December 5, 2021

கொரோனாவிற்கு பிறகு இந்தியாவைப் புனரமைப்பது எப்படி? -கமல்ஹாசன்

பிரதமர் மோடிக்கு நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் சில நாட் களுக்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில், “ஒரு பொறுப்புள்ள அதே நேரத்தில் ஏமாற்றமடைந்த ஒரு குடிமகனாக இந்த கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுகிறேன் பிரதமர் மோடி அவர்களே. கடந்த மார்ச் 24 ஆம் தேதி, நாடு முழுவதற்கும் உடனடி ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தினீர்கள். பணமதிப்பிழப்பு ஸ்டைலில் இதைச் செய்தீர்கள். எனக்கு தற்போதைய அறிவிப்பு அதிர்ச்சி கொடுத்தாலும் உங்களை நம்பினேன். பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி அறிவித்த போதும் உங்களை நான் நம்பினேன். ஆனால், நான் நினைத்தது தவறு என்று காலம் எனக்கு சுட்டிக்காட்டியது. மீண்டும் எனக்கு காலம் அதையே சுட்டிக்காட்டியுள்ளது.

 

எனது மிகப் பெரிய பயமே, பணமதிப்பிழப்பின்போது செய்த அதே மாதிரியான பிழை, இன்னும் பெரிய அளவில் செய்யப்படுகிறதோ என்பதுதான். மிகவும் வசதி படைத்த மக்களிடம் விளக்கு ஏற்றுங்கள் என்று நீங்கள் கோருகிறீர்கள். பால்கனியில் நீங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வசதியானவர்கள் விளக்கு ஏற்றியபோது, ரொட்டி செய்யக் கூட எண்ணெய் இல்லாமல் ஏழை, எளிய மக்கள் கஷ்டப்படுகிறார்கள். என்று பல விஷயங்களை சுட்டிக்காட்டி ஒரு கடிதத்தை எழுதினார். அவரின் இந்த கடிதத்திற்கு பல எதிர்ப்புகளும் அதே சமயம் வரவேற்பும் கிடைத்தது.

தற்போது இரண்டாம்கட்ட ஊரடங்கு நிலவும் இந்த நேரத்தில், இன்று முதல் சில சிறு தொழில் களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று பிரதமர் கூறிய இந்த நிலையில்,  கமல் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் அடுத்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். “கொரோனா விற்கு பிறகு இந்தியாவைப் புனரமைப்பது எப்படி?”, என்ற தலைப்பில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை கீழ்க்காணும் அவருடைய ட்விட்டர் பக்க லிங்கில் பார்க்கலாம்