November 29, 2021

தமிழ் சினிமாவோ.., உலகச் சினிமாவோ காமெடிக்கும், பேய் கதைக்கும் என்றும் டிமாண்ட் உண்டு.. அது ரசிகர்களுக்கும் பிடித்து விட்டால் தலையில் வைத்து கொண்டாடுவது வழக்கம். அப்படியாப் ப்பட்ட பேய் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயரெடுத்த நயன்தாரா- வை இரட்டை வேடத்தில் நடிக்க வைக்கும் கதை இது என்று சொன்னதும் புரொடியூசர் தொபுக்கடீர் என்று விழுந்திருப்பதில் வியப்படைய ஒன்றுமே இல்லை. அதே சமயம் இப்படி கிடைத்த வாய்ப்பில் ஜஸ்ட் ஒரு பேய் படம் என்பதால், ஒரேடியாக திகில் காட்சிகள், திடுக்., திடுக் சம்பவங்கள் என்று படத்தைக் கடத்தாமல் ,நவீன மயமாகி விட்ட சோஷியல் மீடியாக்களின் போக்கு மற்றும் பணிப் பெண்களின் நிலைமை போன்றவைகளை அலசி சகலரையும் யோசிக்க வைக்க முயன்றிருக்கும் இயக்குநர் & டீம்-முக்கு முதலில் ஒரு சபாஷ்.

கதை என்னவென்றால் யமுனா( நயன்தாரா) ஒரு ஆக்டிவ் ஜர்னலிஸ்ட். ஏழு கழுதை வயசான அவருக்கு மாப்பிள்ளை பார்க்க, பெற்றோர் முடிவெடுக்க அதுப் பிடிக்காமல் தன் பாட்டி வீட்டுக்கு செல்கிறார். அங்கு யோகிபாபு வீட்டு வேலை செய்கிறார். அதே சமயம் பொழுதும் போக வேண்டும். கூடவே வருமானமும் வர வேண்டும் என்று கணக்குப் போட்டு ரொம்ப யோசித்து அந்த ஊரில் பேய் இருப்பது போல சில பல காட்சிகளை உருவாக்கி, யூடியூப் சேனலில் போட்டு காலத்தை ஓட்டு கிறார். துணைக்கு அவரது பாட்டி(குலப்புலி லீலா) மற்றும் யோகி பாபு கோ ஆப்ரேட் செய்வதன் மூலம் யமுனாவின் யூடியுப் சேனல் மிகவும் பிரபலமாகிறது.

அதே நேரத்தில் அதே ஊரில் ஒரு நிஜ பேய் யமுனாவை கொலை செய்ய துடிக்கிறது. இதனிடையே சென்னையில் சிலர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ளும் மர்மமான மரணங் கள் அரங்கேற, அந்த மர்மத்தின் பின்னணியை அறிய கலையரசன் முயற்சிக்கிறார் அப்போது இதையெல்லாம் செய்வது தன்னோட கருப்புக் காதலி பவானியின் ஆத்மா என்பதை அறிந்துக் கொள்வதோடு, அந்த ஆத்மா-தான் சிகப்பு நயன்தாராவையும் கொலை செய்யும் முடிவில் இருப்பதையும் அறிந்துக் கொள்கிறார். இப்படி பவானி (கறுப்பு நயன்தாரா) பேய் யமுனா (சிகப்பு நயன்தாரா)வை ஏன் பழிவாங்க துடிக்கிறது? என்பதெல்லா வழக்கம் போல் பிளாஷ் பேக்கில் சொல்லப்படுகிறது.

அதாவது கருப்பு நயன் பவானி பிறந்தது முதல் சந்தித்த துயரங்கள் கருப்பு வெள்ளையில் திரையில் வருகிறது. அவர் எப்படி இறந்தார்? அவர் ஏன் நயன்தாராவை கொல்ல நினைக்க காரணம் என்ன? என்பதை எமோஷனலாக காட்டுகிறது மீதி படம்.

இரண்டு கதாபாத்திரங்களில் வரும் நயன்தாரா நடிப்பில் தனது அனுபவத்தால் தனி முத்திரையை பதித்துள்ளார். குறிப்பாக பவானி என்கிற அந்த கருப்பான பெண் வேடத்தில் நயன் தனிக் கவனம் பெறுகிறார். ஸ்டார் ஹோட்டலில் சட்டையுடன் பணியாற்றும் வேடத்தில் துவங்கி கிளைமாக் ஸில் திருமண கோலத்தில் இருக்கும்போது கதறி அழுவது வரை பல காட்சிகளில் கேரக்ட்ராகவே வாழ்ந்திருக்கிறார். யோகி பாபுவின் காமெடி ரசிக்கும் அளவுக்கு இல்லை. ஜெயப்பிரகாஷ், மீரா கிருஷ்ணன், குலபுல்லி லீலா ஆகியோர் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். கலையரசனுக்கு பொருத்தமான அழுத்தமான வேடம், அதை நீட்டாக கையாண்டு மனதில் நிற்கிறார்..

படத்திற்கு இரண்டு கதாபாத்திரத்தில் வரும் நயனைப் போலவே ஒளிப்பதிவு செய்துள்ள சுதர்சன் சீனிவாசனும், இசை அமைத்துள்ள சுந்தரமூர்த்தியும் ஐராவின் மிகப் பெரும் பலம்.

வழக்கமான பேய் கதைதான். இதில் அது சரி இல்லை., இது நொட்டை ., எதுவுமே ஒட்டவில்லை என்றெல்லாம் சிலர் சொல்லலாம்தான்.. ஆனால் தமிழ் சினிமா என்பது ஜஸ்ட் ஒரு எண்டெர்ய் மெண்ட் மீடியா என்பதை புரிந்தவர்கள் ரசிக்கும் படமிது என்பது மட்டுமே உண்மை.

மார்க் 3.25 / 5