உ.பி-யில் 7 கட்ட வாக்குப்பதிவு – 5 மாநில தேர்தல் அறிவிப்பு வெளியானது!

உ.பி-யில் 7 கட்ட வாக்குப்பதிவு – 5 மாநில தேர்தல் அறிவிப்பு வெளியானது!

த்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 8ஆம் தேதி சனிக்கிழமை வெளியிட்டது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா அறிவித்தார்.

உத்தரப் பிரதேசம்

உத்தரப்பிரதேச மாநில ஏழு கட்ட வாக்குப்பதிவு விவரம்:

முதல்கட்ட வாக்குப் பதிவு பிப்ரவரி 10,

2ம் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 14,

3ம் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 20, 4ம் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 23,

5ம் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 27,

6ம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3,

7ம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 7.

மணிப்பூர்

மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு இரண்டு கட்டமாக நடைபெறும்.

முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் தேதியும்

2ம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் மாதம் 3ம் தேதியும் நடைபெறும்.

3 மாநிலத்தில் ஒரு கட்ட தேர்தல்

பஞ்சாப்,

உத்தரகாண்ட்,

கோவா

ஆகிய 3 மாநிலங்களிலும் ஒரு கட்ட வாக்குபதிவு அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்த 3 மாநிலங்களிலும் பிப்ரவரி 14ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும்.

வாக்கு எண்ணிக்கை

வாக்குப்பதிவு நடைபெற்ற 5 மாநிலங்களிலும்

வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் 10 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நேரம் எல்லா மாநிலங்களிலும் 1 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 15ஆம் தேதி வரை தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களிலும் பேரணி, பாதயாத்திரை, சைக்கிள் பேரணி ஊர்வலம் ஆகியவை ஜனவரி 15ஆம் தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 15ஆம் தேதிக்கு பிறகு என்ன நிலை என்பதை விளக்கும் உத்தரவுகள் பின்னர் வெளியிடப்படும்.

வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

80 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடல் ஊனமுற்றவர்கள் கொரானோ நோயாளிகள் அஞ்சல் மூலமாக தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம்.

வேட்புமனுத்தாக்கல் வேட்புமனு வாபஸ் இறுதி வேட்பாளர் பட்டியல் ஆகிய பணிகள் உரிய அவகாசத்துடன் நடைபெறும்.

தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முன்கள பணியாளர்களாக கருதப்படுவார்கள் அவர்களுக்கு உரிய வாய்ப்பு வசதிகள் வழங்கப்படும்.

error: Content is protected !!