கோடநாடு எஸ்டேட் கொலை – கொள்ளை வழக்கு விசாரணைக்குத் தடை போட சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

கோடநாடு எஸ்டேட் கொலை – கொள்ளை வழக்கு விசாரணைக்குத் தடை போட சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

டந்த சில வாரங்களாக அன்றாட செய்திகளில் இடம் பிடித்து வரும் கோடநாடு எஸ்டேட் கொலை – கொள்ளை வழக்கில் காவல்துறை நடத்தி வரும், கூடுதல் விசாரணைக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி 11பேர் கொண்ட கும்பல் புகுந்து கொள்ளையடித்தது. அப்போது ஓம்பகதூர், கிருஷ்ண தாப்பா ஆகிய 2 காவலாளிகள் கொல்லபட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கார் ஓட்டுனர் கனகராஜ் என்பவரும் மர்மமான முறையில் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கை விசாரணை நீதிமன்றம் விசாரித்து வருகிறது.இந்த நிலையில், கோடநாடு வழக்கு தொடர்பான விவகாரத்தில் கூடுதல் விசாரனை நடத்தக்கூடாது என வழக்கில் சாட்சியாக இருக்கும் அதிமுக பிரமுகர் அனுபவ் ரவி என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

இந்த நிலையில் மேற்கண்ட ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், கோடநாடு விவகாரத்தில் கூடுதல் விசாரணை நடத்த கூடாது என்றும், சாட்சிதாரரான அனுபவ் ரவி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, நீதிமன்றத்தின் அனுமதியின்றி மேல்விசாரணை நடத்தப்படுகிறது என்றும் மேல் விசாரணை நடத்திக் கொண்டே போனால் வழக்கின் விசாரணை முடிவில்லாமல்தான் செல்லும் என்று வாதிட்டார்.

இதனை பதிவு செய்து கொண்ட பின் நீதிபதிகள், “’கோடநாடு விவகாரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது போல் இருக்கிறது.கோடநாடு வழக்கு விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. தற்போதைய சூழலில் மேல் விசாரணை விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. வழக்கின் தேவை இருப்பின் மேல் விசாரணை நடத்துவதில் என்ன பிரச்சனை உள்ளது. மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை” என்றார்.

மேலும் கோடநாடு விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும் என கூறி அனுபவ் ரவியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

error: Content is protected !!