பூவை பூ என்றும் சொல்லலாம். புஷ்பம் என்றும் சொல்லலாம்!.

பூவை பூ என்றும் சொல்லலாம். புஷ்பம் என்றும் சொல்லலாம்!.

காவிரி -Scheme ஸ்கீம் என்கிறார்களே அது என்ன? அதைக் குறித்து விளக்கம் கேட்க வேண்டிய அவசியம் இருக்கிறதா? ஸ்கீம் -செயல்திட்டம்- என்பதைக் குறித்து உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. ஏனெனில் ஏற்கனவே அதைக் குறித்த விளக்கம் சட்டங்களிலும், தீர்ப்பாயத்திலும் இருக்கிறது மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் பிரச்சினைகளில் முடிவெடுக்க உருவாக்கப்பட்டது மாநில நதி நீர் தாவா சட்டம்.(Inter state water disputes acr 1956) இந்தச் சட்டத்தில் 1980ஆம் ஆண்டு ஒரு திருத்தம் சேர்க்கப்பட்டது.

// Without prejudice to the provisions of Section 6, the Central Government may, by notification in the Official Gazette, frame a scheme or schemes whereby provision may be made for all matters necessary to give effect
to the decision of a Tribunal.//

என்று சொல்லும் அந்தத் திருத்தம் ஸ்கீம் என்றால் என்ன என்பதையும் மேலும் விளக்கமாகச் சொல்கிறது:

A Scheme framed under Sub-Section (1) may provide for:

(a) the establishment of any authority (whether described as such or as a committee or other body) for the implementation of the decision or directions of
the Tribunal.

(b) the composition, jurisdiction, powers and functions of the authority, term of office and other conditions of service, the procedure to be followed -by and the manner of filling vacancies among the members of the authority.
(c) the holding of a minimum number of meetings of the authority every year, the quorum for such meetings and the procedure there at.
d) the appointment of any standing, ad hoc or other committees by the authority.
(e) the employment of a Secretary and other staff by the authority, the pay an allowances and other conditions of service of such staff.
(f) the constitution of a fund by the authority, the amounts that may be credited to such fund and the expenses to which the fund may be applied.
(g) the form and the manner in which accounts shall be kept by the authority.
(h) The submission of an annual report by the authority of its activities.
(i) The decisions of the authority which shall be subject to review.
(j) The constitution of a committee for making such review and the procedure to be followed by such committee; and
(k) any other matter which may be necessary or proper for the effective implementation of the decision or directions of the tribunal.

ஓர் அதிகார அமைப்பு, அதன் அங்கத்தினர்கள், அதன அதிகார வரம்பு, அதிகாரங்கள், செயல்பாடு கள்,  பணியாட்கள், அமைப்பிற்கான நிதி ஆதாரங்கள் அது கூட வேண்டிய கால அளவு என எல்லாவற்றையும் தீர்ப்பாயம் தீர்மானிக்க இந்தச் சட்டப் பிரிவு வகை செய்கிறது

சரி காவேரி தீர்ப்பாயம் இதைப் பின்பற்றி சொல்லியிருப்பதென்ன?

இநதச் சட்டத்தின் கீழ் அது அமைத்த authorityக்கு காவிரி மேலாண்மை வாரியம் (Cauvery Manage ment Board) என்று பெயர் சூட்டுகிறது. அதன் முழு நேரத் தலைவர், அவருக்கு இருக்க வேண்டிய தகுதி, முழு நேர உறுப்பினர் அவருக்கு இருக்க வேண்டிய தகுதி இரண்டாவது முழு நேர உறுப்பினர் அவருக்கான தகுதி (ஒருவர் நீர்ப்பாசன பொறியாளர், மற்றவர் வேளாண் வல்லுனர் இருவருக்கும் குறைந்த பட்சம் 15 ஆண்டு அனுபவம்) தொடங்கி சக்லமும் விரிவாகவும் தெளிவாகவும் தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் டெம்பிளேட் ரெடி. அதில் பெயர்களை நிரப்பினால் மேலாண்மை வாரியம் உருவாகிவிடும்

மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் வேண்டுமா? 

மாநிலங்களிடையே  உள்ள நதி நீர் தாவா சட்டத்தின் 6 b பிரிவு, தீர்ப்பாயத்தின் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டவுடன் உச்ச நீதி மன்றத்தின் ஆணை (decree) என்ற தகுதியைப் பெறுகிறது. உச்ச நீதி மன்றத்தின் ஆணையை மாற்றவோ, திருத்தவோ நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை

தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்துத்தான மேல்முறையீடு செய்யப்பட்டது. அது பிப்ரவரி 16 அளித்த தீர்ப்பில் மேலாண்மை வாரியம் என்ற சொல்லே இல்லை என்கிறார்களே?

பிப்ரவரி 16 தீர்ப்பு நதி நீர் தாவா சட்டத்தில் உள்ள Scheme என்ற வார்த்தையைப் பயன்படுத்தி யிருக்கிறது. தீர்ப்பாயம் .அந்தப் பிரிவின் கீழ்தான் மேலாண்மை வாரியத்தை அமைத்திருக்கிறது. எனவே ஸ்கீமும் மேலாண்மை வாரியமும் ஒன்றுதான். பூவை பூ என்றும் சொல்லலாம். புஷ்பம் என்றும் சொல்லலாம்.

சுருக்கமாக Scheme என்பது குறித்து விளக்கம் கேட்க அவசியமில்லை. பாஜக அரசு செய்திருப்பது காலம் கடத்தும் முயற்சி மட்டுமல்ல, நயவஞ்சகமும் கூட..

மாலன் நாராயணன்

error: Content is protected !!