ரயில் பயணங்களில் இனி ராத்திரி நேரத்தில் சத்தமேக் கூடாது!- ரயிலே நிர்வாகம் அதிரடி

யில்களில் பயணம் செய்யும் போது சத்தமாக பேசினாலோ அல்லது மொபைல் போனில் சத்தமாக பாட்டு கேட்டாலோ அபராதம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை பொதுவாக ரயில் பயணம் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகவே உள்ளது.ஏனெனில்,குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் பயணம் செய்யும்போது பாட்டு பாடுவது,சத்தமாக பேசி மகிழ்வது , அரட்டை அடிப்பது என அனைத்திற்கும் ஏதுவாக இருக்கும்.எனினும்,அதே சமயம் சிலர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொள்வதும் வழக்கமான ஒன்று.

இந்நிலையில்,ரயில்களில் பயணம் செய்வோருக்கான புதிய விதிமுறைகளை மத்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.அதன்படி,ரயில்களில் பயணம் செய்பவர்கள் சத்தமாக பேச மற்றும் மொபைல் போனில் அதிகம் சத்தம் வைத்து பாட்டு கேட்க ரயில்வே நிர்வாகம் தடை விதிதுள்ளது.இதனை மீறி,ரயில்களில் பயணம் செய்யும் போது சத்தமாக பேசினாலோ அல்லது மொபைல் போனில் சத்தமாக பாட்டு கேட்டாலோ அபராதம் வசூலிக்கப்படும் என்றும்,கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக சத்தமாக பேசுவது மற்றும் மொபைல் போனில் பாட்டு கேட்பது குறித்த புகார்களைப் பெற்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.அந்த வகையில்,சக பயணிகளின் புகாரின் அடிப்படையில் இதுபோன்ற பயணிகள் மீது ரயில்வே நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இரயிலில் இரவு 10 மணிக்கு பிறகு அனைத்து விளக்குகளையும் அணைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம்,ரயிலில் பயணம் செய்பவர்கள் தங்களுக்கு அசௌகரியமாக இருப்பதாக புகார் அளித்தால் உடனடியாக ரயில்வே போலீசார் மற்றும் டிக்கெட் பரிசோதகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு ரயில்வே ஊழியர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும்,ரயில்வே பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களும் பயணிகளிடம் பணிவுடன், சாதுர்யமாகவும், மரியாதையுடனும் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்,உடல் ஊனமுற்றோர் மற்றும் தனிமையில் உள்ள பெண்கள் பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் ரயில்வே ஊழியர்களால் வழங்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில்,சமீபத்தில் இது தொடர்பாக இரண்டு வார சிறப்பு பயணத்தை மேற்கொண்டரயில்வே அதிகாரிகள், பயணத்தின் போது,சக பயணிகளிடம் தொலைபேசியில் சத்தமாக பேசுவதையும், இயர்போன் இல்லாமல் இசை கேட்பதையும் தவிர்க்கவும் படி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.