மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடங்கும்!
ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட் தாக்கல் தொடர்பாக பொதுமக்கள், வணிகர்கள், தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் எனப் பல தரப்பில் இருந்து பெரும் எதிர்பார்பு இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டும் நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வித்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31ம் தேதி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து 2022-23-ம் நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற விவகாரத்துக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் நேற்று நடந்தது. அந்தக் கூட்டத்தில் மேற்படித் தேதிகளைப் பரிந்துரை செய்து அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பட்ஜெட்கூட்டத்தொடர் இரு அமர்வுகளாக நடத்தப்பட உள்ளது. முதல் அமர்வு ஜனவரி 31ம்ேததி தொடங்கி பிப்ரவரி 11ம் தேதி முடிந்துவிடும். அதன்பின் ஒருமாதத்துக்குப்பின், 2-வது அமர்வு மார்ச் 14ம் தேதி தொடங்கி, ஏப்ரல்8ம் தேதிவரை நடக்கும். 5 மாநிலத் தேர்தல் பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மார்ச் 10ம் தேதிவரை இருப்பதால் ஒருமாதம் இடைவெளிவிட்டு 2-வது அமர்வு நடத்தப்படஉள்ளது.
5 மாநிலத் தேர்தல் முடிவுகள் மார்ச் 10-ம்தேதி வெளியானபின், அடுத்த கட்ட அமர்வை கட்சிகள் உற்சாகத்துடன் தொடங்கும். கொரோனா பரவல் இருப்பதால், எம்.பி.க்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசியும், ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழுடன்தான் வர வேண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் நடந்த அமர்வுகளில் இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடக்காமல் தனித்தனி ஷிப்டகளில் நடக்கும்போது நாடாளுமன்றத்தில் கூட்டம் குறைவாக இருக்கும். ஆனால், தற்போது இரு அவைகளும் ஒன்றாக நடக்க வேண்டியிருப்பதால், சமூகவிலகல் மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்பதால் கொனா பரிசோதனை சான்றிதழ் அவசியமாகும்.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு அமர்வுகளாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் அமர்வு ஜனவரி 31- ஆம் தேதி முதல் பிப்ரவரி 11-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் இரண்டாம் அமர்வு மார்ச் 14-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. மேலும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 -ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.