இலங்கையில் எமெர்ஜென்சி நீட்டிப்பு!

இலங்கையில் எமெர்ஜென்சி நீட்டிப்பு!

இலங்காபுரி, லங்கா, நாகதீபம், தர்மதீபம், லங்காதுவீபம், சின்மோண்டு, சேலான், தப்ரபேன், செரண்டிப் என பல்வேறு பெயர்களாலும் அழைக்கப்பட்ட எம் இலங்கை நாடு எழில் கொஞ்சும் ஓர் அழகிய தீவு இப்போது விழி பிதுங்கி இருக்கிறது. ஆம்..  இலங்கையில் அமலில் உள்ள அவசர நிலையை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பதாக அதிபர் சிறிசேனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிரிட்டன் அரசாங்கத்தின் ஆட்சிப் பிடியிலிருந்து விடுபட்டு சுதந்திரம் பெற்ற இலங்கை 1972ஆம் ஆண்டு குடியரசாகவும் பிரகடனப்படுத்தப்பட்ட காலம் தொட்டே அடுத்தடுத்து சிரமங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனையின்போது 3 தேவாலயங்கள், 4 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த தாக்குதல் களில் இந்தியர்கள் உள்பட 258 பேர் உயிரிழந்தனர். 400-க்கும் அதிகமானவர்கள் படுகாய மடைந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு காரணமான தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்தது.

இச்சம்பவம் தொடர்பாக பெண்கள் உள்பட சுமார் 100 பேர் கைது செய்து விசாரணை காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். விசா காலம் முடிந்தும் இலங்கையில் தங்கி இருந்த சுமார் 200 இஸ்லாமிய போதகர்கள் உள்பட 600 வெளிநாட்டினர் வெளியேற்றப் பட்டனர்.ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் அவசரநிலை சட்டத்தை பிரகடனப்படுத்தி இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த அவசரநிலை உத்தரவைமேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கும் அரசு அறிவிக்கையில் மைத்ரி பாலா சிறிசேனா மே மாதம் 22-ம் தேதி கையொப்பமிட்டார். கடந்த மாதம் இறுதியில் செய்தியாளர் களுக்கு பேட்டியளித்த சிறிசேனா, நாட்டில் சட்டம்-ஒழுங்கு 99 சதவீதம் அளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகவும், அவசரநிலை சட்டத்தை இனியும் நீட்டிக்கும் நிலை இனி ஏற் படாது என்று நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில், பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை சட்டத்தை மேலும் நீட்டிக்கும் உத்தரவில் அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா இன்று கையொப்ப மிட்டுள்ளார்.  இதுகுறித்து ‘வெடிகுண்டு தாக்குதலில் நேரடியாக தற்கொலைப் படையினர் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாக பாதுகாப்பு படையினரும் தெரிவித்தனர்.  இருப்பினும் குண்டுவெடிப்பு குறித்து முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டும் அலட்சியாக செயல்பட்ட ஐஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலருக்கு எதிராக கிரிமினல் விசாரணை நடத்தப்பட்டு வருவதால், அவசர நிலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!