September 18, 2021

”விவேகம்” தல தன் ரசிகர்களுக்கு சொல்லும் அட்வைஸ்!

அஜித் நடிக்க, அனிருத் இசையமைப்பில் உருவாகும் படத்தை இயக்கி வருகிறார் சிவா.இதன் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வழக்கம் போல் நள்ளிரவில் வெளியானது. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு வீரம், வேதாளம் என்ற டைட்டில்களை தொடர்ந்து இந்த புதிய படத்தின் டைட்டிலும் ‘வி’ என்ற எழுத்தில் தொடங்கவிருக்கும் என்று அவர் ரசிகர்கள் வட்டாரம் முன்னரே குறிப்பிட்டிருந்தது போல் விவேகம் என பெயரிட்டுள்ளனர்.

ajith feb 2

இதில் அஜித் ஜேம்ஸ்பாண்ட் பாணியில் அரசு உளவாளியாக நடிக்கிறார் என்றும் இப்படம் மொத்தம் மூன்று பாகங்களாக உருவாக உள்ளது என்றும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று வெளியான ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜித் சிக்ஸ்பேக் கட்டுடல் வைத்து கம்பீரமாக சட்டை இல்லாமல் காட்சி தருகிறார். அவரின் தலைக்கு மேல் BELIVEVE IN YOURSELF என்று சப்டைட்டில் வைத்துள்ளனர்.

அந்த வார்த்தைகளில் BE YOU என்ற வார்த்தையை மட்டும் தனியாக தெரியும்படி போல்ட்டாக டிசைன் செய்துள்ளனர்.அதாவது… உன்னை நீ நம்பு என்றும், நீயாக இரு என்று பொருள்படும் படி தெரிவித்துள்ளனர்.இது தன் ரசிகர்களுக்கு அஜித் செய்த அட்வைஸ் ஆக கருதப்படுகிறது.