Exclusive

மாணவர்களின் போக்கு : எமர்ஜென்சி நிலைமையில் இருக்கிறோம்..!

ரசு பள்ளியில் ஆசிரியரையே ஆபாசமாக பேசி வகுப்பறையில் கொலைவெறியோடு அடிக்க முனைகிறார்கள் மாணவர்கள்.. மாணவர்கள் சஸ்பெண்ட் என தகவல் வருகிறது. வெறிபிடித்த மாணவர்களால் ஆசிரியருக்கே இந்த நிலைமை என்றால், ஆசிரியைகளுக்கும் சக மாணவிகளுக்கும் என்ன கதி என்பதை நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது..!

போதை பழக்கத்திற்கு அந்த மாணவர்கள் ஆளாகி இருப்பது தெரியவந்தால், சீட்டை கிழித்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அப்போதுதான் மற்ற மாணவர்களுக்கும் பயம் வரும்.. புத்தியும் வரும்.. தாக்குவது, ஆபாசமாகப் பேசுவது, விரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல், “அவர்களின் எதிர்காலம் பாழாகிவிடும் அவர்களின் எதிர்காலம் பாழாகிவிடும்” என்று நெஞ்சை நக்கிக்கொண்டிருந்தால் அவர்களால் பலரின் எதிர்காலம்தான் பாழாகும்.
ஒரு படத்தில் மகான் வடிவேலு, “”இதெல்லாம் வளர்ந்தால் பத்து கொலை நாலு ரேப் பண்ணும்” என்று சொல்லுவார்.. காமெடிக்காக சொல்லப்பட்டாலும் அது தான் அப்பட்டமான உண்மை.

தஞ்சையில் 17 வயது பெண்ணை 12 வயது சிறுவன் பலாத்காரம் செய்து ஒரு குழந்தையையே பிரசவிக்க வைத்திருக்கிறான். எதற்கெடுத்தாலும்,” சிறுவர்கள் அவர்களுக்கு என்ன தெரியும்?” என்று சொல்கிறார்கள்.. ஆர்வக்கோளாறில் செய்யும் தவறுக்கும், என்னை என்ன புடுங்கி விடமுடியும் என்று சினிமா ஹீரோக்களால் நாசமாக்கப்பட்ட மாணவர்கள் திமிர் தனத்தில் செய்யும் தவறுக்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது.. இந்த இரண்டுக்குமான வித்தியாசத்தை உணர்ந்து அரசாங்கம்,மற்றும் பெற்றோர் ஆகிய இரண்டு தரப்பும் செயல்படாவிட்டால் எக்கேடு கெட்டாவது போங்கள் என்று ஆசிரியர்கள் வெறுமனே பாடம் நடத்துவதோடு ஒதுங்கிக் போய்க்கொண்டே இருப்பார்கள்.

இன்னொரு பக்கம் ஊர் உலகத்தில் எவனுமே பிள்ளை பெற்றுக்கொள்ளாத மாதிரியும் இவர்கள் மட்டுமே பெற்றுக் கொண்ட மாதிரியும், தங்கள் பிள்ளைகளுக்கு எதிராக ஆசிரியர்கள் சிறு கண்டிப்பு காட்டினாலும்கூட சில பெற்றோர்கள் கொதித்தே போய்விடுகிறார்கள்.. கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகாலம் பள்ளிகள் முழுமையாக செயல்பட முடியாமல் மாணவர்கள் வீட்டுக்குள்ளேயே இருந்ததில், கீழ்படியாமை மறைந்து முரட்டுத்தனம் அதிகமாக வளர்ந்து உள்ளது.

ஒரே வரியில் சொன்னால், கல்வியைவிட பயத்துடன் கூடிய ஒழுக்கத்தை கற்றுத் தராவிட்டால் மாணவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் எதிர்காலம் சங்குதான்

ஏழுமலை வெங்கடேசன்

aanthai

Recent Posts

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிப்பு!

2022-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது. பிரான்சின் அலியான் அஸ்பெக்ட், அமெரிக்காவின்…

3 hours ago

தேசிய விளையாட்டுப் போட்டிகளில், தமிழ்நாடு மொத்தம் 38 பதக்கங்களுடன் 5 வது இடம் பிடித்தது!

இந்தியாவின் ஒலிம்பிக் என்று அழைக்கப்படும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் 1924 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 36-வது தேசிய…

4 hours ago

2022ம் ஆண்டுகான மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடனைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுகான உடலியல்…

1 day ago

இரண்டு பட்டப்படிப்பு திட்டம்; ‘பிஎச்டி’ஆய்வு மாணவர்களுக்கு பொருந்தாதாமில்லே!

இரண்டு பட்டப்படிப்புகளை ஒரே நேரத்தில் படிக்கும் திட்டமானது, பிஎச்டி மாணவர்களுக்கு பொருந்தாது என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. நாடு…

1 day ago

டெலுஷனல் டிஸ்ஆர்டர் (Delusional Disorder)எனப்படும் பிரச்சினை பற்றிய படமே ‘ரீ’!

ரீ அங்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், பிரசாந்த் சீனிவாசன், காயத்ரி ரீமா, பிரசாத் மற்றும் பலர் நடிப்பில் சுந்தரவடிவேல் எழுதி இயக்கியிருக்கும்…

1 day ago

காந்தியைக் கொன்ற சித்தாந்தத்திற்கு எதிரான போராட்டம்!- கொட்டும் மழையில் ராகுல்!

இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணம் கன்னியாகுமரியில்…

1 day ago

This website uses cookies.