தி கொயட் பிளேஸ் 2- விமர்சனம்!

தி கொயட் பிளேஸ் 2- விமர்சனம்!

ப்படியிப்படி திகிலைக் கிளப்பும் சப்தம். அருவருப்பு அல்லது கொடூர முகங்கள் கொண்ட பேய் படங்கள், பார்க்கப் பிடிக்காத ஸோம்பிகள், ரத்தம் வழிந்தோடும் ஹாரர் படங்களுக்கு இடையே, சத்தம் இல்லாமல் பயமுறுத்தி, சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்க வைக்கும் பாணியில் வெளியாகி ஹிட் அடித்த தி கொயட் பிளேஸ் இரண்டாம் பாகமும் வந்து விட்டது. முன்னதைப் போலவே இப்படமும் நம்மைக் கவருகிறது என்பதுதான் ஆச்சரியம். அமெரிக்காவில் இந்த திகொய்ட் பிளேஸ் 2 கடந்த 2021 மே மாதமே ரிலீசாகி விட்டது. இரண்டாவது பாகத்தை சுமார் 60 மில்லியன் டாலர்கள் செலவில் எடுத்திருந்தனர். முதல்வார இறுதியில் இப்படம் யுஎஸ்ஸில் 47.55 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இதுவரை உலக அளவில் 297.1 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்துள்ளது. இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் இது மாபெரும் வசூல் என்று ஹாலிவுட்டில் பேசிக் கொண்டார்கள். இந்தப் படம் நாளை- அக்டோபர் 8-ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.

இதன் கதை என்னவென்றால் முதல் பாகத்தின் இறுதியில், தந்தை இறந்து தனது குடும்பத்தையும் குழந்தையையும் ஏலியனிடமிருந்து காப்பாற்றுகிறார். அதன் பின்னரும் அந்த குடும்பத்திற்கு என்ன நடக்கிறது? அதிலிருந்து எப்படி தப்பிக்கிறது? அழிந்ததா ஏலியன் என்பதைதான் சொல்லி இருக்கிறார்கள் .

முதல் காட்சியில் அந்த ஏலியன் எப்படி ஊருக்குள் வந்தது என்பதில் ஆரம்பிக்கிறது அதுவே அதகளமாக இருக்கிறது. அதன் பிறகு தான் பாதுகாப்பாக இருந்த இடம் அழிந்து போக, அந்த இடத்திலிருந்து வேறு பாதுகாப்பான இடம் தேடி அந்த குடும்பம் பயணிக்க ஆரம்பிக்கிறது. வழியில் அந்த பெண் குழந்தை ஏலியனை அழிக்கும் வழியை தேடுகிறது. கூடவே அந்த குடும்பம் எப்படி தப்பிக்கிறது என்பதை சுவாரஸ்யமாக சொல்ல முயன்றிருக்கிறார்கள் அதில் ஓரளவு ஜெயித்தும் இருக்கிறார்கள்.

ஆனால் முதல் படத்திலிருந்த ஆச்சர்யம் இதில் இல்லை இதுவும் ஹாலிவுட்டின் ஒரு நார்மலான ஏலியன் படமாக மாறிவிடுவது படத்தின் மீதான ஈர்ப்பை குறைத்து விடுகிறது. என்பதையும் சொல்லியே ஆக வேண்டும். ஏலியன் வரும் இடங்கள் ஒவ்வொரு பிரேமும் பரபரப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. உண்மையிலேயெ அந்த சின்னப்பெண் ஏலியனிடம் மாட்டிக்கொள்ளும் காட்சியில் நெஞ்சு படபடவென அடித்து கொள்கிறது. கடைசி காட்சி விறுவிறுப்பாக பயணிக்கிறது

நாயகன் இறந்து விட்டதால் Cillian Murphy கதாப்பாத்திரத்தை புதிதாக கொண்டு வந்துருக்கிறார்கள் அவரும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். முதல் படன் போல் இப்படத்தில் Emily Blunt க்கு அதிக முக்கியத்துவம் எதுவும் இல்லை. ஏலியன் போன படத்தை விட இந்த படத்தில் கொஞ்சம் தெளிவாக இருக்கிறது. இசை மனதின் படபடப்பை கூட்டுவதில் சரியாக பயன்பட்டிருக்கிறது. ஒளிப்பதிவு அட்டகாசம். உருவாக்கத்திலும் போன படத்தை விட நல்ல முன்னேற்றம்.

மொத்தத்தில் ஒரு நல்ல முழுமையான ஹாலிவுட் படம் பார்த்த திருப்தி தருகிறது இந்த The quiet Place 2.

ஹிட் ஆன படத்துக்கு மார்க் கேட்காமல் ஒரு முறை தியேட்டருக்கு போய் பாருங்கள்:

error: Content is protected !!