சந்தானம் நடிப்பில் ரிலீஸாகி இருக்கும் A 1 பட விமர்சனம்!

கோலிவுட்டில் காமெடி பண்ணி பிழைப்பு ஓட்டிக் கொண்டிருந்த சில ‘காவல்காரன்’-லாம் ஹீரோ ரேஞ்சில் தமிழ் சினிமாவை அழித்து கொண்டிருந்த நிலையில் காமெடி என்பது ஹீரோயிசம் இல்லை என்பதை புரிந்து/ புரியவைத்து டைமிங்காக ஒரு ரியல் சிரிப்புப் படத்தை வழங்கி்ய சந்தானத்துக்கு முதலில் ஒரு பூங்கொத்து கொடுத்து விடலாம். கொஞ்சம் டீடெய்லா சொல்றதா இருந்தா விஜய் டிவியில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக இருந்த சந்தானம், மன்மதன் படத்தில் சிம்புவால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டார். அதன் பிறகு சந்தானத்தின் மார்க்கெட் டாப். தமிழில் எல்லா நடிகர்களுடனும் நடித்து குறுகிய காலத்தில் முன்னணி காமெடியனாக உயர்ந்தார். டெய்லி ஆறேழு லட்சம் வரை சம்பாதித்து கொண்டிருந்தார். அதன்பின்னர் தனக்கு ஜூனியர்களாக இருந்த வர்களே சினிமாவின் ஹீரோ அவதாரம் எடுத்ததைப் பார்த்து தானும் ஹீரோவாகி தில்லுக்கு துட்டு, படங்களில் நடித்து ரசிகர்களை கமர்ஷியல் ரீதியாகவும் கவர்ந்தார். அந்த சக்சஸ் தந்த தைரியத் தில் தன்னை ரஜினி ரேஞ்சுக்கு நினைத்து ஆக்‌ஷன் படத்திலெல்லாம் நடித்து மார்கெட்டையே இழந்தார். எடுத்து முடித்த ’சர்வர் சுந்தரம்’ எப்போது ரிலீஸாகும் எனத் தெரியவில்லை. இதுதவிர, ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘சக்கபோடு போடு ராஜா’, ‘மன்னவன் வந்தானடி’ போன்ற படங்களெல் லாம் கைவசம் இருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களால் மறந்து போனோர் லிஸ்டில் இணையும் நிலையில் இருந்தார். அப்பேர்ப்பட்டவர் ஜெயித்தே ஆக வேண்டுமென்ற ஒற்றை நோக்கில் உருவாக்கி ரிலீசாகி நிஜமாலுமே பாஸ் மார்க் வாங்கிய படம்தான் A1.

ஹீரோவான சந்தானம் சாதாரண ஏரியா பார்ட்டி. புரட்டாசி சனிக் கிழமையன்று இவர் நெற்றியில் நாமத்தோடு வந்து ஒரு ஸ்டண்ட் செய்கிறார். அதைப் பார்க்கும் ஹீரோயின் சந்தானத்தின் மீது காதலில் விழுகிறார். அதன் பின்னர் ஹீரோ பிராமின் இல்லை என்று தெரிந்ததும் காதலை பிரேக் அப் செய்து விட்டு போய் விடுகிறார் நாயகி. பிறகு இதே ஹீரோயினின் அப்பா நெஞ்சுவலியால் சாய்ந்தவரை உடனடியாக ஆஸ்பிட்டலில் சேர்த்து காப்பாற்றியதால் வெட்டிய காதலை மீண்டும் ஒட்டிக் கொள்கிறார்.

இதற்கிடையே, சந்தானத்தின் குடும்பம் ஹீரோயின் வீட்டுக்கு சென்று பெண் கேட்க, ஐயர் மாமா அடாவடியாக பேசி சந்தானம் அண்ட் பேமிலிக்கு கெட் அவுட் சொல்லிவிடுகிறார் ஹீரோயின் தாராவோ எந்த ஒரு தவறும் செய்யாத சுத்தமான அக்மார்க் மனிதரான தனது அப்பா தனக்கு கடவுள் போல, அவர் சொல் மிக்க மந்திரம் இல்லை, என்று கூறி காதலுக்கு நோ சொல்வதோடு, தனது அப்பாவிடம் எதாவது சிறு தவறு இருப்பதை நிரூபித்தாலும், அவரை உதறிவிட்டு உன்னோடு வந்துவிடுகிறேன், என்று சந்தானத்திடம் சவால் விடுகிறார்.

காதலி கை விட்டு சேலஞ்ச் பண்ணிய சோகத்தில் சரக்கடிக்கும் சந்தானம், தனது காதலுக்கு எதிராக இருக்கும் ஹீரோயின் அப்பாவை கொலை செய்ய வேண்டும், என்று போதையில் தனது நண்பர் களிடம் சொல்ல, அவர்களும் அதே போதையில் அவரை தீர்த்து கட்டி விடுகிறார்கள்.. அப்பாலே என்னாச்சு?பிரிந்த சந்தானத்தின் காதல் மீண்டும் இணைந்ததா இல்லையா, என்பதை காமெடி யோடு சொல்லி இருப்பதுதான் இந்த ‘A1′ படத்தின் கதை. இந்த அக்யூஸ்ட் 1ன் மிகப் பெரிய பலம் இப்படத்தின் நீளம். இரண்டு மணி நேரத்துக்கு குறைவுதான்.

அதிலும் முன்னர் வந்த பெரும்பாலான படங்களில் மற்றவர்களை கலாத்து காமெடி செய்து வந்த சந்தானம் இதில் மற்றவர்களை புண்படுத்தாத வகையில் டயலாக் டெலிவரியை தேர்ந்தெடுத் திருப்பதுதான் தனி சிறப்பு.. அதிலும் ஆரம்ப பேராவில் சொன்னது போல் இந்த படத்தில் சந்தானம் அதிரடி ஹீரோயிசயத்தை காண்பிக்கவில்லை என்பதே மிகப்பெரிய பலம். நாயகி தாரா அலிஷா பெரி ஐயங்கார் வீட்டு பெண் ரோலுக்கு பத்து பொருத்ததுடன் இருக்கிறார். சந்தானத்துடன் ந்து

பாடலும், இசையும் தியேட்டரில் பார்க்கும் போது ரசிக்க வைத்தது. ஆனால் வெளியேறும் போது ஹம் பண்ண வைக்கவில்லை.

மொத்தத்தில் சினிமா என்பது பொழுது போக்க என்று நம்புவோர் சகலரும் (பிரமணாள் உட்பட) பார்க்கத் தகுந்தபடம் இந்த அக்யூஸ்ட் 1

மார் 3 / 5