இந்திய சட்ட மன்ற வரலாற்றில் முதல்முறையாக ஒரு கவர்னர் வெளிநடப்பு!

இந்திய சட்ட மன்ற வரலாற்றில் முதல்முறையாக ஒரு கவர்னர் வெளிநடப்பு!

மிழக அரசு தயாரித்த உரையை கவர்னர் ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்று பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியபோது ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார். அதே சமயம் கவர்னரின் போக்குக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.. இந்திய சட்ட மன்ற வரலாற்றில் ஒரு கவர்னர் வெளிநடப்பு செய்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது .

சட்டப்பேரவையில் வழக்கமாக ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில், இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று (ஜன.9) காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. காலை 10 மணிக்கு கூட்ட அரங்கில் ஆளுநர் தனது உரையை வாசிக்க தொடங்கினார். இதன்படி காலை.10.50 மணி வரை ஆளுநர் தனது உரையை வாசித்தார். கவர்னர் ஆர்.என்.ரவி தமிழில் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து பேசி துவங்கினார். அப்போது தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் வாழ்த்துக்களையும் தமிழில் கூறினார்.

கவர்னர் தமிழில் தனது உரையை பேசத் தொடங்கியதும் தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் கவர்னரை பேசவிடாமல் ‘கவர்னரே வெளியேறு’ என்றும், ‘வாழ்க வாழ்க வாழ்கவே, தமிழ்நாடு வாழ்கவே’, ‘எங்கள் நாடு தமிழ்நாடு’ என தொடர்ந்து கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். ஆனாலும் அமளிக்கு இடையே கவர்னர் தன் உரையை நிறுத்தாமல் தொடர்ந்தார்.

தொடர்ந்து கோஷம் எழுப்பிய தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கவர்னரின் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனை தொடர்ந்து பா.ம.க. எம்.எல்.ஏ.க்களும் கோஷம் போடத்தொடங்கினார்கள். ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய், மசோதாவிற்கு அனுமதி கொடுங்கள் போன்ற முழக்கங்களை எழுப்பினார்கள். அதன்பிறகு ஜி.கே.மணி உள்ளிட்ட பா.ம.க.வினரும் கவர்னர் உரையை புறக்கணித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.உரையை வாசித்து முடிக்கப்பட்டதும், அதன் தமிழாக்கத்தை பேரவைத்தலைவர் மு.அப்பாவு வாசித்தார்.

இதன்பிறகு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்று பேரவையில் குற்றச்சாட்டினார். அவர் பேசுகையில்,”தமிழக அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை. உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது” என்று தெரிவித்தார். இது தொடர்பாக முதல்வர் பேசிக் கொண்டு இருக்கும் போது ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியில் வெளியேறினார். இதனால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. ஆளுநர் உரையுடனான சட்டப்பேரவை ஆண்டு முதல் நாள் கூட்டமானது தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு ஆரம்பித்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிறைபெறுவதே மரபு. இந்நிலையிலை ஆளுநர் தேசியகீதம் இசைக்கப்படுவதற்கு முன்னதாக நிறைவு பெற்றதற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது” என்று தெரிவித்து இது தொடர்பான தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானம் சட்டப்பேரைவில் நிறைவேற்றப்பட்டது.

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!