காபூல் குண்டு வெடிப்பு:அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரிக்கை!

காபூல் குண்டு வெடிப்பு:அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரிக்கை!

ப்கானிஸ்தானத்தில் வியாழக்கிழமை மாலை கடந்த இரண்டு தற்கொலைப்படைத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது அதுதவிர இரண்டு மருத்துவமனைகளில் படுகாயமடைந்த 150 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் பலர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்பக்கூடிய மக்களை மீட்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இதற்கிடையில், நேற்று காபூல் விமான நிலையத்திற்கு வெளியே அபே கேட் அருகே முதலில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அடுத்த சில நிமிடங்களில் பரோன் ஹோட்டல் கேட் அருகே இரண்டாவது தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இதில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், இது மனித வெடிகுண்டு தாக்குதல் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காபூல் நகரில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை சவுதி அரேபியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் கடுமையாகக் கண்டித்துள்ளன.

வியாழக்கிழமை அன்று நடந்த தற்கொலைப்படை தாக்குதல்களினால் ஏற்பட்ட பரபரப்பு ஓய்ந்ததும் மீண்டும் ஆப்கானிஸ்தான் அதிலிருந்து வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்றுவோர் காபூல் விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றும் பணியைத் துவக்கினார்கள். வியாழக்கிழமை அன்று 12,500 பேரை காபூல் நகரத்திலிருந்து அமெரிக்காவுக்கு வெளியேறியதாக வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது இதுவரை காபுல் நகரத்திலிருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் அமெரிக்காவுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று அந்த செய்தி கூறுகிறது.ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானத்தில் உள்ள அமெரிக்கர்கள் அனைவரையும் வெளியேற்ற பணிகளை அமெரிக்கா முடுக்கி விட்டுள்ளது.

தற்காலிக ஏற்பாடாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் அமெரிக்கர்களை பாகிஸ்தானில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைத்து என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் அமெரிக்கா தனது ஊழியர்களை வெளியேற்றுவதற்கு உதவும்படி பாகிஸ்தான் அரசு, அமெரிக்க அரசு கேட்டுக்கொண்டுள்ளது அமெரிக்க அரசின் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள எல்லா ஹோட்டல்களிலும் இன்னும் 21 நாட்களுக்கு புதிதாக யாரும் தங்க இடமளிக்க வேண்டாம் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் ஜெர்மனி இத்தாலி, ஸ்வீடன், ஸ்பெயின் ஆகிய நாடுகளும் வெள்ளிக்கிழமையோடு தங்கள் ஊழியர் வெளியேற்றம் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளன. ஆகஸ்ட் 27ஆம் தேதி இரவுக்குள் தங்கள் ஊழியர்கள் அனைவரும் காபூல் நகரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு விடுவார்கள் என்று பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.\

இந்நிலையில், இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பேசும் போது, “நாங்கள் தலிபான்களால் தடுக்கப்பட மாட்டோம். எங்கள் பணியை நிறுத்த மாட்டோம். நாங்கள் வெளியேற்றத்தைத் தொடர்வோம். அமெரிக்கா திட்டமிட்டபடி காபூலில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி ஆகஸ்ட் 31 ந்தேதி வரை தொடரும். அச்சுறுத்தல் தெரிந்தும், நாங்கள் அதைத்தான் செய்ய வேண்டும் என்று ராணுவம் முடிவெடுத்துள்ளது. அதுவே சரி என்று நானும் எண்ணுகிறேன்.

மேலும், காபூலில் கொடிய தாக்குதல்களை நடத்தியதில் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளுடன் தலிபான்கள் இணைந்து செயல்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால் இதனை நாங்கள் மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம். சம்மந்தப்பட்டவர்களை தேடிவந்து நாங்கள் வேட்டையாடி தக்க பதிலடி கொடுப்போம். இது, இந்த தாக்குதலை நடத்தியவர்களுக்கும், அமெரிக்காவுக்கு தீங்கு விளைவிக்கும் வேறு எவருக்கும் நன்கு தெரியும்” என்று கூறியுள்ளார்.

Related Posts

error: Content is protected !!