மதிமுக தலைமை கழகச் செயலாளராக துரை வையாபுரி நியமனம் – வைகோ அறிவிப்பு.!.

மதிமுக தலைமை கழகச் செயலாளராக துரை வையாபுரி நியமனம் –  வைகோ அறிவிப்பு.!.

ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை சென்னை எழும்பூர் கட்சி அலுவலகத்தில நடைபெற்றது. ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் கணேசமூர்த்தி, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட நிர்வாகிகளும் மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் வைகோவின் மகனான துரை வையாபுரிக்கு கட்சியில் பதவி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி கலந்து கொள்ளவில்லை.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். ஆலோசனைக்குப் பிறகு துரை வையாபுரிக்கு பதவி வழங்குவது குறித்து ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில், வைகோ உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் வாக்களித்தனர். அதில், 106 வாக்குகளில் 104 பேர் துரை வையாபுரிக்கு பதவி வழங்கவேண்டும் என்று வாக்களித்தனர். அதனையடுத்து, துரை வையாபுரிக்கு தலைமைக் கழக செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்துவரும் 25-ம் தேதி அண்ணா நினைவிடம் மற்றும் பெரியார் திடலில் மரியாதை செலுத்தவுள்ள துரை வையாபுரி, வரும் 25-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றன.

இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த வைகோ ” கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் பலரும் துரை வைகோவை கட்சிக்கு அழைக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாக என்னிடம் வலியுறுத்தினார்கள். அதைத்தொடர்ந்து, இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம். அப்போது, வாக்கெடுப்பு நடத்துவது என்று முடிவு செய்தோம். சிலர் வாக்கெடுப்பு வேண்டாம் என்றனர். பின்னர் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினோம். அமைப்புச் செயலாளர் கண்காணிப்பில் வாக்கெடுப்பு நடந்தது. அதில் துரை வைகோவுக்கு 106 வாக்குகள் பதிவானது. அதில் 104 பேர் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். 2 பேர் வாய்ப்பு வழங்கக்கூடாது எனத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்தே, துரை வைகோ தலைமைக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதன்மூலம் இனி அவர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து பணி செய்வார். மாவட்ட நிர்வாகிகள் உடன் தொடர்பில் இருப்பார்” என்றார்.

மேலும் சென்ற மாவட்டங்களிலெல்லாம், துரை வைகோவை கட்சிப்பணிக்கு ஈடுபடுத்த வேண்டுமென தொண்டர்கள் கேட்டுக் கொண்டனர். எனக்குத் தெரியாமல் அவரும் கட்சிப்பணியிலும் களகப்பணியிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் துரை வைகோவின் செயல்பாட்டை தொண்டர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டனர். அதனால், தொண்டர்களின் கருத்துகளை மீறி கட்சிப் பணியாற்றும் ஒருவரை நான் தடுக்கிறோனோ என்ற திகைப்புக்கு உள்ளானேன். அதனால்தான் இன்று கூட்டத்தைக் கூட்டி இந்த முடிவினை எடுத்தோம். துரை வையாபுரி தேர்வில், வாரிசு அரசியல் கிடையாது. கட்சி தொண்டர்கள் விருப்பப்படியே அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்” என்றும் சொன்னார் வைகோ.

error: Content is protected !!