ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின்போது, அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து விலைமதிப்புமிக்க சேலைகள், காலணிகள், கைக்கடிகாரங்கள் மற்றும் ஏராளமான பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது அந்த சொத்துக்களை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு வழக்கறிஞரை நியமித்து ஏலம் விட நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக அரசுக்கு, பெங்களூரு நகர சிவில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரன் ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடி அளவுக்கு சொத்துகளை குவித்தது தெரியவந்தது. இந்த வழக்கு பொங்களூரு தனி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. பின்னர் 2017-ம் ஆண்டு ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்புக்கு முன்பாகவே ஜெயலலிதா மரணம் அடைந்தார். மற்ற 3 பேரும் சிறை தண்டனை பெற்றனர்.
தீர்ப்பை அடுத்து ஜெயலலிதாவின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் வீட்டிலிருந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் பயன்படுத்திய பொருட்கள் கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டன.
அப்படி பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் விவரம்
தங்கம், வைரம், ரூபி, மரகதம், முத்துக்கள், ரத்தினக்கற்கள் மற்றும் பல வண்ண கற்கள் போன்றவை உள்பட 468 நகைகள் பட்டியலில் உள்ளன. மேலும், சில வகை மின்னணு பொருட்கள், ரொக்கம், விலை உயர்ந்த சேலைகள், சால்வைகள், காலணிகளும் அந்த பட்டியலில் உள்ளன. இதில் புடவைகளின் எண்ணிக்கை மட்டும் 11 ஆயிரத்து 344, சால்வைகளின் எண்ணிக்கை 250, காலணிகள் 750 என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது சென்னை தேனாம்பேட்டை போயஸ் கார்டனில் 1996ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி ஜெயலலிதாவின் இல்லத்தில் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட குறிப்பேட்டில், 44 ஏசி இயந்திரங்கள், 33 தொலைபேசி மற்றும் இன்டர்காம்கள், 131 சூட்கேஸ்கள், 91 கைக் கடிகாரங்கள், 27 சுவர்க் கடிகாரங்கள், 86 மின்விசிறிகள், 146 அலங்கார நாற்காலிகள், 34 டீப்பாய்கள், 31 டேபிள்கள், 24 கட்டில்கள், 9 டிரெஸ்ஸிங் டேபிள்கள், 81 அலங்கார தொங்கும் விளக்குகள், 20 சோபா செட்டுகள், 750 காலணிகள், 31 டிரெஸ்ஸிங் கண்ணாடி டேபிள்கள் மற்றும் 215 படிக வெட்டுக் கண்ணாடிகள் குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்நிலையில், அந்த பொருட்களை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் நரசிம்மமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த பெங்களூரு நகர சிவில் நீதிமன்றம், அரசு வழக்கறிஞரை நியமித்து, ஜெயலலிதாவின் உடைமைகளை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
பிரபல பாடகி வாணி ஜெயராம் இசை உலகில் இதுவரை 19 மொழிகளில் 10000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்; இந்நிலையில்…
பொதுவாக சினிமாவில் ஏகப்பட்ட வகைகள் உள்ளது. குடும்பம், பழிவாங்குதல், நகைச்சுவை, மெலோட்ராமா, திகில், ஆக்சன், கல்ட்,இப்படி இன்னும் நிறைய வகைகள்…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம். மேலும்…
நம் நாட்டில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சாலை விபத்தில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக…
இந்திய சமூகத்தினுள் ஆண்டாண்டு காலமாக வேரூன்றி இருக்கும் சாதி எனும் வடிவத்திற்கு எதிராக, பொதுத்தளத்தில் களமாடிய மற்றும் களமாடுபவர்களின் பட்டியல்…
இந்தாண்டுக்கான மிகப்பெரிய ட்ரெண்டிங் வார்த்தைகளில் ஒன்றாக ChatGPT மாறியுள்ளது. நவீன தொழில்நுட்ப உலகில் ஒரு புரட்சிகரமான உரையாடல் AI சாட்பாட்…
This website uses cookies.