சீனாவில் மலையில் மோதி விமானம் விபத்து – 133 பயணிகள் உயிரிழப்பு? வீடியோ!
சீனாவில் கும்மிங் பகுதியிலிருந்து குவாங்சு நோக்கி புறப்பட்ட போயிங் 737 ரக விமானம் மலையில் மோதி பள்ளத்தாக்கில் விழுந்ததாக கூறப்படுகிறது. விமானம் எரிந்து விழுந்ததை சிலர் பார்த்ததாகத் தெரிவித்த தகவலையடுத்து சீனாவின் போயிங் 737 அதில் பயணம் செய்த 133 பயணிகள் உயிரிழந்திருக்கக்கூடும் என்று நம்பப்டுகிறது.
ஈஸ்டர்ன் ஏர்லைன் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 என்ற பயணிகள் விமானம் சீனாவின் குன்மிங் பகுதியில் இருந்து குவாங்க் ஸோ நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. 8,400 அடி உயரத்தில் விமானம் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென ரேடார் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த விமானம் மலையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. விமானத்தில் பயணித்த 133 பேரின் நிலை குறித்து தெரியவில்லை. அனைவரும் உயிரிழந்திருக்க கூடும் என்று தெரிகிறது. மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
🦉சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற போயிங் 737 ரக விமானம் மலைப்பகுதியில் விழுந்து விபத்து
குன்மிங் பகுதியில் இருந்து குவாங்க்ஸோ நோக்கி சென்ற பயணிகள் விமானம் விழுந்து விபத்து. பயணிகள் அனைவரும் பலியாகி இருக்க கூடும் என்ற அச்சம் pic.twitter.com/wtXijuR42P
— Àanthai Répørter™ (MASKUpTN) 🦉 (@aanthaireporter) March 21, 2022
183 அடி உயர்த்தில் இருந்து விமானம் விழுந்ததாகவும், விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களில் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஈஸ்டர்ன் ஏர்லைன் நிறுவனத்துக்கு போயிங் 737, 737 MAX என இரண்டு பிரிவுகளாக விமானங்கள் உள்ளன. இதில் 737 MAX வகை விமானங்கள் கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து விபத்துகளில் சிக்கி வருகிறது. ஆனால் அதற்கு முந்தைய கண்டுபிடிப்பான போயிங் 737 விமானத்தில் பெரிய அளவில் கோளாறுகள் கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில் போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளானது.