தமிழ்நாட்டுலே அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் அதிமுக, திமுக, தேமுதிக மட்டுமே!

தமிழ்நாட்டுலே அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் அதிமுக, திமுக, தேமுதிக  மட்டுமே!

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் புதிது புதிகாக கட்சிகளை தொடங்கி, தேர்தல் கமிஷனில் பதிவு செய்து கொள்வது வாடிக்கைதான்; அதன் பின், அக்கட்சியை முறைப்படி நடத்துவதே இல்லை. அப்படி ஆரம்பித்த கட்சிகளின் தலைவர்கள் அண்மையில் வரும் தேர்தலில் மட்டும் ஏதாவது ஆதாயத்திற்க்காக ஏதாவதொரு கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துக் கொள்கிறார்கள். ஆக இப்படி ஓர் பிசினஸே நடப்பதன் காரணமாக கட்சிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்தபடிதான் உள்ளது. இந்நிலையில் தேர்தல் கமி‌ஷன் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளின் புதிய பட்டியலை இன்று வெளியிட்டன. அதன்படி தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் அதிமுக, திமுக, தேமுதிக மட்டுமே என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் பதிவு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 154 கட்சிகள் தமிழகத்தில் இருப்பதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

நம் நாட்டில் 56 தேசிய, மாநில கட்சிகள் உட்பட மொத்தம் 1,866 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப் பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 154 கட்சிகள் உள்ளன. அவற்றில் 3 கட்சிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு, அங்கீக ரிக்கப்பட்ட கட்சிகள் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவை அதிமுக, திமுக, தேமுதிக மட்டுமே இடம் பெற்றுள்ளனர். மற்ற கட்சிகள் எல்லாம் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாதவையாகும்.

இந்த கட்சிகள் தேர்தலில் சொந்தமான சின்னத்துடன் போட்டியிட முடியாதவை. தேர்தல் ஆணைய குழுதேர்வு செய்துள்ள சின்னங்களில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுத்து அந்த சின்னத்தில்தான் போட்டியிட முடியும். தற்போதைக்கு மொத்தம் 84 சின்னங்கள் உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கான அந்தஸ்து பெற வேண்டுமானால், மாநில அளவில் அல்லது தேசிய அளவில் குறிப்பிட்ட சில அம்சங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இந்தக் கட்சிகள் பதிவு செய்திருந்தாலும், அங்கீகரிக்கப் படாதவை. இந்த கட்சிகள் தேர்தலில் சொந்தமான சின்னத்துடன் போட்டியிட முடியாது. தேர்தல் ஆணைய குழு தேர்வு செய்துள்ள சின்னங்களில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுத்து அந்த சின்னத்தில்தான் போட்டியிட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!