சி.பி.எஸ்.இ.,10 &12ம் வகுப்புகளுக்கு 2-ம் பருவத்தேர்வு தேதி அறிவிப்பு!

சி.பி.எஸ்.இ.,10 &12ம் வகுப்புகளுக்கு 2-ம் பருவத்தேர்வு தேதி அறிவிப்பு!

சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: 2-ம் பருவத்தேர்வுகளை நேரடியாக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து 10 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 26ம் தேதி முதல் துவங்குகிறது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. அதனால் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் மதிப்பீட்டு முறையில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தாக்கம் சற்று குறைந்ததை அடுத்து கடந்த 2021 செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றதால் 10,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த CBSE திட்டமிட்டது.

அந்த வகையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு 2 கட்டங்களாக நடத்தபடும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி கடந்த 2021 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் முதல் கட்ட பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. அதன் பிறகு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நேரத்தில் கொரோனா மூன்றாம் அலை பரவ தொடங்கியதால் மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை நீட்டிக்கப்பட்டு அதுவும் அதிரடியாக முடிவுக்கு வந்து நேரடி வகுப்புகள் தொடங்கின.

இச்சூழலில்தான் 2-ம் பருவத்தேர்வுகளை நேரடியாக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து 10 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 26ம் தேதி முதல் துவங்குகிறது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது

error: Content is protected !!