“நடிகர்களும்.. அரசியலில் குதித்த பின் போன சாயமும்”!

இன்று சன்டே என்பதால் தத்துபித்து,,,,, இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது ” நடிகர்களும் அரசியலில் குதித்த பின் போன சாயமும்”………..நடிகர்கள் அரசியல் பிரேவசம் என்பது தமிழ் நாட்டு அரசியல் மட்டுமல்ல இந்திய அரசியலையும் தாண்டி அமெரிக்காவின் கலிஃபோர்னியா வரை ஒரு எழுதாத சடங்காகவே நடந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் ஏன் பல நடிகர்கள் நடிப்பில் சோபிப்பது இல்லை என்பது பற்றி தீர்க்க் ஆராய்வோமாக……………..!

பார்க்க பார்க்க பிடிக்கும், நடிக்க நடிக்க பிடிக்கும், என்ற கான்செப்ட் தான் சினிமாவின் கேரியருக்கு அடுத்த புரோமோஷன் அரசியல் என்பதை எழுதாத சடங்காக இருக்கும் காரணம் பரிச்சய முகம் மற்றும் அவர்களின் வெள்ளி திரை ஒழுக்க சிகாமணீ வேடங்களை பல பாமரர்கள் அப்படியே ரோல் மாடல் மென்டர் மற்றும் தொண்டர், குண்டர் என பல பரிமானங்களை உள் வாங்கி அவரை மக்கள் தலைவனாக மாற்றி, பதவி கொடுத்து பவர்ஃபுல் ஆக்கிவிடுவது வெறும் இந்திய அரசியல் மட்டுமல்ல அமெரிககவின் புரட்சி பிரசிடன்ட் ரொனால்ட் ரீகன் முதல் ரஜினி வரை வந்து நிற்பதின் காரணம் புகழ் போதையின் உச்சியில் இருக்கும் ஒரு சராசரி மனிதனின் அடுத்த எண்ணம் இந்த நாட்டை ஆள வேண்டும் என்பது தான் என்பது மறூக்க முடியாது.

ஆனா பல பேர் வந்தார்கள் வென்றார்கள் என்ற கான்செப்ட் ஏன் நிலையானது இல்லை என கேட்டால் அதற்க்கு காரணம், தெளிந்த நிலையில் உள்ள மக்களின் சிந்தனை தான். இன்று சூப்பர் ஸ்டாரின் அரசியல் கனவை பல பேர் ஆஹா ஓஹோ என்று அவர் அவர் இஷ்டத்துக்கு உலக ஜனாதிபதியாக கூட ஆக தகுதியானவர், எழுதி வச்சுக்கோ இவர் வந்தா மத்த எல்லா கட்சிகளும் தவிடு பொடி ஆகிவிடும்னு தன்னுடைய தொடையை தட்டி சபதம் செய்யும் ஆட்களுக்கு ஏனோ தெரியவில்லை மக்கள் தீர்ப்பு மகேஸன் தீர்ப்பு என்பது. ரஜினியோ சிவாஜியோ வெள்ளித்திரையின் சூப்பர் ஸ்டார்களே ஆனாலும் அவர்கள் படம் சரியில்லை எனில் அந்த படத்தையே பப்படம் ஆக்கும் கதை இன்று நேற்று அல்ல அது எம்ஜிஆருக்கே நடந்தது என்பது தான் உண்மை. இதையும் தான்டி அர்னால்ட் ஸ்வாஸ்னேக்கர் எப்படி வென்றார் என்பதை பார்ப்பதை விட இந்திய ஏன் தமிழக நடிகர்களை கம்பேர் செய்வோம்.

எம்ஜிஆர் என்பவர் கூட புதுசா ஒரு கட்சி ஆரம்பிச்சி தன் அரசியல் பயணத்தை தொடங்கியிருந்தார்னா இன்னைக்கு அவருக்கு மறைந்த பிறகும் கிடைக்கும் மரியாதை துளி அளவுக்கு கூட கிடைத்து இருக்காது. அவரால் 10% புகழை கூட அடையாமல் போயிருக்கும் ஏன் என்றால் அவரின் அடையாளமே திமுகாதான். அவர் அந்த கட்சியில் ஷோபித்து வெளியே வந்த போது எம்ஜிஆராக வரவில்லை ஒரு திமுக தற்காலிக அழிக்கும் சக்தியாகவே அவதரித்தார். பின்பு அவரின் சினிமா எக்ஸ்போஷர் மற்றும் மக்களின் ஒருவனாக அவர் சிந்தித்து செயல்பட்ட திறனையே அவரை மக்கள் திலகமாக மாற்றி காட்டியது. அவருக்கு பிறகு எஸ் எஸ் ஆர், ஐசரி கணேஷ், சிவாஜி என பல பேர் வந்தாலும் நிலை நாட்ட முடியாம போன காரணம் மக்களின் தீர்ப்பு தான் காரணம்.

அப்படி வந்த இன்னொரு தலைவர் தான் விஜயகாந்த் ஆனால் அவருக்கு இன்னொரு சினிமாவின் மற்றொரு மக்கள் திலகமாக ஒரு வாய்ப்பு கிடைத்தும் அவரின் சில தவறான அணுகுமுறையால் டெப்பாஸிட் கூட இழக்கும் அளவுக்கு மக்கள் அவரை தண்டித்த காரணமும் இதே ரகம் தான். இதே கதை தான் நடிகர் திலகம் சிவாஜிக்கும் நடந்த கதை. இப்படி இருக்கும் சூழ் நிலையில் தேரை இழுத்து தெருவில் விட்ட கதை தான் ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்தால்…………இவர்கள் முதலில் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பதை கேட்பதை விட அவர்களுக்கு சோறு போடும் அந்த துறைக்கு என்ன ஆக்கபூர்வமாக செய்தார்கள் என்பதே பலரின் கேள்வி அப்புறாம் தான் ஒரு வியர்வை துளிக்கு ஒரு பவுன் தங்கம் கொடுத்த மக்களுக்கு என்ன செய்தார் என்பது………………

ரஜினி என்ற பிம்பம் ஒன்றே போதும் அவர் செய்யும் செயல்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டுனு நினைக்கும் மாயை எல்லாம் காணாமல் போகும் ஏன் என்றால் அப்படி உண்மையாக இருக்கும் பட்சத்தில் பாபா / குசேலன் போன்ற பல படங்கள் ஏன் சங்கூதற வயசுல சங்கீதாகவாக போனது என்பதை அவர்கள் கண்டிப்பாக கூற முடியாது. ஆண்டவன் என்ன வேணும்னாலும் நினைக்கலாம், ஆளபோகிறோம் என்று நினைப்புடையவர் என்ன வேண்டுமானாலும் நினைக்கலாம் ஆனால் ஒத்தை புள்ளியை ஆட்காட்டி விரலில் மையிட்ட மகேசன்கள் தீர்ப்பு கண்டிப்பாய் இந்த பிரம்மான்ட பிம்பங்களுக்கு சும்மானாச்சுக்கும் உதவாது என்பது தான் உண்மை. அதிகபட்ச ஆறுதல் பரிசு இவர்களுக்கு ராஜ்யசபா பதவி என்ற டம்ம்பி எம்பி பதவிகள் தான் பாஸிபிள் ரியாலிட்டி சப்ஜெக்டு டு சம் பொலிட்டிகள் கட்சிகளிடம் ஆளும் அடிமை என்ற சாசனம் வரைந்த பிறகே……
Voter God is the ultimate ALMIGHTY.