போலியான நீலிக் கண்ணீர்- சந்திரபாபு நாயுடு மீது ரோஜா காட்டம்!- வீடியோ

ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையில் நடைபெற்ற காரசாரமான விவாதத்திற்கு பிறகு வெளிநடப்பு செய்த அவர், வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது சந்திரபாபு நாயுடு பேச முடியாமல் வருத்தத்தில் கண் கலங்கி கண்ணீர் விட்டு அழுதார். அந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் நிலையில் அதுக்கு ஆக்டரஸ் ரோஜா எம் எல் ஏ பதில் சொன்னதும் ட்ரெண்டிங் ஆகி வருது.

ஆந்திரப் பிரதேசத்தில் 3 முறை முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தன்னையும் தனது மனைவி மற்றும் குடும்பத்தினரை அசிங்கமாக பேசுகிறார்கள் என்று கூறி கண் கலங்கியதையடுத்து சமூக ஊடகங்களில் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

சந்திரபாபு நாயுடுவின் இந்த குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-வும் திரைப்பட நடிகை ரோஜா, விதி யாரையும் விட்டுவைக்காது என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.

சந்திரபாபு நாயுடுவுக்கு வீடியோ மூலம் பதிலடி கொடுத்துள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ, நடிகை ரோஜா கூறியிருப்பதாவது: “சந்திரபாபு… விதி யாரையும் விட்டு வைக்காது. அனைவரது கணக்கையும் சரியாக கணக்கு பார்த்து தீர்த்துவிடும். அன்று 72 வயதில் என்.டி.ஆரை நீங்கள் கலங்க செய்தீர்கள். இன்று 71 வயதிலேயே அதை நீங்களும் அனுபவிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளீர்கள். அதனால் தான் சொல்வார்கள் ‘நாம் என்ன செய்கிறோமோ அது தான் நமக்கு திரும்பும் என்று’.

தங்கள் மனைவி குறித்து பேசிவிட்டார்கள் என கலங்கும் நீங்கள் தான் அதிகாரத்தில் இருந்த போது ‘ரோஜா, ப்ளூ பிலிமில் நடிக்கிறார்’ என சொன்னீர்கள். எங்களுக்கு குடும்பம் இல்லையா? பிள்ளைகள் இல்லையா? அதிகாரத்தில் இருந்த போது அனைவரையும் நீங்கள் விமர்சித்துள்ளீர்கள். விஜயா அம்மா, ஷர்மிளா அம்மா (ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தாய் மற்றும் சகோதரி) குறித்து நீங்கள் பேசியதை யாரும் மறந்து விடவில்லை.

இந்த நிலையில் உங்களது போலியான நீலிக் கண்ணீருக்கு யாரும் ஆதங்கப்பட மாட்டார்கள். எனக்கு தெரிந்து இனி நீங்கள் உங்கள் வாழ்நாளில் சட்டசபைக்கு திரும்ப வாய்ப்பில்லை. அதற்கு காரணம் உங்கள் சபதம் தான். Bye.. Bye… பாபு” என சொல்லியுள்ளார் ரோஜா.” அப்ப்டீன்னு சொல்லி இருக்கார்