December 7, 2021

சிம்புவின் மாநாடு ரிலீஸ் தீபாவளியன்று இல்லை : நவம்பர் 25ல் வெளியாகுமாம்!

சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் தீபாவளிக்கு வெளியாவதால் மாநாடு படம் ரிலீஸ் தள்ளிப்போகிறது. மேலும் நவம்பர் 25ம் தேதி படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘”நீடித்த பெரும் வருடங்களின் உழைப்பிற்கு பிறகு அறுவடைக்கு காத்திருக்கிறான் மாநாடு. யாரோடும் போட்டி என்பதல்ல. ஒரு விழா நாளில் மக்கள் பல படங்களையும் பார்ப்பார்கள் என்பதாலேயே தீபாவளிக்கு முழுவீச்சில் தயார் செய்து வெளியீடாக வந்துவிட அனைத்து முயற்சியும் செய்யப்பபட்டுவிட்டது. யாரோடும் போட்டி என்பதல்ல.. விழா நாளில் மக்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட படங்களை பார்ப்பது வழக்கம். அதை கருத்தில் கொண்டு தீபாவளி வெளியீடாக வர முடிவெடுத்தோம்.

போட்டி என்ற ரீதியில் பட வெளியீட்டை ஒருபோதும்  பார்ப்பது புத்திசாலித்தனமுமல்ல. நமது மாநாடு படம் நன்றாக திருப்தியாக வந்துள்ளது. அதன் மீது மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. ஆனால்  என்னை நம்பி படம் வியாபார ஒப்பந்தம் செய்துகொண்டவர்கள் பாதிக்கப்படக்கூடாது. அதேபோல் விநியோகஸ்தர்களும், திரையரங்க வெளியீட்டிற்காய் பணம் போட்டவர்களும் என் பட வெளியீட்டின் மூலம் லாபம் காண வேண்டும்; நஷ்டமடையக்கூடாது.

ஆதலால் மாநாடு தீபாவளிக்கு வெளிவராமல் சற்று தள்ளி வெளியாக உள்ளது. நவம்பர் 25ம் தேதி படம் வெளியாகும், மாநாடு தீபாவளி வெளியீட்டிலிருந்து வெளியேறுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.