸ்டாப்ளர் முலம் சரி படுத்தியதால் தொட்டு பார்த்தால் தான் தெரியும் அவ்வளவு பெரிய அடி என்று.

இதை இன்று சொல்ல காரணம் எனக்கு 1992 இந்த அடி அதற்கு ஒரு வருடம் முன்பு தான் அஜித் துக்கு கேஸ்ட்ரால் பென்டு என்று ஒரு மரண பென்டு இருக்கு அதில் வாரிய சில்லரையில் அஜித் 1991ல் பலத்த முதுகு தண்டில் அடி. எல்4 எல்5 டேமேஜ். எனக்கு அடிபட்டது ஒன்றுமே அல்ல. ஆனால் நாங்கள் இருவரும் ஒரே கிளப்பான லிப்ரா கிளப் எம் ஆர் எஃப் கிளப்பில் தான் ரேஸ் ஓட்டிக் கொண்டிருந்தோம். அவ்வளவு பழக்கமே இல்லை ஆனா தெரியும். நான் ரேஸ் விட்டு ராலியில் கொஞ்சம் பந்தா காட்டி கொண்டிருந்தேன். நான் காலேஜ் டிஸ்கன்டினியு ஆறு மாத விடுப்பால், அப்புறம் அண்ணா யுனிவர்ஸிட்டில திரும்பவும் முதல்ல இருந்து எஞ்சினியரிங் படிப்புனு இருந்த போது 1993ல அமராவதி படம் ரிலீஸ் அதுல பார்த்தேன் முதன் முதலாய் அஜித்தை ஸ்க்ரீனில். அவ்ளோதான் அஜித்தை 1991 பிறகு நேராக சந்தித்தது இல்லை.

பின்னர் பெயர் குறிப்பிட விரும்பவில்லை அந்த பெண்ணுடன் @ஹோம் கடையில் 2005ல் ஷாப்பிங் செய்யும் போது அஜித்தை நேரே கண்டேன். ஆனால் என்னை விட அந்த பெண்ணுக்கு நண்பர். அறிமுகபடுத்திய 60 வினாடிக்குள் உங்களை எங்கோ பார்த்திருக்கேன்னு சொன்னார்….. உடனே ஹவ் இஸ் யுவர் பேக்னு கேட்ட உடனே……..ஏ டிராக் 27 அப்படினு என்னுடைய பைக் பெயரை குறிபிட்டு சொன்ன போது கூட அஜித் எவ்ளோ பெரிய ஆள் அவருக்கு இருக்குக் கிரேஸ் பற்றி எனக்கு துளியளவும் தெரியாது ஏன் என்றால் சினிமா பழக்கமே இல்லை. அந்த சந்திப்பு வெறும் 3 நிமிஷம் 10 நொடிதான்.. அப்புறம் அஜித்தின் கிரேஸை நண்பர் டைரக்டர் சரண் சொல்ல கேட்டிருக்கிறேன் ஆனாலும் அவரின் சினிமா பிம்பத்தை பற்றி அறிந்திருக்கவில்லை. என்னுடைய‌ கர்மாவின் படி 4 வருட சினிமா வாழ்க்கையில் அஜித்தின் கிரீடம் படத்தை வாங்கினேன். அதை தயாரித்த வகையில் சினிமாவின் இன்னொரு பிரம்மா கே பாலாஜியை சந்தித்தேன் முதல் பிரதியை அவர் கையால் வாங்கி நாட்கள் மறக்கவே முடியாது.

கிரீடம் படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு.. அஜித்தின் ஃபைட் கிட்டதட்ட 11 நாட்கள் நடந்தன. என்ன்ப்பா இவ்ளோ லெந்த்தா ரிலீஸ் தேதி தெருங்கிடுச்சுனு ஒரு நாள் நானே பிளைட் ஏறி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போனா அங்கு அவரின் கஷ்டம் கண்டேன். ஒரு ஷாட் அதை முடிச்சா அடுத்த 3 மணி நேரத்துக்கு முதுகு வலினு அவர் இரண்டு நாள் அவஸ்தை பட்டத்தை பார்த்த போது தான் அவரின் முதுகுதண்டு எல்4 எல்5 பிரச்சினை உச்சியை தொட்டுகொண்டிருந்ததை கண்டேன். பரிதாபபட்டேன் ஆனாலும் விடாம நடிச்சி முடிச்ச உடனே வலியோடு கேரவனில் ரெஸ்ட் எடுப்பார்.

அந்த கிரீடம் படம் தான் ஜிவி பிரகாஷுக்கும் முதல் படம். படம் சக்ஸஸ், படத்தி ரெண்டாவது நாளே அஜித்தின் நண்பர் மேனேஜர் சுரேஷ் சந்திரா ஃபோன் செய்து அஜித் உங்களுக்கு வாழ்த்து களையும் நன்றிகளையும் தெரிவிக்க விரும்புகிறார்னு சொல்லி லைன்ல வந்து நேராகவே பேசினார். அந்த படம் தான் அவருக்கு டர்னிங் பாயின்ட். அவரின் உடம்பை கட்டுக்குள் வைத்திருக்க முடியாத ஒரே காராணம் கடின உடற்பயிற்சி செய்ய இயலாது. அவரின் மருந்துகளில் Steriod இருப்பதால் அது வெயிட்டை கூட்டும் அதை விட்டால் முதுகு வலி மரண வலியை விட கொடுமையானது. முதுகு தண்டுவட வலி. இவ்ளோ பிரச்சினையிலும் இன்னும் எந்த ஒரு இமேஜை பற்றி கவலைப்படாமல் அவர் நடிப்பது மட்டும் எவ்ளோ பெரிய சாதனைனு எனக்கு தெரியும். ஸ்க்ரீன்ல நடிக்கும் மெகா ஹீரோக்கள் எல்லாம் எந்த ஒரு விளம்பரம் பேட்டில தோன்ற கூடாதுனு அபப்டிங்கிறதில உறுதியா இருந்ததனால் தான் அவர் தனியாய் தெரிகிறார்.

ஆனாலும் 2007ல் அவரை ஆளும் கட்சி அவர் படத்தை வாங்கியதால் கண்டிப்பாய் எல்லா டிவிக்கு பேட்டி கொடுத்தே ஆகனும் மிரட்டி அவரை ஒரு நாள் முழுவதும் கிரீன் பார்க் ஹோட்டலில் பேட்டி எடுத்தது தான் கடைசி நான் சினிமா அப்பியரன்ஸ். அதுக்கு அப்புறம் அவர் செலக்டிவ் தயாரிப்பாளர்கள் படத்தில் மட்டுமே நடிக்க ஆரம்பித்தார். அவரின் இவ்ளோ பிரச்சினையிலும் இன்று பிரகாசமாய் இருக்கும் அவரை கண்டிப்பாய் தலையாய் அல்லாமல் ஓல்டு ரேஸ்மேட் அஜித்குமாராய் பிடிக்கும் என்பதில் மாற்றமில்லை.