திரும்ப வந்துட்டேன்னு சொல்ல சொன்ன நித்தியானந்தா சமாதி நிலையில் இருக்கிறாராம்!

திரும்ப வந்துட்டேன்னு சொல்ல சொன்ன நித்தியானந்தா சமாதி நிலையில் இருக்கிறாராம்!

கப்பட்ட பாலியல் வழக்குகள் உள்ளிட்ட எக்கச்சக்கமான வழக்குகளில் நித்தியானந்தா மீது சட்டங்கள் பாய்ந்து கைது செய்ய இந்தியாவில் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. அப்போது இந்தியாவில் இருந்து தப்பிச்சென்று தலைமறைவான நித்தியானந்தா தனது ஆதரவாளர்களுக்கு அவ்வப்போது வீடியோ பதிவு மூலம் தரிசனம் அளித்து வருகிறார். அதிலும் கைலாசா என்றொரு தீவை வாங்கிவிட்டதாகவும் அதை ஒரு நாடாக அங்கீகரிக்கக்கோரியும் உலக அரசை உலுக்கி எடுத்தார்.இந்நிலையில் நித்தியானந்தாவுக்கு உடல்நிலை குன்றியிருப்பதாகவும், மோசமான நிலையில் நித்தியானந்தா இருப்பதாகவும் புரளிகள் வெளியாகின. வதந்திகளின் உச்சமாக நித்தியானந்தா இறந்துவிட்டார் என்றும் பேச்சுக்கள் ஓடின. மேலும் அவரது சொற்பொழிவு வீடியோக்கள் தற்போது எடுக்கப்பட்டவை அல்ல என்றும், அவை முன்பு எடுக்கப்பட்ட வீடியோக்களின் எடிட்-கள் என்றும் பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் நித்தியானந்தா தனது மரண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விளக்கமளித்துள்ளார்.

சமூக வலைத் தளத்தில் தன் விஷயம் குறித்து விளக்கமளிக்கையில், “எனக்கு உடல்நிலை சரியில்லை. 27 மருத்துவர்கள் எனக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவ சிகிச்சையிலிருந்து நான் இன்னும் வெளியே வரவில்லை. பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என்பதை எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஆய்வு செய்கிறார்கள்.

தினந்தோறும் நடைபெறும் நித்ய பூஜை மட்டும் இன்னும் நிற்கவில்லை. மற்றபடி, வேறு எந்த வேலையையும் நான் செய்வதில்லை. உணவு உண்ண முடியவில்லை, தூங்க முடியவில்லை. என் உடம்புக்கு என்னானது என்றே தெரியவில்லை. மருத்துவர்களாலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனக்கு அறிமுகமானவர்களைக்கூட அடையாளம் கண்டுக் கொள்வதில் சிரமப்படுகிறேன். நான் சாகவில்லை. ஆனால், சமாதி மனநிலையை அடைந்திருக்கிறேன். விரைவிலேயே பரிபூரண நலம் பெற்று திரும்புவேன்” என்று கூறியுள்ளார்.

இந்த பதிவுகளுடன் தன் லேட்ட்டஸ்ட் போட்டோக்களை, தேதியுடன் குறிப்பிட்டு ‘ திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என்றெல்லாம் எழுதி காண்பித்த புகைப்படம் உள்ளிட்டவைகளை பகிர்ந்துள்ளார்

இதையடுத்து அவரது மரணம் குறித்த வதந்திகளை நம்பாமல் நம்பிக்கையுடன் இருந்த அவரது ஆதரவாளர்களில் பலர் அவரது உடல் நிலை பாதிப்புற்றது குறித்த உறுதிப்படுத்தலால் சோகத்திற்குள்ளாகியுள்ளனர்

error: Content is protected !!