மத்திய அரசு அலுவலகங்களில் பணிக்கு வருவதில் இருந்து யார், யாருக்கு விலக்கு ?!

மத்திய அரசு அலுவலகங்களில் பணிக்கு வருவதில் இருந்து யார், யாருக்கு விலக்கு ?!

த்திய அரசு அலுவலகங்களில் கர்ப்பிணிகளும், மாற்றுத்திறனாளிகளும் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு தரப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மறுபடியும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதையொட்டி மத்திய அரசு அலுவலகங்களில் பல்வேறு தரப்பினருக்கு சலுகைகளை வழங்கி மத்திய பணியாளர் நலன் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஒரு அறிக்கையை நேற்று வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* மத்திய அரசின் பல்வேறு துறை அலுவலகங்களிலும் கர்ப்பிணிகளும், மாற்றுத்திறனாளிகளும் பணிக்கு அலுவலகங்கள் வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் அவர்கள் பணி நேரத்தில் வீட்டில் இருந்துபணி செய்ய வேண்டும்.

* கொரோனா கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளில் வசிக்கிற அதிகாரிகள், ஊழியர்களுக்கும் அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அந்த பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக இருந்து அகற்றப்படுகிற வரையில் இது தொடரும்.

* துணைசெயலாளர் நிலைக்கு கீழே உள்ள அதிகாரிகள், பணியாளர்கள் 50 சதவீதம் பேர் பணிக்கு வர வேண்டும். எஞ்சிய 50 சதவீதத்தினர் வீடுகளில் இருந்து வேலை செய்ய வேண்டும்.

* வீட்டில் இருந்து வேலை செய்கிறவர்கள் பணி நேரத்தில் தொலைபேசியில் மற்றும் மின்னணு தகவல் தொடர்பு மூலம் தொடர்பு கொள்வதற்கு கிடைக்க வேண்டும்.

* அலுவல்பூர்வமான கூட்டங்களை காணொலிக்காட்சி வழியாக நடத்த வேண்டும்.

* அலுவலக வளாகங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும், காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் இரு பிரிவாக பணிக்கு வரலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!