மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள்!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள்!
எல்லாம் எல்லாருக்குமாய் இருந்த ஆதிப் பொதுவுடமை சமூகத்தில் அரசு என்பது இல்லை.பொதுவாக இருந்ததை தனக்கான தனி என சிலர் மாற்றிய போது ஆண்டான்-அடிமை என்ற இரண்டு சமூகம் வரலாற்றில் உருவாகிறது.
ஆண்டைகளும் அடிமைகளும் மோதிக் கொண்ட வரலாறு தொடங்குகிறது.சிறிய கூட்டமாக இருந்த ஆண்டைகளால் பெரும் கூட்டமாக இருந்த அடிமைகளை நேரடியாக ஒடுக்க முடியாததால் உளவியல் ஒடுக்குதல் தேவையானது.

உளவியல் ஒடுக்குதலுக்கு முதலில் உருவாக்கப்பட்டவர் தான் கடவுள். நடப்பவையெல்லாம் அவன் செயல் என அடிமைகளுக்கு போதிக்கப்பட்டு ஒரு பகுதி ஒடுக்கப்பட்டது. அதையும் மீறி போராடிய அடிமைகளிடம் ஒரு சமரச ஒப்பந்தம் செய்யப்பட்டது. நமக்குள் சண்டை வேண்டாம். நமக்கென பொதுவான ஆள் இருக்கட்டும்.அவர் சண்டையை தீர்த்து வைக்கட்டும் என்று முடிவானது. அவன் பொதுவான ஆள் என்று அறிவிக்கப்பட்டாலும், மறைமுகமாக ஆண்டைகளின் ஆளாக அனுப்பப்பட்டான்.அவனுக்கு பெயர் தான் அரசன் என்றும் மன்னன் என்றும் அழைக்கப்பட்டது. இதற்கு நிலபிரபுத்துவ சமுதாயம் என வரலாறு கூறுகிறது.

அரசன் உருவானான்.அரச சபைகள் உருவானது. மந்திரிகளும்,பிரபுக்களும்,சேனாதிபதிகளும் மட்டுமே அரச சபையில் இருந்தார்கள். பொற்காசு வாங்குவதற்காக புலவர் புடலங்காயகள் உருவானார்கள். மன்னா உன்னை மாதிரி ஆல் இன் ஆல் அழகுராசா உலகத்தில் இல்லையென்பது மட்டுமே புலவர்கள் பாடலின் உள் அர்த்தமாய் இருந்தது.

மாதம் மும்மாரி மழை பொழிந்ததா மந்திரி என மன்னன் கேட்பான். இதன் அர்த்தம் என்னன்னா மழை கூட பெய்ததா இல்லையான்னு தெரியாதா மண்ணாங்கட்டி பய தான் மன்னன்.மழை பெய்ததா,இல்லையான்னு தெரியாத அளவுக்கு அநத்ப்புர அழகிகளுடன் ஜல்ஜா செய்வதே மன்னனுக்கு பெருமை. இதெல்லாம் பெருமையா? எருமை.எருமை. மழை பெய்வதையே மந்திரியிடம் கேட்டால் மக்கள் எப்படி இருப்பார்கள் என்று அவனுக்கு தெரியுமா? மக்களின் பிரச்சனைகள் மன்னனுக்கு தெரிய வேண்டும். அரச சபையில் மக்களுக்கும் இடம் வேண்டும் என போராட்டம் தொடங்கியது. மன்னர்களுக்கு எதிராக மக்கள் தொடங்கிய முதல் யுத்தம் இதுதான்.

அரச சபையில் மக்களின் பிரதிநிதிகளும் பங்கேற்க முடிவானது. மந்திரிகளும்,பிரபுக்களும்,சேனாதிபதிகளும் இதை ஆட்சேபித்தார்கள். பஞ்சப்பராரிகளுக்கு அரசசபையா? அதுவும் எங்களுக்கு சமமாகவா என மன்னனை வேண்டினார்கள். சமமாக அல்ல.எனக்கு ஆதரவான நீங்கள் என் வலது புறம் அமருங்கள். மக்கள் பிரதிநிதிகள் இடதுபுறம் அமரட்டும் என ஒன்றாக இருந்த அரசசபையை இரண்டாக பிரித்தனர் மன்னர்கள்.

அதுவே இடதுசார்பு, வலது சார்பு என்று உலகம் முழுவதும் ஆனது. மன்னர் ஆட்சிக்கு எதிரான போராட்டம் தொடங்கியது. மக்களாட்சி முறை வந்தது.உள்ளடக்கம் ஒன்றாக இருந்தாலும் வடிவத்தில் சிறிய மாறுதல் செய்யப்பட்டது.அரசசபை பாராளுமன்றம் சட்டமன்றம் என்றானது. அங்கு இருப்போரை இயக்க ஆண்டை,நிலப்பிரபு என்று அழைக்கப்பட்டவர்கள் பெருமுதலாளிகள் என்று ஆனார்கள். அரசன் என்ற நீதி சொன்னவன் தான் நீதிபதி என்று ஆனான்.

மக்களாட்சியா? முதலாளிகள் ஆட்சியா?எப்படி வரையறுப்பது? வெகு எளிது. ஒரு சமூகத்தில் எந்த வர்க்கத்தினர் எல்லாவற்றையும் சர்வ சுதந்திரமாக அனுபவிக்கிறார்களோ அவர்களின் ஆட்சி நடக்கிறது என்று பொருள். எந்த ஒரு செயலுக்குப் பின்னாலும் ஒரு வர்க்கத்தின் நலன் ஒளிந்தே உள்ளது. அது இடது என்ற உழைக்கும் வர்க்கம் சார்ந்ததா? வலது என்ற ஆதிக்க வர்க்கம் சார்ந்ததா? இதுவே அரசியல்.

நடுநிலை என்ற ஒரு நிலை வரலாற்றில் எப்போதும் கிடையாது. அதுவும் ஒரு சார்பு நிலை தான். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள்.

இடதாகச் செல்லுங்கள்

இல்லையேல் வலதாகச் செல்லுங்கள்
நடுவில் சென்றால் தண்ணி லாரியில் அடிபட்டு சாவீர்கள்.
நடுநிலை என்று சொன்னவரெல்லாம் ஆதிக்க சிநத்னையின் அடியாட்களாக இருந்ததே இது வரையிலான வரலாறு.

 

error: Content is protected !!