மகாராஷ்ட்ராவில் பள்ளிக்கூடம் திறந்துட்டாங்கோ!

மகாராஷ்ட்ராவில் பள்ளிக்கூடம் திறந்துட்டாங்கோ!

நாட்டில் சில மாநிலங்களில் தொற்று பரவல் குறைய தொடங்கியுள்ளது. இதையடுத்து தொற்று பரவல் குறைந்த மாநிலத்தில் மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் 1 முதல் 12–ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.

நாட்டில் கொரோனா 3-வது அலை மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டன. அதன்படி மகாராஷ்டிர மாநிலத்திலும் பள்ளிகளுக்கு கடந்த மாதம் முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு பள்ளி, கல்லூரிகளுக்கு அடிக்கடி விடுமுறை அறிவித்தால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படும் என்று கல்வியாளர்கள் கவலை தெரிவித்தனர். இந்த நிலையில் 1 முதல் 12–ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.

மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் பெற்றோர் விருப்பப்படி மாணவர்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மகாராஷ்டிர மாநிலத்தை பொறுத்தவரை நேற்று மட்டும் புதிதாக 40,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் 27,377 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ள நிலையில் 44 பேர் பலியாகியுள்ளனர்.

error: Content is protected !!