September 26, 2021

நம்ம நாட்டுலே 2025-இல் 5.54 லட்சம் பேர் கோடீஸ்வரங்க இருப்பாங்க!: ஆய்வறிக்கை

இந்தியாவில் புதிய கோடீஸ்வரர்கள் அதிகரித்துள்ளதாக ஹூருன் நிறுவனத்தின் குளோபல் ரிச் 2016 என்கிற ஆய்வில் தெரிய வந்திருந்தது. இந்திய கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு 30,800 கோடி டாலர்களாக உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 25 சதவீதம் மொத்த சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. உலக அளவிலான பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி 21 வது இடத்தில் உள்ளார். இவரை அடுத்து சன்பார்மா நிறுவனத்தின் தலைவர் திலீப் சாங்வி 1,800 கோடி டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார். இந்தியாவில் தற்போது 111 நபர்களிடம் நூறு கோடிக்கும் அதிகமான சொத்து உள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானவர்கள் மும்பையை சேர்ந்தவர்கள் என்றும் அந்த பட்டியல் கூறியது.

millioner july 11

இதனிடையே தற்போது இந்தியாவில் 2.36 லட்சம் பேர் கோடீஸ்வரர்களாக இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 135 சதவீதம் அதிகரித்து, 2025-இல் 5.54 லட்சம் இந்தியர்கள் கோடீஸ்வரர்களாக இருப்பார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நியூ வேர்ல்ட் வெல்த்’ என்ற தனியார் அமைப்பு, “இந்தியா 2016 வெல்த் ரிப்போர்ட்’ என்ற பெயரில் ஓர் ஆய்வறிக்கையை அண்மையில் வெளியிட்டது. அதில், “மற்ற நாடுகளைக் காட்டிலும் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வெகு சிறப்பாகவே இருந்து வருகிறது. அதன்படி, இந்தியாவில் உள்ள தனிநபர்களின் சொத்துகளை கணக்கெடுத்ததில், 2007-இல் 1.52 லட்சம் பேர் கோடீஸ்வரர்களாக இருந்தனர்.கடந்த ஆண்டில் அந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.2015-ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் 2.36 லட்சம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.இந்த எண்ணிக்கையானது 2025-இல் 5.54 லட்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெயில் பீஸ் ரிப்போர்ட்:

இதனிடையே அண்மையில் மாற்றி அமைக்கப்பட்ட 78 அமைச்சர்கள் கொண்ட மோடி அமைச்சரவையில் 72 அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள். அதில் 24 பேர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.