கணவரால் குடும்ப வன்முறையை எதிர்கொள்ளும் பெண்கள் அதிகரிப்பு!

கணவரால் குடும்ப வன்முறையை எதிர்கொள்ளும் பெண்கள் அதிகரிப்பு!

மிழகத்தில் 38.1% பெண்கள் தங்களது கணவரால் குடும்ப வன்முறைக்கு ஆளாகின்றனர் என்று தேசிய குடும்ப நல ஆய்வு (National Family Health Survey) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் குடும்ப பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரப் பள்ளி (School of Public Health) ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு அதாவது 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ந் தேதி முதல் மார்ச் மாதம் 21 ந் தேதி வரையிலும் பிறகு ஊரடங்கு தளர்வுக்குப் பின்பு 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ந் தேதி முதல் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ந் தேதி வரையிலும் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த ஆய்வில் மொத்தம் 27 ஆயிரத்து 929 குடும்பங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இதில் 25 ஆயிரத்து 650 பெண்கள் மற்றும் 3 ஆயிரத்து 372 ஆண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் 18 முதல் 49 வயது வரை உள்ள பெண்கள் 38.1% பேர் தங்களது கணவரால் குடும்ப வன்முறையை எதிர்கொள்கிறார்கள் என்று தெரிவந்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை கர்நாடகாவில் 44.4%, தெலுங்கானாவில் 36.9%, ஆந்திர பிரதேசத்தில் 30%, கேரளாவில் 9% பெண்கள் தங்களது கணவரால் உடல் மற்றும் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். அதேசமயம் பஞ்சாபில் 11.6%, மகாராஷ்டிராவில் 25.2%, டெல்லியில் 22.6%, மேற்கு வங்கத்தில் 27% பெண்கள் குடும்ப வன்முறையை எதிர்கொள்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.

மேலும் ஆண்கள் மது அருந்துவதால்தான் பெரும்பாலான பெண்கள் இதுபோன்ற பிரச்சனையைச் சந்திக்கின்றனர் என்று தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்த அய்வு கொரோனா ஊரடங்கிற்கு முன்பும் தளர்வுக்குப் பின்பும் நடத்தப்பட்டதால் இதற்கு ஊரடங்கு ஒரு காரணமாக இருக்க முடியாது என்பது உறுதியாகியுள்ளது.

error: Content is protected !!