April 11, 2021

நடிகர் நகுல் மனைவி தண்ணீர் தொட்டி மூலம் சுக பிரசவம் ஆனக் கதை! – வீடியோ

இப்ப இந்தியன் 2 எடுத்துக்கிட்டு இருக்கும் ஷங்கரின் டைரக்‌ஷனில் ரிலீசானன “பாய்ஸ்” படம் மூலம் தமிழ் திரையுலகினருக்கு அறிமுகமான நடிகர் நகுல் மனைவி பெண் குழந்தையை சுகப் பிரசவமாக பெற்றெடுத்த சேதி தெரியும். ஆனால் அந்த குழந்தை பிறப்புக்கு பின்னால் நடந்த சில நிகழ்வுகளையும் வலிகளையும் நகுலின் மனைவி ஸ்ருதி தற்பொழுது பகிர்ந்துள்ளார்.

அச்சேதியின் சுருக்கம் இதோ

“அகிராவுக்கு இப்போ ஒரு மாசம் வயசு.. இது நகுல்- க்கும் எனக்கும் ரொம்ப ஆச்சரியமாகவும், பிரமிப்பாவும் இருக்கிறது.. காரணம் தெரிய கொஞ்சம் பழம் கதையை சொல்ல வேண்டியதிருக்குது. நான் 32 வார கர்ப்பமாக இருந்த போது எங்கள் 4 பூனைகளுடன் ஹைதராபாத்திற்கு கிளம்பினோம்! “ஏன் ஹைதராபாத்? ஏன் தனியாக? நீங்கள் இருவரும் தனியாக எப்படி சமாளிக்க முடியும்? என்று பலரும் எங்களிடம் கேள்வி எழுப்பினர் அதற்கான பதில் எங்களுக்கு மருத்துவம் செய்த மருத்துவர்களே!

ஆம்.. பிரசவ விருப்பங்களைப் பற்றி பேச பல மருத்தவர்களுடன் சென்னையில் ஒரு ஆன்லைன் ஆலோசனையைப் பெற முயற்சித்தேன். சிலர் தங்கள் நேரத்தின் 3 நிமிடங்களுக்கு மேல் கூட எங்களுக்கு வழங்கவில்லை. மருத்தவர் விஜயா எங்களுடன் ஒரு மணி நேரத்திற்கு ஒரு வீடியோ அழைப்பில் இருந்தார், எனது எல்லா கேள்விகளுக்கும் மிகவும் பொறுமையாக பதிலளித்தார்.

அதன்பின் என் பிரசவத்தின் பொழுது, ஒரு தாய் தனது சொந்த குழந்தைக்கு ஆறுதல் அளிப்பது போல, எனது 12 மணி நேர உழைப்பின் மூலம் எனக்கு உதவிய என் அதிசய பெண், படங்களில் நீங்கள் காணலாம்! நான் பல உணர்ச்சிகளை அனுபவிக்கும் போது நீங்கள் என்னிடம் கிசு கிசுத்துக் கொண்டிருந்த அந்த அன்பான வார்த்தைகள் என்னால் மறக்க முடியாத ஒன்று.

ஒவ்வொரு பெண்ணும் இந்த வகையான மரியாதைக்குரிய மற்றும் மென்மையான பிறப்பு விருப்பத்தை கொண்டிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், பிரார்த்திக்கிறேன்! மேலும் சுக பிரசவமானது நானும் நகுலும் முன்கூட்டியே ஆலோசித்து எடுத்த முடிவாகும்” அப்ப்டீன்னு பதிவிட்டு ஒரு வீடியோ-வை ஷேர் செஞ்சிருக்கார் ஸ்ருதி.

படிக்க, பார்க்க நெகிழ்ச்சியாக இருந்தது