Exclusive

ஆஸ்கர் வென்ற சிறந்த தமிழ் ஆவண குறும்படம் ‘தி எலிபன்ட் விஸ்பர்ஸ்‘

மெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நீலகிரி தம்பதியை பற்றிய The Elephant Whisperers என்ற ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர்விருது வழங்கப்பட்டது. டைரக்டர் கார்த்தி கொன்சால்வ்ஸ், புரொடியூஸர் குனீத் மோங்கா ஆகியோர் விருதை பெற்றனர்.வனத்தில் தாயைப் பிரிந்த நிலையில் மீட்கப்பட்ட 2 யானை குட்டிகளுக்கு தாய், தந்தையாக மாறி வளர்த்து ஆளாக்கிய ஊட்டி பழங்குடியின தம்பதியின் அனுபவத்தை, ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படம் கதைக்களமாக கொண்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில், ஆசியாவின் பெரிய வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. வனங்களில் தாயைப் பிரிந்து மீட்கப்படும் யானை குட்டிகள், குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து தொந்தரவு செய்யும் காட்டு யானைகள் போன்றவை பிடிக்கப்பட்டு இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.தற்போது 20க்கும் மேற்பட்ட யானைகள் பராமரிக்கப்படுகின்றன. இந்த யானைகளை பழங்குடியினத்தை சேர்ந்த பாகன்கள் பராமரித்து வருகின்றனர். இதில் காட்டு நாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதி யானை பராமரிப்பாளர்களாகப் பணிபுரிகின்றனர். கடந்த 2017ல் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தாயிடம் இருந்து பிரிந்து காயத்துடன் சுற்றித்திரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஆண் குட்டி யானை, முதுமலை தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு வரப்பட்டு, ரகு என்று பெயரிடப்பட்டது. அதுபோல், சத்தியமங்கலம் பகுதியில் 2018ம் ஆண்டு தாயைப் பிரிந்த மற்றொரு யானை அம்முவும் பராமரிக்கப்படுகிறது.

தாயைப் பிரிந்து தவித்த 2 யானை குட்டிகளைப் பராமரிக்கும் பணியை பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியிடம் ஒப்படைத்தனர். இத்தம்பதி இரு குட்டிகளுக்கு தாய், தந்தையாக மாறி வளர்த்து ஆளாக்கினர். அவர்களின் கதையை ஊட்டியைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குனர் கார்த்திகி கொன்சால்வ்ஸ், இரு வருடங்களாக ஆவணப் படமாக்கி இயக்கியனார்.

‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ (Elephant Whisperers) என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த ஆவண குறும்படம், ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இந்த ஆவண குறும்படம் 95வது ஆஸ்கர் விருதுக்கான ஆவண குறும்பட பிரிவுக்கு தேர்வானது. இந்த நிலையில் அமெரிக்காவில் இன்று நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியாவின் The elephant whisperers திரைப்படம் வென்றது.

இதனிடையே ‘Award பத்தி எல்லாம் எனக்கு தெரியாது பா.. ஆனா எல்லாரும் சொல்லும்போது எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்று தமிழ் ஆவண குறும்படம் ’The Elephant Whisperers’ ஆஸ்கர் வென்றது குறித்து முதுமலை யானை பராமரிப்பாளர் பெள்ளி தெரிவித்துள்ளார்

aanthai

Recent Posts

பத்து தல விமர்சனம்!

சினிமாக்கள் நம் சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் பலமானது. அதனை உணர்ந்த கலைஞர்கள், உண்மைக் கதைகளையும், உண்மைச் சம்பவங்களையும் வைத்து…

9 hours ago

போப் பிரான்சிஸ் ரோம் மருத்துவமனையில் அனுமதி!

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ், சுவாச தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…

10 hours ago

பொன்னியின் செல்வன் – 2ம் பாகம்- இசை & ட்ரைலர் வெளியீட்டு விழாத் துளிகள்!

சுபாஸ்கரன் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும் மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் - 2ம் பாகம்…

11 hours ago

மூன்றாவது உலகப்போர் மூளும் : பிறகு?

இரண்டாம் உலகப்போருக்கு பின்னால் உலகில் நடந்த போர்களில் அதற்கு காரணம் யார் என்று பார்த்தால் கண்டிப்பாக அதன் பின்னால் அமெரிக்கா…

11 hours ago

தமிழக அரசுக்கு கிண்டி ரேஸ் கிளப் செலுத்த வேண்டிய ரூ. 730 கோடி வாடகை பாக்கி -மெட்ராஸ் ஐகோர்ட் அதிரடியாக உத்தரவு.

1777ம் ஆண்டு குதிரையேற்ற பயிற்சிக்காக துவங்கப்பட்ட சென்னை ரேஸ் கிளப்புக்கு 1946 ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கிண்டியில் 160…

1 day ago

யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் இல்லை – பேடிஎம் விளக்கம்!.

யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் வெளியான நிலையில் யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள்…

1 day ago

This website uses cookies.