ஆக்டர் விமல் பெயர் இப்போதைக்கு பிளாக் லிஸ்ட்டாம்; விரைவில் ரெட் கார்ட்?

தமிழ் சினிமா நடிகர்களில் ஒருவர் விமல். இவரது நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்று வந்த நிலையில் அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கி தன் ஹீரோ இமேஜை வில்லன் ரேஞ்சுக்கு மாற்றி விடுவது இவரது வாடிக்கை.

இத்தனைக்கும் விஜய் நடிப்பில் வெளியான கில்லி படம் மூலம் துணை நடிகராக அறிமுகமாகி ர் அஜித் நடித்த கிரீடம் படம் உட்பட பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். அதன்பின்னர், களவாணி திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான விமல் முதல் படம் கமர்சியலாக ஹிட் அடித்ததால் உடனடியாக தன்னை டாப் 10 லிஸ்டில் இணைத்து கொண்டவர் இந்த விமல்

பின்னர் களவாணி ‘, ‘ கலகலப்பு ‘, மஞ்சப்பை ‘, ‘ கேடி பில்லா கில்லாடி ரங்கா ‘ என தொடர் வெற்றியால் கொஞ்சம் எல்லை மீறிய தவறான போக்கில் ஈடுபட ஆரம்பித்தார். அதனால் ‘ இஷ்டம் ‘, ‘ அஞ்சல ‘, ‘ புலிவால் ‘ என அடுத்தடுத்து தொடர் தோல்வி படங்கள் ரிலீஸான நிலையில், மதுவுக்கு அடிமையாகி பகலிலேயே குடித்து விட்டு படப்பிடிப்புக்கு வந்ததாலும் இவரை வைத்து படம் தயாரிக்க யாரும் முன்வரவில்லை.

இதனால் முற்றிலும் வீழ்ந்து போன தன் மார்க்கெட்டை தூக்கி நிறுத்துவதற்காக ” மன்னர் வகையறா ” என்ற படத்தை தானே சொந்தமாக தயாரித்தார். அந்த படத்தின் பட்ஜெட் தாறு மாறாக எகிறியதால் பெரும் கடன் சுமைக்கு ஆளான விமல், பட விநியோகஸ்தர்களிடம் பெரும் தொகையை அட்வான்ஸாகவும், கடனாகவும் வாங்கி படத்தை வெளியிட்டார். ஒரு வருடத்திற்குள் ஆறு படங்களில் நடித்து மொத்த கடனையும் அடைத்து விடுவதாக உறுதி கூறியதால் முன் பணம் கொடுத்த விநியோகஸ்தர்கள் ரீ-பண்ட் தொகையை கேட்காமல் இலவு காத்த கிளி போல் காத்திருந்தனர். ஆனால் சொன்னதுக்கு மாறாக பத்து படங்களில் நடித்தாலும் கூட யாருக்கும் இதுவரை பணத்தை செட்டில் செய்யவில்லை.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு பின் சமீபத்தில் வெளியான ‘ கன்னிராசி ‘ படம் தமிழகம் முழுவதும் ரூ.23 லட்சம் மட்டுமே வசூல் செய்தது. படத்தை திரையிட க்யூப் நிறுவனத்திற்கு கட்டிய பணம் இதைவிட அதிகம். இந் நிலையில் புதிய தயாரிப்பாளர்கள் தன்னை தேடி வராததால், தன் சம்பளத்தை ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக குறைத்து கொண்டு ‘ குலசாமி ‘ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதனை கேள்விப்பட்ட ஏரியா விநியோகஸ்தர்கள் இனிமேலும் பொறுமை காத்தால் பணம் கைக்கு வராது என உணர்ந்து, தாங்கள் சார்த்திருக்கின்ற விநியோகஸ்தர்கள் சங்கங்களில் புகார் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.

விமல் போக்கு மற்றும் மார்கெட் நிலவரத்தை அலசிப் பார்த்து விட்டு உடனடியாக விநியோகஸ்தர்களுக்கு ரூ.3.5 கோடியை சங்கத்தில் செட்டில் செய்தால் மட்டுமே விமலின் அடுத்த படம் திரைக்கு வர விடுவோம் என்று முடிவெடுத்து விட்டார்களாம்.

இதனால் விமலை நம்பி பணத்தை போட்டு படமெடுத்த மற்றும் எடுத்துக் கொண்டிருக்கும் படங்களின் வியாபாரங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. ஏற்கெனவே தான் கமிட் ஆன பட புரோமோசன்களுக்கு வராத தனக்கு எதிரான  எல்லா செய்திகளையும் கண்டும் காணாதது போல் உலாவும் விமல் பெயர் இப்போதைக்கு பிளாக் லிஸ்ட்-டில் இருக்கிறது என்றும் விரைவில் அவருக்கு ரெட் கார்ட் போடப்படும் என்று கோலிவுட்டில் சொல்கிறார்கள்.

இது குறித்து விமல் தரப்பு என்ன? என்று அறிய தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம்.. பலன் இல்லை.. இந்த ரிப்போர்ட்டைப் படித்து பின்னராவது அவர் விளக்கம் அளிக்க முன் வருவார் என்று நம்புகிறோம்!