• Latest
  • Trending
  • All
சென்னை நிரந்தரமாக வெள்ளக்காடாக போகுது!- பூவுலகின் நண்பர்கள் எச்சரிக்கை

சென்னை நிரந்தரமாக வெள்ளக்காடாக போகுது!- பூவுலகின் நண்பர்கள் எச்சரிக்கை

2 weeks ago
ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று!

ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று!

13 hours ago
வன்முறைக் களமான டெல்லி :  கண்ணீர்ப் புகை, தடியடி, உயிரிழப்பு! – வீடியோக்கள்!

வன்முறைக் களமான டெல்லி : கண்ணீர்ப் புகை, தடியடி, உயிரிழப்பு! – வீடியோக்கள்!

13 hours ago
சென்னை மெரினா கடற்கரையில் 72வது குடியரசு தின விழா கோலாகலம்!

சென்னை மெரினா கடற்கரையில் 72வது குடியரசு தின விழா கோலாகலம்!

15 hours ago
மத்திய அரசு அறிவித்துள்ள  பத்ம விருதுகள் – முழுப் பட்டியல்!

மத்திய அரசு அறிவித்துள்ள பத்ம விருதுகள் – முழுப் பட்டியல்!

1 day ago
பழைய வாகனங்களுக்கு பசுமை வரி- மத்திய அமைச்சர்  ஒப்புதல்

பழைய வாகனங்களுக்கு பசுமை வரி- மத்திய அமைச்சர் ஒப்புதல்

2 days ago
தமிழில்  காமெடி, அட்வெஞ்சர்,  & திரில்லர் பாணியிலான முதல் படம் ‘ட்ரிப்’!

தமிழில் காமெடி, அட்வெஞ்சர், & திரில்லர் பாணியிலான முதல் படம் ‘ட்ரிப்’!

2 days ago
வாக்காளர் அடையாள அட்டையை இனி செல்போன் மூலமாகவே பெறலாம்!

வாக்காளர் அடையாள அட்டையை இனி செல்போன் மூலமாகவே பெறலாம்!

2 days ago
ஸ்பேஸ் எக்ஸ் – 143 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி சாதனை! வீடியோ!

ஸ்பேஸ் எக்ஸ் – 143 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி சாதனை! வீடியோ!

2 days ago
மகனுக்கு கட்டளையிடுங்க தாயே!- மோடி அம்மாவுக்கு விவசாயி கடிதம்!

மகனுக்கு கட்டளையிடுங்க தாயே!- மோடி அம்மாவுக்கு விவசாயி கடிதம்!

3 days ago
கப்பல்படை பயிற்சி அகாடமியில் கல்வி வாய்ப்பு!

கப்பல்படை பயிற்சி அகாடமியில் கல்வி வாய்ப்பு!

3 days ago
பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணைக் கட்ட முயலும் சீனாவால் பதட்டம்!

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணைக் கட்ட முயலும் சீனாவால் பதட்டம்!

3 days ago
தமிழக ஆட்சியாளர்களை தலைகீழாக மாற்ற முயலும் மோடி- ராகுல் பேச்சு – வீடியோ!

தமிழக ஆட்சியாளர்களை தலைகீழாக மாற்ற முயலும் மோடி- ராகுல் பேச்சு – வீடியோ!

3 days ago
  • Home
  • செய்திகள்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • சின்னத்திரை
    • புகைப்படம்
    • டிரைலர்
  • எடிட்டர் சாய்ஸ்
    • அலசல்
    • ஆய்வு முடிவு
    • சர்ச்சை
    • ஆந்தை யார்!
    • சொல்றாங்க
    • டெக்னாலஜி
    • வழிகாட்டி
      • கல்வி
      • வேலை வாய்ப்பு
  • ரவி நாக் பகுதி
  • வணிகம்
    • டூரிஸ்ட் ஏரியா
    • மறக்க முடியுமா
  • டிமி பக்கம்
Wednesday, January 27, 2021
  • Login
AanthaiReporter.Com
  • Home
  • செய்திகள்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • சின்னத்திரை
    • புகைப்படம்
    • டிரைலர்
  • எடிட்டர் சாய்ஸ்
    • அலசல்
    • ஆய்வு முடிவு
    • சர்ச்சை
    • ஆந்தை யார்!
    • சொல்றாங்க
    • டெக்னாலஜி
    • வழிகாட்டி
      • கல்வி
      • வேலை வாய்ப்பு
  • ரவி நாக் பகுதி
  • வணிகம்
    • டூரிஸ்ட் ஏரியா
    • மறக்க முடியுமா
  • டிமி பக்கம்
No Result
View All Result
AanthaiReporter.Com
No Result
View All Result
Home Running News

சென்னை நிரந்தரமாக வெள்ளக்காடாக போகுது!- பூவுலகின் நண்பர்கள் எச்சரிக்கை

January 13, 2021
in Running News, எடிட்டர் ஏரியா, சர்ச்சை
0
514
SHARES
1.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

அதானி நிறுவனத்திற்குச் சொந்தமான எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகத்தை 53ஆயிரம் கோடி செலவில் 6110 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய முனையும் நிலையில் சென்னையை நிரந்திரமாக வெள்ளக்காடாக மாற்றப்போகும் அதானி துறைமுக விரிவாக்கத்தை கைவிடும்படி பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா காட்டுப்பள்ளி கிராமத்திற்கு அருகில் காமராஜர் துறைமுகத்திற்கு வடக்கே அமைந்துள்ளதுதான் காட்டுப்பள்ளி துறைமுகம். அதானி நிறுவனத்திற்கு சொந்தமான இந்த துறைமுகம் தற்போது ஆண்டிற்கு 24.65 மில்லியன் சரக்குகளை கையாளும் திறம் கொண்டது.

இத்துறைமுகத்தை துறைமுகத்தை 53 ஆயிரம் கோடி செலவில் ஆண்டுக்கு மொத்தமாக ஆண்டிற்கு 320 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் அளவிற்கு விரிவாக்கம் செய்ய அதானி துறைமுக நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இந்த விரிவாக்கப் பணிகளுக்கான சுற்றுச்சூழல் மற்றும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதிகோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் வல்லுனர் மதிப்பீட்டுக்குழுவிடம் கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதானி நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.

இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த வல்லுனர் மதிப்பீடுக்குழு விரிவாக்கம் மேற்கொள்ளப் படவிருக்கும் பகுதியின் தற்போதைய நிலப்பயன்பாடு, கடலோர ஒழுங்காற்று மண்டல திட்டம் 2018ந் படி நிலத்தின் தன்மை என்னவாக உள்ளது, விரிவாக்கப் பணிகளுக்காக பயன்படுத்தப் படவுள்ள கொசஸ்தலையாற்றின் பரப்பு எவ்வளவு?, விரிவாக்கம் மேற்கொள்ளப்படவிருக்கிற நிலத்தின் உரிமையாளர்கள் யார் என்கிற விபரம் மற்றும் விரிவாக்கம் மேற்கோள்ளப் பட விருக்கிற இடத்தின் அனைத்துப் திசைகளிலும் 10கிலோமீட்டர் தூரத்திற்கு வசிக்கும் மக்கள் தொகை, எவ்வளவு இத்திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய போன்ற விபரங்களை அறிய மூன்று பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்திருந்தது.

இந்தக் குழுவானது கடந்த ஜூன் மாதம் எண்ணூருக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய பின்னர் சில நிபந்தனைகளோடு இந்திட்டத்திற்கு அனுமதி வழங்கலாம் என அறிக்கை சமர்ப்பித்து இருந்ததன் அடிப்படையில் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மேற்கொள்வதற்கான ஆய்வு எல்லைகளை மத்திய சுற்றுச்சூழல் துறை 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கியது.அதனடிப்படையில் தற்போது விரிவான திட்ட அறிக்கை மற்றும் சுற்றுச்சூழல் தாக்க ஆய்வுகளை அதானி நிறுவனம் தயாரித்துள்ளது. அதன்படி மொத்தமாக 6,110 ஏக்கரில் இத்துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. அதில் 336 ஏக்கர் நிலம் ஏற்கெனவே கையகப்படுத்தப்படவுள்ளது.2,290 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமானது. 1,514 ஏக்கர் நிலம் தனியாருக்கு சொந்தமானது.மீதமுள்ள 1,966 ஏக்கருக்கு கடற்பகுதியானது மணல் கொண்டு நிரப்பி நிலப்பகுதியாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ :

சென்னைக்கு அருகாமையில் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள L&T நிறுவனத்திற்குச் சொந்தமானத் துறைமுகம் 2012ம் ஆண்டில் இருந்து இயங்கிவந்தது. அதானி குழுமம் கடந்த 2018ம் ஆண்டு இந்தத் துறைமுகத்தின் 97% பங்குகளை ரூ.1950 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது.

330 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த துறைமுகத்தை 6,100 ஏக்கர் அளவிற்கு விரிவாக்கம் செய்யவதற்காக சுற்றுசூழல் அனுமதி கோரி அதானி குழுமம் விண்ணப்பித்துள்ளது. மேலும் இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதன் மூலம் ஏற்படவிருக்கும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையையும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இத்திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தினை தமிழக அரசு வருகின்ற ஜனவரி 22ம் தேதி நடத்துவதாக அறிவித்துள்ளது. இத்திட்டதிற்கான சுற்றுச்சூழல் ஆய்வறிக்கையை ஆராய்ந்தபின் இத்திட்டதின் காரணமாக சூழலுக்கு பாதிப்புகளே அதிகமாக அமைய வாய்புள்ளதாக தெரிகிறது.

அவற்றில் முக்கியமான பாதிப்புகளாக கீழ்கண்ட சிலவற்றைக் குறிப்பிடலாம்.

1. நில ஆக்கிரமிப்பு :

இத்திட்டத்திற்கு தேவையான 6100 ஏக்கர் நிலப்பரப்பில், 1882 ஏக்கர் அரசு நிலமாக உள்ளது, 1930 ஏக்கர் மக்களிடமுள்ளது. இவற்றை கையகப்படுத்தப்போகும் நிலையில் ஏற்கனவே துறைமுகம் அமைந்துள்ள 330 ஏக்கர் போக, சுமார் 6 கிமீ வரையிலான கடல் பகுதிகளில் மணலை கொட்டி சுமார் 2000 ஏக்கர் கடல் பரப்பையும் ஆக்கிரமிக்க திட்டமிட்டுள்ளனர்.

2. நில பயன்பாட்டில் மாற்றம் :

இத்திட்டத்திற்காக, நில மீட்பு (Sea Reclamation) என்ற பெயரில் கருங்காளி சேறு, ஆலமரம் சேறு, லாக்கு சேறு, களாஞ்சி சேறு, கோட சேறு போன்ற கரைக்கடல் சேற்றுப் பகுதிகளில் சுமார் 6கிமீ நீளத்திற்கு 2000 ஏக்கர் பரப்பளவிற்கு மணல் கொட்டப்படும். கடல் பகுதியை மணல்கொட்டி நிரப்பி அதை அதன் இயல்பிலிருந்து மாற்றுவது என்பது திரும்ப சரிசெய்ய முடியாத மிகப்பெரிய சூழலியல் பாதிப்புகளை உண்டாக்கும்.

3. மீன் வளம் & மீனவர் வாழ்வாதாரம் பாதிப்பு :

இப்பகுதிகள் முழுவதும் சேற்றுத் திட்டுகளைக் கொண்ட, நீர் ஆழம் குறைவான கடல் பகுதிகள் ஆகும். இங்குதான் அதிகமான இறால், நண்டு, நவர மீன், கெழங்கான், கானாங்கெளுத்தி போன்ற கடலுணவுகள் அதிகம் கிடைக்கும். இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மீன்வளம் வெகுவாகக் குறைந்து ஆப்பிரஹாம்புரம், களஞ்சி, கருங்காளி, காட்டூர், வயலூர், காட்டுப்பள்ளிகுப்பம் உள்ளிட்ட 80 தமிழக ஆந்திர மீனவ கிராமங்களைச் சேர்ந்த 1,00,000க்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

4. சூழலியல் அபாயம்:

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உவர்நீர் ஏரியான பழவேற்காடு ஏரி இத்திட்டம் வரவிருக்கும் காட்டுப்பள்ளி பகுதிக்கு வடக்கில் அமைந்துள்ளது. தெற்கில் எண்ணூர் கழி முகமும், மேற்கில் பக்கிங்காம் கால்வாய் சூழப்பட்டிருப்பதால் இது சூழலியல் முக்கியத் துவம் வாய்ந்த பகுதியாக CRZ-1 (critical for maintaining ecosystem of coast) அறிவிக்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதின் மூலமாக சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதி அழிவதற்க்கான வாய்ப்புள்ளது.

5. வெள்ள அபாயம் :

மழைக் காலங்களில் பழவேற்காடு ஏரியும், கொற்றலை ஆறும், எண்ணூர் கழிமுகமும் தான் “வெள்ள வடிகாலாகச்” செயல்பட்டு சென்னையைக் காக்கின்றன. ஏற்கனவே, சென்னை காமராஜர் துறைமுகம் விரிவாக்கத்தினாலும், எண்ணூர் துறைமுக உருவாக்கத்தின் விளைவாகவும், கொற்றலை ஆற்றுக்கும் கடலுக்கும் இடையே சில கிமீ.களாக இருந்த கடற்கரை தற்பொழுது சில நூறு மீட்டர்களாக சுருங்கியுள்ளது. காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கும் பழவேற்காட்டுக்கும் இடையே வெறும் 8 கிலோமீட்டர் தூரமே எஞ்சி உள்ள இந்நிலையில், இந்தத் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் நடைபெற்றால் மீதமிருக்கும் கடற்கரையும் அரிக்கப்பட்டு கொற்றலை ஆறு கடலோடு கலந்துவிடும் அபாயம் உள்ளது. அதன் பின், சென்னை வெள்ளத்தில் மிதப்பதை யாராலும் தடுக்க முடியாது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 35 லட்சம் மக்கள் வெள்ள அபாயத்தில் தள்ளப்படுவார்கள்.

6. கடல் அரிப்பு :

ஏற்கனவே சென்னையில் உருவாகியிருந்த காமராஜர் துறைமுகம், எண்ணூர் துறைமுகங்களின் விளைவாக எண்ணூரில் பல கிராமங்கள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. 2012ம் ஆண்டு காட்டுப்பள்ளி துறைமுகம் வந்த பின்னர் சாத்தான்குப்பம் கிராம்ம் அப்புறப்படுத்தப்பட்டது. கோரைக்குப்பம், வைரவன்குப்பம் உள்ளிட்ட 13 கிராமங்கள் கடலுக்கு அருகில் வந்துவிட்டன. தற்பொழுது இருக்கும் காட்டுப்பள்ளி துறைமுகம் மட்டும் அறிவித்தவாறு 20 மடங்கு விரிவாக்கம் செய்யப்பட்டால் பல மீனவ கிராமங்கள் கடலுக்குள் போவதோடு பழவேற்காடு பகுதியே கடலரிப்பால் கடுமையாக பாதிக்கப்படும்.

7. கடல் நீர் உட்புகுதல்:

கண்மூடித்தனமான தொழிற் வளர்ச்சி திட்டங்களின் காரணமாக ஏற்கனவே எண்ணூர் மற்றும் பழவேற்காடு பகுதிகள் அதிக சூழல் சீர்கேட்டால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. காலநிலை மாற்றம், கடல்நீர்மட்ட உயர்வு, கடல்நீர் உட்புகுதல், அதிகரிக்கும் இயற்கை சீற்றங்களாலும் (Extreme Climatic Events) சென்னை தொடர்ந்து ஆபத்துகளை எதிர்கொண்டிருக்கும் நிலையில், இத்திட்டத்தினை நடைமுறைப் படுத்தினால் மேலும் சூழல் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாகப் பழவேற்காடுப் பகுதியில் இத்திட்டத்தின் மூலம் கடல் நீர் உட்புகுதல் மேலும் அதிகரிக்கும். இதனால் அப்பகுதி விவசாய நிலங்கள் விவசாயம் செய்ய முடியாத அளவிற்கு பாதிக்கும்.

8. உயிர் பன்மைய அழிவு:

இத்திட்டத்தின் மூலமாக என்னூர் – பழவேற்காடு பகுதி இயற்கை சூழலும், அதன் உயிர் பன்மயமும் அழியக்கூடிய வாய்ப்புள்ளது. மீன் வளம் அழிவதினால் அப்பகுதி மீனவர்கள் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும். கடலும், பழவேற்காடு ஏரியும் சங்கமிக்கும் முகத்துவாரத்தின் வழியாக, ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை கடல் நீர் ஏரிக்கும்; அடுத்த, ஆறு மணிநேரம் ஏரி நீர் கடலுக்கும் செல்லும். கடல் வாழ் உயிரினங்கள், நீர் ஏற்றத்தின் போது, ஏரிக்குள் நுழைவதும், இனப்பெருக்கம் செய்து விட்டு கடலுக்குள் வெளியேறுவதும் இங்கு இயற்கையாக நடக்கும் நிகழ்வு.

இதனால், இப்பகுதிகளில் பல்லுயிர் பெருக்கம் அதிகரித்து 160 வகையான மீன்கள், 25 வகையான மிதவை புழுக்கள், பலவகையான மெல்லுடலிகள், வெள்ளை இறால், சிங்கி, கோட்ரால், செமக்கை, வழிம்பு, பூச்சி ஆகிய இறால் வகைகளும், பச்சை கட்டு நண்டு, கோரக்கைகால் நண்டு, முக்கன் நண்டு ஆகியவையும் அதிகளவில் உற்பத்தியாகும் இடமாக திகழ்கிறது. இது மட்டுமல்லாமல் எண்ணெற்ற வலசைப் பறவை களுக்கும் இயல் பறவையினங்களுக்கும் வாழிடமாகப் பழவேற்காடுத் திகழ்கிறது. இங்கு பூநாரைகள், கூழக்கடாக்கள், கடற்காகங்கள், நாரைகள், கொக்குகள், பல்வேறு வகையிலான வாத்துகள் மற்றும் கழுகுகள் போன்ற நூற்றுகணக்கான வகை பறவைன்ங்கள் வாழ்கின்றன. இவ்வாறு செழிப்பான உயிர்ப்பன்மைக்கு ஆதாரமாக விளங்கும் பழவேற்காடு ஏரி வளர்ச்சி என்ற பெயரில் அழிவதை நாம் வேடிக்கை பார்க்கபோகிறோமா?

9. ஆரணி-கொற்றலை ஆறுகள் :

இப்பகுதிகளில் உள்ள உப்பளங்கள், சதுப்பு நிலங்கள், அலையாத்திக் காடுகள், ஆழம் குறைவான மற்றும் ஆழமான நீர்நிலைகள் ஆகிய அனைத்துமே இதனால் அழியும். இந்த இயற்கையான அமைப்புகள் ஆரணி-கொற்றலை ஆற்றின் நன்னீர்ப் பகுதிகளில் உவர்நீர்ப் புகாமல் தடுக்கின்றன. இதைச் செயற்கையாக மாற்றுவது சரிசெய்ய முடியாத மிகப்பெரிய பேரழிவுக்கு வழிவகுக்கும்.

10.பழங்குடி மக்களுக்கான ஆபத்து:

எண்ணூர்-பழவேற்காடு பகுதி என்பது இருளர் உள்ளிட்ட பல பழங்குடி சமூகங்களின் வாழ்விடமாக உள்ளது. இந்த நிலப்பரப்பில் கிடைக்கபெறும் மீன்வளம், இயற்கை வளங்களைக் கொண்டு தங்கள் தற்சார்பான வாழ்க்கையை அவர்கள் அமைத்து கொண்டுள்ளனர். குறிப்பாக அப்பகுதியில் கிடைக்கும் நன்னீர் ஊற்றை நீர் ஆதாரமாகக் கொண்டு தங்களின் வாழ்விடங் களை அமைத்து அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் அதானித் துறைமுகத் திட்டத்தினை நடை முறைப்படுத்தினால் பழங்குடியினரின் வாழ்வுமுறை முற்றிலுமாக சிதைக்கப்படும்.

துறைமுகங்களை கைப்பற்ற துடிக்கும் அதானி: நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டத்துக்குக் காரணமாக இருக்கும் அதானி குழுமம் விவசாயிகளோடு நில்லாமல் மீனவர்கள் வயிற்றில் அடிப்பதற்கும் முனைப்பு காட்டி வருகிறது. சாகர்மாலா திட்டத்தின் மூலம் நாடு முழுவதிலும் உள்ள துறைமுகங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன, அந்த வகையில் அதானி குழுமதிற்கு முந்த்ரா, தாஹேஜ், காண்ட்லா, ஹஸிரா, தம்ரா, மர்மகோவா, விழிஞ்சம், விசாகப்பட்டினம் ஆகிய 8 துறைமுகங்கள் தாரைவார்க்கபட்டுள்ளன.

இந்த நிலையில் தமிழக நிலப்பகுதியில் உள்ள துறைமுகத்தையும் அது சார்ந்த வர்த்தகத் தையும் அதானிக்கு ஒப்படைப்பதை சூழலியல் ரீதியாகவும் தமிழகத்தின் பொருளாதார நலன் அடிப்படையிலும் நாம் எதிர்க்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர்கள் என கூறப்படும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அதானி குழுமத்தின் இலாபவெறிக்காக தமிழ் நாட்டின் இயற்கை வளத்தையும், சுமார் 1,00,000 தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து , 35 லட்சம் தமிழக மக்களை வெள்ள அபாயத்தில் நிறுத்தும், இந்த காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை உறுதியுடன் தடுத்து நிறுத்துவோம்.

இந்த திட்டத்திற்கான மக்கள் கருத்து கேட்கும் கூட்டம் ஜனவரி மாதம் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. மக்களுக்கு திட்டத்தை பற்றி அறிந்துகொள்வதற்கு அதிக காலம் கொடுக்காததாலும், கொரோனா காலமாக இருப்பதாலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவது ஆபத்தில் முடிந்துவிடும், அதனால் இந்த மக்கள் கருத்துக் கேட்கும் கூட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் கோருகிறோம். சென்னையை நிரந்தரமாக வெள்ளக்காடாக மாற்றப்போகும் அதானி துறைமுக விரிவாக்கத்தை கைவிடும்படி தமிழக அரசிற்கு அழுத்தம் கொடுக்க எதிர் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும், சமூக இயக்கங்களையும் கேட்டுக்கொள்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளனர்.

மேலதிக தகவல்களுக்கு:- வீ.பிரபாகரன் 7395891230

Share206Tweet129Share51

Latest

ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று!

ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று!

January 27, 2021
வன்முறைக் களமான டெல்லி :  கண்ணீர்ப் புகை, தடியடி, உயிரிழப்பு! – வீடியோக்கள்!

வன்முறைக் களமான டெல்லி : கண்ணீர்ப் புகை, தடியடி, உயிரிழப்பு! – வீடியோக்கள்!

January 27, 2021
சென்னை மெரினா கடற்கரையில் 72வது குடியரசு தின விழா கோலாகலம்!

சென்னை மெரினா கடற்கரையில் 72வது குடியரசு தின விழா கோலாகலம்!

January 26, 2021
மத்திய அரசு அறிவித்துள்ள  பத்ம விருதுகள் – முழுப் பட்டியல்!

மத்திய அரசு அறிவித்துள்ள பத்ம விருதுகள் – முழுப் பட்டியல்!

January 26, 2021
பழைய வாகனங்களுக்கு பசுமை வரி- மத்திய அமைச்சர்  ஒப்புதல்

பழைய வாகனங்களுக்கு பசுமை வரி- மத்திய அமைச்சர் ஒப்புதல்

January 26, 2021
தமிழில்  காமெடி, அட்வெஞ்சர்,  & திரில்லர் பாணியிலான முதல் படம் ‘ட்ரிப்’!

தமிழில் காமெடி, அட்வெஞ்சர், & திரில்லர் பாணியிலான முதல் படம் ‘ட்ரிப்’!

January 25, 2021
வாக்காளர் அடையாள அட்டையை இனி செல்போன் மூலமாகவே பெறலாம்!

வாக்காளர் அடையாள அட்டையை இனி செல்போன் மூலமாகவே பெறலாம்!

January 25, 2021
ஸ்பேஸ் எக்ஸ் – 143 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி சாதனை! வீடியோ!

ஸ்பேஸ் எக்ஸ் – 143 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி சாதனை! வீடியோ!

January 25, 2021
AanthaiReporter.Com | Tamil Multimedia News Web

Copyright © 2017 JNews.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • சின்னத்திரை
    • புகைப்படம்
    • டிரைலர்
  • எடிட்டர் சாய்ஸ்
    • அலசல்
    • ஆய்வு முடிவு
    • சர்ச்சை
    • ஆந்தை யார்!
    • சொல்றாங்க
    • டெக்னாலஜி
    • வழிகாட்டி
      • கல்வி
      • வேலை வாய்ப்பு
  • ரவி நாக் பகுதி
  • வணிகம்
    • டூரிஸ்ட் ஏரியா
    • மறக்க முடியுமா
  • டிமி பக்கம்

Copyright © 2017 JNews.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In