December 8, 2021

மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலைக்கான ஆணை வழங்கப்பட்டது!

ப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கிய பாராலிம்பிக் போட்டிகள் செப்டம்பர் 5ம் தேதி நிறைவடைந்தது. இதில் ஆடவர் உயரம் தாண்டுதல் (டி63) போட்டியில் இந்தியாவின் மாரியப்பன் தங்கவேலு 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதேபோல், கடந்த 2016 ஆம் ஆண்டு ரியோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் டி42 வகுப்பில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். மேலும் 2017 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி, இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதினை அறிவித்தது.

இந்நிலையில், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு குரூப் 1 பிரிவில் அரசு வேலைக்கான பணி ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.அதன்படி,தமிழ்நாடு காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பனுக்கு துணை மேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்திய அரசு இவருக்கு ஆகஸ்டு, 2020-இல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதிற்கு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.