மை ஃபிட்னஸ் பால் ஆப்-பின் 15 கோடி வாடிக்கையாளர் கணக்குகள் திருட்டு!
கடந்த வாரங்களில் ஹாட் டாபிக்காகி இருந்த, ஃபேஸ்புக் தகவல் திருட்டு சர்ச்சையே பின்னும் புகைந்து கொண்டிருக்கும் சூழலில் நாம் செய்யும் உடற்பயிற்சியின் கால அளவைக் குறித்தல் மற்றும் உட்கொள்ளும் உணவுப் பொருட்களின் கலோரியை அறிந்துகொள்ளுதல் போன்ற உடல்நலம் சார்ந்த பல்வேறு செயல்பாடுகளுக்குப் பயன்படும் மை ஃபிட்னஸ் பால் செயலியின் 15 கோடி வாடிக்கையாளர் கணக்குகள் திருடப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது.
ரொம்ப ஹைடெக்கா இருக்கரதா மத்தவ்ங்களுக்கு காட்டிகிற போக்கு இப்போது அதிகமாகி போச்சு அதுனாலேயே வீட்டில் முடங்கி கிடக்கும் பெண்கள் தொடங்கி, காலேஜ், ப்ராஜெக்ட், படிப்புனு எப்போ பார்த்தாலும் ஓடிக்கிட்டே இருக்கற ஸ்டூடன்ட்ஸ், உடகார்தே வேலைப்பார்க்கும் பெரிசுகள் என சகலரையும் தங்கள் குறித்து புது பார்வைக் காண வைக்கும் ஆப் எனப்ப்டும் செயலிகள் எக்கச்சக்கம் வந்து விட்டது.. ஒவ்வொருவரின் ஹெல்த் ரிப்போர்ட்டை இன்ஸ்டண்டாக சொல்லும் செயலியில் டாப்-பானது மை ஃபிட்னஸ் பால் ஆப்..
நாம் செய்யும் வேலையைப் பொறுத்து அன்றாட ரொட்டீன் வாழ்க்கைக்கு எவ்வளவு கலோரிகள் தேவை என இந்த `ஆப்’ பட்டியல் போடுகிறது. அது மட்டும் இல்லாம, நாம் உண்ணும் உணவுகளில் எவ்வளவு கலோரிகள் இருக்குன்னும் தெரிஞ்சுக்கலாம். இதனால நமக்கு எவ்வளவு கலோரி தேவை, சரியான அளவில்தான் சாப்பிடறோமான்னு நம்மை நாமே செல்ஃப் செக்கப் செஞ்சுக்க முடியும். அத்துடன் நாம் வாக்கிங், சைக்கிளிங் போகும் போது எவ்வளவு கலோரி குறைகிறது என்றெல்லாம் கணக்கு போடு காட்டுவதால் மொபைல் பயனாளிகளில் முக்கால்வாசி பேர் இந்த ஆப்-பை டவுன்லோடு செய்திருக்கும் நிலையில் இந்த மை ஃபிட்னஸ் பால் செயலியின் உரிமையாளரும், அமெரிக்காவின் முன்னணி விளையாட்டுக் காலணிகள் உற்பத்தியாளருமான அண்டர் ஆர்மர் நிறுவனம் அங்கீகரிக்கப்படாத சிலர் மை ஃபிட்னஸ் பால் செயலியிலிருந்து தகவல்களை திருடியுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளது. 15 கோடிக் கணக்குகள் திருடப்பட்டதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. இருப்பினும் சரியான எண்ணிக்கையை அண்டர் ஆர்மர் நிறுவனம் இதுவரை தெரிவிக்கவில்லை.
இது குறித்து அந்நிறுவன வெளியிட்ட அறிக்கையில் பயனர் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் ஹாஷ் முறையில் பாதுகாக்கப்பட்ட கடவுச்சொல் ஆகியவை திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தப் பிரச்சினையில் தேவை யான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துவருகிறோம். முன்னணி தகவல் பாதுகாப்பு அமைப்புகளுடன் இது தொடர் பாக ஆலோசித்து வருகிறோம். மை ஃபிட்னஸ் பால் குழுவை பாதுகாப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. கடவுச்சொல்லை உடனடியாக மாற்றுதல் மற்றும் சந்தேகத்துக்குரிய செயல்பாடுகளை தொடர்ச்சியாக கவனித்தல் போன்ற வற்றைச் செய்யுமாறு பயனர்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். பயனர்கள் எப்படி தங்களைத் தற்காத்துக்கொள்வது என்ற தகவலை அவர்களுக்கு தொடர்ச்சியாக அளித்து வருகிறோம். தனிப்பட்ட தகவல்களை கேட்கும் இணையதளங்கள் குறித்து கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறோம் என அந்நிறுவனத்தின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. சந்தேகத்துக்குரிய மின்னஞ்சல்களில் இருக்கும் வலைதள முகவரிகளை திறக்கவோ, இணைப்புகளை பதிவிறக்கம் செய்யவோ வேண்டாமெனவும் அண்டர் ஆர்மர் தெரிவித்துள்ளது. 2005-ம் ஆண்டு மை ஃபிட்னஸ் பாலை அண்டர் ஆர்மர் வாங்கியது குறிப்பிடத்தக்கது.