சினிமா செய்திகள்

ஆக்டர் கார்த்திக்கு மூச்சுத் திணறல் ; மலர் ஹாஸ்பிட்டலில் அட்மிட்!

டிகர் கார்த்தி. 90 கிட்ஸ் தொடங்கி 2 கே வரையிலான பலருக்கு பிடித்த நடிகர்.. இவர் நடிப்பில் தற்போது தீ இவன் என்ற படம் உருவாகி உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின் இப்படத்தில் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறாராக்கும் டி.எம் ஜெயமுருகன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுதவிர தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் அந்தகன் படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதனிடையே ஒவ்வொரு தேர்தலின் போது சில நாட்கள் மட்டுமே மீடியா முன்னிலையில் ஆஜராகி தான் சார்ந்துள்ள சமூகத்தின் ஆதரவு குறித்த செய்திகளை பகிர்வது வாடிக்கை.

அந்த வகையில் அண்மையில் மீடியாக்கள சந்தித்த அவர், “தமிழக சட்டசபை தேர்தலில் ஏற்கனவே நாங்கள் இருக்கும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே தொடர் கிறோம். எங்கள் கட்சி தேர்தலில் போட்டியிட 2 சீட் தருவதாக சொன்னார்கள். ஆனால் அதை வைத்துக் கொண்டு எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. எனவே 2 சீட்டுகளை ஏற்க மறுத்துவிட்டேன். அதற்கு பதிலாக மக்கள் நலன் சார்ந்த சில கோரிக்கைகளை முன் வைத்து இருக்கிறோம். அதை செய்து கொடுக்கும்படி கேட்டு இருக்கிறோம்.அந்த கோரிக்கைகள் எங்கள் தேர்தல் அறிக்கையில் விரிவாக வெளியிடப்படும்.

மக்களின் உரிமைக்குரலை எழுப்ப சட்டமன்றத்தை விட பாராளுமன்றம் சக்தி வாய்ந்தது. அதனால்நான் ராஜ்யசபா எம்.பி.ஆகும் வாய்ப்பு இருக்கிறது. அது பற்றி இப்போது விரிவாக பேச முடியாது. தமிழக முதல்- அமைச்சரையும், துணை முதல்- அமைச்சரையும் சந்தித்து எங்கள் ஆதரவை முறைப்படி தெரிவித்துவிட்டேன். இப்போதைக்கு என்னால் எங்கெல்லாம் போக முடியுமோ அங்கெல்லாம் சென்று தேர்தல் பிரசாரம் செய்வேன். கூட்டணியில் இணைவதற்காகவும், பிரசாரம் செய்வதற்காகவும் எந்த பணமும் பெறவில்லை. பெறவும் மாட்டேன். இதனிடையே பா.ஜனதா கட்சியில் சேர எனக்கு அழைப்பு வந்தது உண்மை. ஆனால், நான் தனிக்கட்சி நடத்துகிறேன். அதற்கென்று தனிக்கொள்கை இருக்கிறது. அதனால் பா.ஜனதாவில் சேரவில்லை” என்றெல்லாம் சொன்னார்

சொன்னபடி சென்னையில் சில தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட போது அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதை அடுத்துசென்னை அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது எடுத்த பல்வேறு பரிசோதனைகளில் ஒன்றாக கொரோனா டெஸ்ட் எடுத்த போது கார்த்திக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

aanthai

Recent Posts

மகளிர் கல்லூரியின் விழாவில் கலந்து கொண்ட துருவ் விக்ரம்!

சென்னையிலுள்ள எம் ஓ பி வைஷ்ணவ மகளிர் கல்லூரில் நடைபெற்ற ‘விஷ் 22’ (Vish 22) எனும் கல்லூரி கலை…

40 mins ago

ஈரான்: ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டத்தில் வெளிநாட்டு சதி?

ஹிஜாப்பை முறைப்படி அணியவில்லை என்று கூறி போலீசார் தாக்கியதில் மாஷா என்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும்…

47 mins ago

பள்ளி மாணவன் சரியாக பதில் எழுதாததால் அடித்தே கொன்ற ஆசிரியர் தலைமறைவு!

உத்தரப்பிரதேசம், அவுரையா மாவட்டத்தில் பள்ளியொன்றில் படித்து வந்த 15 வயது பட்டியலின மாணவன் வகுப்பு தேர்வில் ஒரு வார்த்தையில் எழுத்துப்பிழை…

1 hour ago

சுந்தர் சி-க்கு டாக்டர் பட்டம்!- காஃபி வித் காதல்’ ஹைலைட்ஸ்!

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் 'காஃபி…

22 hours ago

ஆன்லைன் ரம்மிக்கு ஆப்பு – தமிழக அமைச்சரவை ஒப்புதல்!

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழப்பவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இது உடனடியாக தடுக்கப்பட வேண்டிய…

23 hours ago

ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் புதுக் கட்சி தொடங்கிட்டார்!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய, ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். அதற்கு ஜனநாயக…

23 hours ago

This website uses cookies.