August 19, 2022

சிங்கப்பூரில் கொரோனாக் கட்டுப்பாடுகளில் பெரும் மாற்றம்!

சிங்கப்பூரின் மருத்துவமனைகளில் கோவிட்-19 கிருமித்தொற்றுக்காக சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும் சூழலில் அந்நாட்டில் கோவிட்-19 கட்டுப்பாடுகளை எளிமையாக சீரமைக்க உள்ளது. வரும் 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை புதிய விதிமுறைகள் நடப்புக்கு வரும்.

கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஐந்து அம்சங்கள் எளிமைப்படுத்தப்படும் என்று இம்மாதம் 16ஆம் தேதியன்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்திருந்தார். ஒன்று கூடுவோர் எண்ணிக்கை, முகக்கவசம் அணிதல், வேலையிட விதிமுறைகள், சமூக இடைவெளி விதிமுறைகள், குறிப்பிட்ட சில இடங்களில் அனுமதிக்கப்படக்கூடியோர் எண்ணிக்கை ஆகியவை இந்த மாற்றங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தபோதும், ஓமிக்ரான் பரவல் அதிகமானதை அடுத்து தள்ளி வைக்கப்பட்டன.

இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட முக்கிய மாற்றங்களில் சில பின்வருமாறு:

1. வீடுகளுக்கு ஒரே நேரத்தில் ஐந்து பேர் வரை செல்லலாம்

மாற்றங்களின் ஒரு பகுதியாக, எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும் வீடுகளுக்கு ஐந்து விருந்தினர் வரை செல்ல முடியும். ஒரு நாளுக்கு ஐந்து பேர் என்பது தற்போதைய விதிமுறை.

2. முகக்கவசம் அணிந்தால் பாதுகாப்பு இடைவெளி கட்டாயமில்லை

முகக்கவசம் அணியவேண்டிய சூழல்களில் பாதுகாப்பு இடைவெளி கடைபிடிப்பது ஊக்குவிக்கப் படுகிறது. ஆனால் அது கட்டாயம் இல்லை.

முகக்கவசம் அணியாத சூழல்களில் பாதுகாப்பு இடைவெளியைக்கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

3. நிகழ்ச்சி வகைக்கு ஏற்ப இல்லாது, இடத்துக்கு ஏற்ப அதிகபட்ச நபர் வரம்பு

திருமணங்கள், திருமண வரவேற்புகள், சமய நிகழ்ச்சிகள், வர்த்தக நிகழ்ச்சிகள், இறுதிச்சடங்கு நிகழ்வுகள் போன்றவற்றில், அந்தந்த இடங்களின் கொள்ளளவுக்கு ஏற்ப ஆள்கள் கலந்துகொள்ளலாம்.

இந்தந்த நிகழ்ச்சியில் இவ்வளவு பேர்தான் என்று வகைப்படுத்தும் அதிகபட்ச நபர் வரம்பு இருக்காது.

ஆனால் 1,000 பேருக்கு மேல் கூடும் பெரிய நிகழ்ச்சிகளுக்கு அதிகபட்ச ஆள்வரம்பு இருக்கும்.

4. தடுப்பூசி போட்டுக்கொண்டால் 30 பேர் விளையாட்டுகளில் ஈடுபடலாம்

குறிப்பிட்ட விளையாட்டு நிலையங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 30 பேர் வரை விளையாட்டுகளில் கலந்துகொள்ள முடியும்.

5. கூடுதலான வெளிநாட்டு ஊழியர்கள் வெளி இடங்களுக்குச் செல்ல அனுமதி

ஆறாவதாக, மார்ச் 15 முதல், தடுப்பூசி போட்டுக்கொண்ட 15,000 வெளிநாட்டு ஊழியர்கள் வரை வாரநாள்களில் சமூகத்தில் உள்ள இடங்களுக்குச் செல்லலாம்.

வாரயிறுதி, பொது விடுமுறை நாள்களில் இந்த எண்ணிக்கை 30,000 ஆக உயரும்.

எட்டு மணி நேரம் வரை அவர்கள் வருகை புரியலாம்.

தங்குவிடுதிகளிலும் சில விதிமுறை மாற்றங்கள் செய்யப்படும்.

6. 12 – 17 வயதுள்ளவர்களுக்கும் கூடுதல் தடுப்பூசி

மார்ச் 14 முதல், 12 முதல் 17வயது வரை உள்ளவர்கள், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர் என்று கருதப்படுவதற்குகூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

7. சில இடங்களிலிருந்து வரும் பயணிகள் மேற்பார்வை இல்லாமல் ஏஆர்டி பரிசோதனை செய்துகொள்ளலாம்.

சிங்கப்பூருக்கு சில குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி போட்டுக்கொண்டபயணிகள், சொந்தமாக ஏஆர்டி பரிசோதனை செய்துகொள்ளலாம்.

மார்ச் 14ஆம் தேதி இரவு 11.59 மணி இது நடப்புக்கு வருகிறது.

தடுப்பூசி பயணப் பாதைகள் உள்ள சில நாடுகள், தொற்று அபாயம் குறைவாக உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஏஆர்டி நிலையங்களுக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள தேவையில்லை.

அவர்கள் வந்த 24 மணி நேரத்துக்குள் மேற்பார்வை இல்லாமல் ஏஆர்டி பரிசோதனை செய்துவிட்டு, இணையத்தில் முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.