January 29, 2022

கடற்படையில் 38 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஹரிகுமார் தளபதி ஆனார்!

ந்தியாவின் புதிய கடற்படை தளபதியாக ஹரிகுமார் இன்று பதவியேற்றார். அவருக்கு கடற்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்து வரவேற்றனர்.

இந்திய கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் கே.பி.சிங்கின் பதவிக்காலம் முடிவுறுவதை அடுத்து துணை அட்மிரல் ஹரிகுமார் புதிய தளபதியாக நியமனம் செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள தெற்குபிளாக்கில் நடந்த விழாவில், அவர் தளபதியாக பொறுப்பேற்றார். அவரை கடற்படை அதிகாரிகள் வரவேற்றனர்.

38 ஆண்டு பணி அனுபவம்

தொடர்ந்து வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பதவியேற்பு விழாவில் ஹரிகுமாரின் தாயார் ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார். புதிய கடற்படை தளபதி ஹரிகுமார் கூறும்போது, இது எனக்கு பெருமை தரும் பதவியாகும். எனது முன்னாள் அதிகாரிகளின் நடவடிக்கைகளை பின்பற்றி மேலும் சிறப்பாக பணியாற்றுவேன் என்றார். ஹரிகுமார் பல்வேறு விருதுகளை பெற்றவர். இவர் கடற்படையில் 38 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.