15 ஆண்டான வாகனங்களுக்கான உரிமம் & தகுதிச் சான்றிதழ் கட்டணம் 8 மடங்கு உயர்வு!

15 ஆண்டு பழைய வாகனங்களுக்கான உரிமம் புதுப்பித்தல் மற்றும் தகுதிச் சான்றிதழ் வழங்குவதற்கான கட்டடங்கள் 8 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன இந்த உயர்வு பற்றிய அறிவிப்பு நேற்று அக்டோபர் 4 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று வெளியிடப்பட்டது.

பழைய வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில், உலக தரத்துக்கு ஏற்ப இன்ஜின் தர நிலைகள் உயர்த்தப்பட்டு, தற்போது பிஎஸ்6 தர நிலையிலான வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இருப்பினும் பல ஆண்டுகள் ஆன பழைய வாகனங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விட்டது. மூலப்பொருட்கள் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் வாகனங்களின் விலை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வரும் சூழ்நிலையில், பழைய வாகன பயன்பாட்டை ஒழித்து புதிய வாகனங்கள் வாங்க சலுகை திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வாகன உற்பத்தி துறையினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், 15 ஆண்டான வாகனங்களுக்கான கட்டண உயர்வு 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பத்தாண்டு பழைய டீசல் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதேபோல 15 ஆண்டுகள் பழையபெட்ரோல் வாகனங்களும் தடை செய்யப்பட்டுள்ளன .

அதனால் இந்த கட்டண உயர்வு டெல்லியை பொருத்தமட்டில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

டெல்லி தவிர இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு உரிய உயர்த்தப்பட்ட கட்டண விகிதங்கள் தொடர்பான பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது: