February 4, 2023

நமது பண்டிகைகளின் பின்னால் உள்ள அறிவியல் – மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி!

பிரதமர் மோடி வானொலி வழியே ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்று கிழமையில் மக்களிடம் பேசும் மன் கி பாத் நிகழ்ச்சி பேசுகிறார்.

இதில் பிரதமர் மோடி கூறியதாவது:–

இன்று மேஜர் தியான்சந்த் பிறந்த நாள் என்பதால் நமது நாடு, அவரின் நினைவை போற்றும் வகையில், இந்நாள் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் 41 ஆண்டுகள் கழித்து இந்திய ஹாக்கி அணி வீரர்கள் திறமையை நிரூபித்து உள்ளனர். நமது இளைஞர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள், ஹாக்கியில் மீண்டும் ஒரு முறை உயிரூட்டியிருக்கின்றார்கள். மேஜர் தியான் சந்த் இன்று உயிருடன் இருப்பார் என்றால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார் என நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம்.

ஹாக்கி சாம்பியன் மேஜர் தியான் சந்த்

இன்றைய இளைஞர்களிடம் விளையாட்டு மீதான காதலையும், ஆர்வத்தையும் பெருமளவில் பார்க்க முடியும். ஒவ்வொரு குடும்பமும் விளையாட்டை பற்றி பேசுகின்றனர். ஒவ்வொருவரின் பங்களிப்பின் மூலம் இந்தியா பல உச்சங்களை அடைய முடியும். விளையாட்டின் மீதுள்ள இந்த ஆர்வமே மேஜர் தியான் சந்துக்கு செலுத்தும் மிக சிறந்த அஞ்சலி.

கிராமங்களில் தொடர்ச்சியாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும். இன்றைய இளைஞர்களின் மனங்கள், பழமைவாத வழிமுறைகளை விட்டு விலகி, புதிய ஒன்றை சாதிக்க விரும்புகின்றன. கல்லூரி பல்கலைக்கழக மாணவர்கள், தனியார் துறையில் வேலை பார்க்கும் இளைஞர்கள் எல்லாம் உற்சாகத்தோடு விண்வெளித்துறையில் பணியாற்ற ஆர்வத்துடன் உள்ளனர். இதில், கல்லூரி, பல்கலைக்கழங்களில் படிக்கும் மாணவர்களின் பங்களிப்பு பெரிய அளவில் இருக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

பண்டிகைள் பின்னால் ஒரு செய்தி

நமது பண்டிகைகளின் பின்னால் உள்ள அறிவியலை அறிந்து நாம் கொண்டாட வேண்டும். ஒவ்வொரு பண்டிகையின் பின்னாலும் ஒரு செய்தி மறைந்திருக்கிறது. பண்டிகைகளை அடுத்த தலைமுறையினருக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும்.

சம்ஸ்கிருதத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டும். அதன் எண்ணங்கள் மற்றும் இலக்கிய நூல்களின் ஊடாக, அறிவையும் தேசிய ஒற்றுமையையும் வளர்க்க உதவுகிறது, சம்ஸ்கிருத இலக்கியம் மனிதகுலத்தின் தெய்வீக தத்துவத்தை உள்ளடக்கியது மற்றும் அதனுடைய அறிவு அனைவரின் கவனத்தையும் கவரும்.

சம்ஸ்கிருதத்தை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள யாராவது உங்களுக்குத் தெரிந்தால், அவர்கள் தொடர்பான தகவல்களை சமூக வலைதளங்களில் #CelebratingSanskrit என்ற ஹேஷ்டேக்கில் பதிவிடுங்கள்.

சமஸ்கிருதம் போதிக்கும் அயர்லாந்து அறிஞர்

வெளிநாடுகளில் சம்ஸ்கிருதம் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பலரைப் பற்றி நான் அறிந்து கொண்டேன். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரட்கர் கோர்டென்ஹோர்ஸ்ட் ஒரு சம்ஸ்கிருத அறிஞர். இவர் அயர்லாந்தில் குழந்தைகளுக்கு சம்ஸ்கிருதம் கற்பிக்கிறார்.

இந்தியா-அயர்லாந்து மற்றும் இந்தியா-தாய்லாந்து இடையே கலாசார உறவுகளை வலுப்படுத்துவதில் சம்ஸ்கிருத மொழி முக்கிய பங்கு வகிக்கிறது. டாக்டர் சிரபத் பிரபாண்டவித்யா மற்றும் டாக்டர் குசுமா ரக்ஷாமணி ஆகிய இருவரும் இந்த பிரசாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவர்கள் தாய்லாந்தில் ]சம்ஸ்கிருத மொழிகளின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகின்றனர்.

அத்தகைய மற்றொரு பேராசிரியர் ஸ்ரீமான் போரிஸ் ஜக்கரின், ரஷியாவில் மாஸ்கோ மாநில பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதம் கற்பிக்கிறார். அவர் பல ஆய்வுக் கட்டுரைகளையும் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். மேலும் சம்ஸ்கிருதத்திலிருந்து ரஷ்ய மொழியில் பல புத்தகங்களை மொழிபெயர்த்துள்ளார். மாணவர்களுக்கு சம்ஸ்கிருத மொழி கற்பிக்கப்படும் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி சம்ஸ்கிருத பள்ளியில் சம்ஸ்கிருத இலக்கண முகாம், சம்ஸ்கிருத நாடகங்கள் மற்றும் சம்ஸ்கிருத தினம் போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.