அதிமுக பொதுக்குழு விவகாரம் : சுப்ரீம் கோர்ட் சொன்னது என்ன? -இன்பதுரை விளக்கம்!

அதிமுக பொதுக்குழு விவகாரம் : சுப்ரீம் கோர்ட் சொன்னது என்ன? -இன்பதுரை விளக்கம்!

போன ஜூன் மாதம் 23-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், நீதிமன்ற உத்தரவை மீறி ஈபிஎஸ் தரப்பு நடந்து கொண்டதாக, ஓபிஎஸ் ஆதரவாளர் சண்முகம் ஈபிஎஸ் தரப்பு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ள நிலையில், முன்னதாக 23 தீர்மானங்கள் தவிர வேறு தீர்மானங்கள் எதுவும் நிறைவேறக் கூடாது என்ற சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், அதிமுக உட்கட்சி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிட முடியாது. பொதுக்குழுவுக்கு நாங்கள் தடை விதிக்க முடியாது, சென்னை ஐகோர்ட்ஒருநபர் அமர்வுதான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும். முன்னதாக இருநபர் அமர்வின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது..!

இது குறித்து இந்த வழக்கில் ஈபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இன்பதுரை வழக்கு விசாரணைக்கு பிறகு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னை ஐகோர்ட் டிவிஷன் பென்ச் வழங்கிய அதிகாலை தீர்ப்புக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்தோம்.. இப்போது சுப்ரீம் கோர்ட் என்ன தீர்ப்பு வழங்கி இருக்கிறது என்றால் 11-7-2022 அன்று நடக்க இருக்கிற பொதுக்குழுவை நீங்கள் நடத்திக் கொள்ளலாம் (மே கோ ஆன் )என்ற வார்த்தையை உச்சரித்தாலே நடத்திக்கொள்ளலாம். அதற்கு தடையில்லை என்று ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. சென்னை ஐகோர்ட் டிவிஷன் பென்ச் வழங்கிய தீர்ப்பு அந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறார்கள். அதோடு சேர்ந்து அந்த தீர்ப்பின் அடிப்படையில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கும் தடை வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும் ஒரு உட்கட்சி விவகாரத்தில் எப்படி நீதி மன்றம் தலையிட முடியும் என்ற கேள்வியை நீதி அரசர்கள் எழுப்பினர்.. இறுதியாக வழங்கிய தீர்ப்பில், வருகிற 11ஆம் தேதி நடைபெற இருக்கிற பொதுக்குழுவை நடத்தி கொள்ளலாம்.. அதாவது ஆங்கிலத்தில் MAY GO ON என்று கூறியிருக்கிறார்கள். அதனால் நாளை நடைபெற இருந்த அந்த கோர்ட் அவமதிப்பு வழக்குக்கும் தடை என்று புரிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts

error: Content is protected !!