March 22, 2023

ஆ .ராசாவின் அசாதாரண பேச்சும், அரசியல் களமும்! – -வி.எம்.எஸ்

திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசாவின் ஆபாச பேச்சு அரசியல் வட்டத்தில் அருவருப்பான அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது .. திமுகவில் இதுபோன்று ஆபாசமாக பேசுவது ஒன்றும் புதிதல்ல .. கழக தொண்டனில் தொடங்கி தலைமை கழக பேச்சாளர்கள் என வளர்த்து தலைமை வரைக்கும் பெண்களை இழிவு படுத்தி பேசுவது ஆபாசமாக பேசுவது காலங்காலமாக ஒன்றுதான் ஆனால் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டு எதிர்ப்பு கிளம்பினால் அதை ஒப்புக்கொள்ள தைரியம் இல்லாமல் மீடியாக்கள் மீது பழி போடுவதை காலங்காலமாக செய்துள்ளனர்.. ஆனால் இந்த முறை ஒருபடி மேலே போய் எடப்பாடி பழனிசாமியை மட்டுமல்ல அவர் பிறப்பு மீதும், மறைந்த அவரது தாயார் மீது அருவருப்பான வார்த்தைகளை உமிழ்ந்திருக்கிறார் அண்ணன் ஆ.ராசா .!

அவரை சொல்லி குற்றமில்லை . அவர் பிறப்பிடமும், இருப்பிடமும் கற்றுத்தந்த பாடங்கள் இவை ..

பெரியாரின் பெண்ணுரிமையை ஒரு பக்கம் பேசிக் கொண்டே , பெண்ணினத்தை இழிவு படுத்துவதையும் வாடிக்கையாகி விட்டார்..

ஏன் இந்த நரக நடை ? திமுகவினரின் ஆபாச, அருவருப்பான நரக நடைக்கு காரணம் இதுவாக கூட இருக்கலாம். திமுகவினருக்கு மறைந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மேல் இருந்த கோபத்தை விட, ஜெயலலிதா மீது இருந்த ஆத்திரத்தை விட அதிகமாக இப்போது எடப்பாடி பழனிசாமி மேல் இருப்பது நன்றாகவே தெரிகிறது.

அந்த இருவரும் சினிமா ஆளுமை என்ற ‘பிம்பத்துடன்’ வலம் வந்தார்கள்,

ஆனால் இவரோ ‘ஒரு சாதாரண’ தொண்டனாக இருந்து இப்போது ஒரு மிகப் பெரிய சவாலாக வளர்ந்து விட்டாரே என்ற ஆத்திரம் தான் உடன்பிறப்புகளிடையே தென்படுகிறது ..

‘MGR, ஜெயலலிதா ஆகியோரிடம் அடைந்த தோல்வியை கூட ஏற்றுக் கொண்டவர்கள், தற்போது எடப்பாடியிடம் தோற்றுவிட்டால் கேவலம் என்று எண்ணத் தொடங்கிவிட்டார்கள்,

அதன் வெளிப்பாடே இந்த கீழ்த்தரமான தாக்குதல்.

கடந்த நான்கு ஆண்டுகளில் எப்படியும் இந்த ஆட்சியை ‘கவிழ்த்துவிடலாம்’ என்று நினைப்பில் இருந்தவர்களுக்கு இந்த தேர்தலில் கூட சுலபமாக ஜெயிக்க முடியாதோ என்று சந்தேகம் வந்துவிட்டது, அது தான் அவர்களை எரிச்சலடைய செய்கிறது.

ஒரு குடும்பத்தை மட்டுமே நம்பியிருந்த கட்சிக்கு ஒரு சாதாரண மனிதன் ‘சிம்ம சொப்பனமாக’ மாறிவிட்டார் என்பதும் கண்கூடான உண்மை..

எடப்பாடியார் ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுக்களும் திட்டங்கள் சரிவர இல்லை என்று புகார்களை தெரிவிக்க முடியாத சூழலில் தனிநபர் தாக்குதலில் இறங்கிவிட்டனர் இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் எம்எல்ஏ என் அனந்தநாயகி இடம் சட்டப்பேரவையில் ஆபாசமாக பேசி திமுகவினரின் புகழ் சட்டசபை குறிப்பேடு பதிவாகியுள்ளது வெற்றிகொண்டான் தீப்பொறி ஆறுமுகம் என பல பேச்சாளர்கள் ஆபாசமாக பேசி அறுவடை செய்வதையே தொழிலாக கொண்டிருந்தனர் அவர்களை எல்லாம் தலைமை ஊக்குவித்தது தவிர தட்டி கேட்கவில்லை அதன் வெளிப்பாடுதான் இன்று வரைக்கும் நக்கல் நரகல் நடையில் பேசுவதை உடன்பிறப்புகள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்

இன்னும் சொல்லப்போனால் ஆண்டாள் தாயாரை அவதூறாக பேசிய போதே ஆள்பவர்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று அவரின் தாயாரின் அவதூராக பேசும் நிலை காணப்படுகிறது தேர்தல் களத்தில் வரைமுறை மீறி வாய்க்கு வந்தபடி பேசுவது கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை கொண்டுள்ள கட்சிக்கு அழகல்ல இன்றைய இளைய சமுதாயம் எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து எடை போடும் தன்மை உடையவர்கள் அரசியல்வாதிகள் ஆள்பவர்கள் என யாராக இருந்தாலும் அரசியல் களத்தில் அருவருப்பான வார்த்தைகளை பயன்படுத்துவார்கள் எதிர்வரும் காலங்களில் இவர்களை இந்த சமூகம் புறக்கணித்து விடும் என்பதே உண்மை. பிரபலங்களின் அவதூறான பேச்சுக்களே அவர்களை காலப்போக்கில் வீழ்த்தும்.

வி.எம்.எஸ்.
ஊடகவியலாளர்