January 31, 2023

பாஜக நிர்வாகி கேடி ராகவன் மீது பாய்ந்த பலான சர்ச்சை: முழு விபரம்!

பா.ஜ.கவில் உள்ள பெண்கள் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது அவ்வப்போது பாலியல் புகாரைத் தெரிவிப்பது வாடிக்கையாகி போயுள்ளது இந்நிலையில், பா.ஜ.க மாநிலச் செயலாளரும் இங்குள்ள ஊடகவாசிகளால் மிஸ்டர் க்ளீன் என்று வர்ணிக்கப்படுபவருமான கே டி ராகவன்ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கியுள்ளார். அதுவும் சொந்த கட்சிக்காரர் மூலமாகவே சிக்கியுள்ளார். ஆம்.. பா.ஜ.கவை சேர்ந்த மதன் ரவிச்சந்திரன் கே.டி.ராகவன் தொடர்பான ஆபாச வீடியோவை வெளியிட்டுள்ளார். இவர் சமீபத்தில் முன்னாள் பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தலைமையில் பா.ஜ.கவில் இணைந்தவர் என்பதும் இப்போது இந்த வீடியோ ரிலீஸானதால் கே டி ராகவன் தன் கட்சிப் பதவியை ராஜினிமா செய்து விட்டார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

அதாவது கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பாஜகவில் இணைஞ்சார் ஊடகவியலாளர் என்று சொல்லிக் கொண்ட மதன். இவர் ‘மதன் டைரி’ என்ற பெயரில் யூ-டியூப் சேனல் ஒன்றை நடத்தி வாரார். இந்த சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மதன், “பாஜகவில் உள்ள சில தலைவர்கள் பெண்களிடம் அத்துமீறி நடக்கின்றனர். பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கின்றனர். அதற்காக சில இடங்களையும் சென்னையில் வைத்துள்ளனர். 15 தலைவர்கள் இதுபோன்று செயலில் ஈடுபடும் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அந்த வகையில், பாஜக மாநில பொறுப்பில் உள்ள கே.டி.ராகவன், ஒரு பெண் நிர்வாகியிடம் எப்படி நடந்துகொள்கிறார் என்று பாருங்கள்” எனக் கூறி ஒரு காட்சியை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கே.டி.ராகவன் ஒரு பெண் நிர்வாகியிடம் வீடியோ காலில் பேசிக்கொண்டே, விவரிக்க முடியாத ஒரு தவறான செயலில் ஈடுபடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இது குறித்து தொடர்ந்து பேசிய மதன், “இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் பேசினோம். அவரது ஒப்புதலுடன்தான் இந்த வீடியோவை வெளியிட்டோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று சமூக வலைத்தளங்களில் கே.டி. ராகவன் தொடர்பான பாலியல் வீடியோ ஒன்று வெளியான நிலையில் பாஜக பதவியிலிருந்து விலகி விட்டார்.. தன் நிலை குறித்து ‘என்னையும் என்கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்ட படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்’ என்று ட்விட் போட்டுள்ளார்

இதை அடுத்து இவ்விவகாரம் #பாலியல்ஜல்சாகட்சி என்ற பெயரில் ட்ரெண்டிங் ஆன சூழலில் மேலும் சில முக்கிய புள்ளிகளின் நிர்வாண வீடியோ வெளியாக போறதா தகவல் வெளியாகி உள்ளது.. குறிப்பாக அண்மையில் முக்கிய பதவிக்கு சென்ற ஒருவரின் வீடியோவும் இதில் சிக்கியுள்ளதாம். இதனால் அடுத்தடுத்த வீடியோ வெளியாகக்கூடுமோ என்று முக்கிய புள்ளிகள் கலக்கத்திலும் வேறு பலர் உற்சாகத்திலும் இருக்காய்ங்களாம்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு சர்ச்சைக்குரிய வீடியோ பதிவை நம்பி மட்டும் அதன் உண்மைத் தன்மையை அறியாமல் சம்பந்தப்பட்டவர்களிடம் அதன் மேல் விசாரணை செய்யாமல் குற்றம் சாட்டும் நபரின் வாய் வார்த்தை மட்டும் நம்பி எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? ஆகவே மதன் ரவிச்சந்திரன் இரண்டாம் முறை வலியுறுத்திய போதும் ஆதாரமாக பதிவுகளை சமர்ப்பிக்க கூறினேன். அதன் பின் மூன்றாவது முறையாக அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பினால் ஏற்கனவே கேட்டுக்கொண்ட படி எனக்கு உடனடியாக நியாயம் கிடைக்குமா? நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்டிருந்தார். கட்சி ரீதியான நடவடிக்கை என்ற முடிவையும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நான் ஆடியோ பதிவுகளை வெளியிட போவதாக குறுஞ்செய்தியில் கூறியிருந்தார். முன்னர் இரண்டு முறை நேரில் சந்தித்தபோது நான் கூறிய படி குற்றம் என்ன என்பதை அறியாமல் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற முடிவில் நான் உறுதியாக இருந்தேன். செய்து கொள்ளுங்கள் என்று சுருக்கமாக முடித்து விட்டேன். இன்று காலை கே.டி ராகவன் அவர்களிடம் பேசினேன். 30 ஆண்டு காலத்திற்கு மேலாக உண்மையாகவும் நேர்மையாகவும் கட்சி பணியாற்றிய தன் மீது களங்கம் கற்பிக்கப் படவேண்டும் என்ற நோக்கத்துடன் கட்சியின் நற்பெயருக்கு ஊறுவிளைவிக்கும் எண்ணத்துடன் உயர் தொழில்நுட்பத்தில் தனக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு என்றும் இதை நான் சட்ட ரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் கே.டி ராகவன் தெரிவித்தார்.

மேலும் கட்சியின் மாண்பையும் செம்மையையும் கருதி நான் கட்சியின் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்யப் போவதாக தெரிவித்தார். நானும் அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டேன். கே.டி ராகவன் இந்த பிரச்சினையை முறைப்படி சட்டரீதியாக எதிர்கொண்டு திரும்புவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதே போல மதன் ரவிசந்திரன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கும் வீடியோ பதிவில் இதுபோல இன்னும் வேறு நபர்களின் பதிவுகளும் வெளிவர இருக்கிறது என்று சொல்லி இருப்பது அவருக்கு ஏதேனும் ஒரு உள்நோக்கம் இருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

பாரம்பரியத்தையும் மரபையும் சுட்டிக்காட்டும் பாரதிய ஜனதா கட்சியில் பொறுப்பிற்கு நிர்வாகத்திற்கும் இருக்கும் பெண்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறார்கள். மிகுந்த மரியாதையுடன் நடத்தப் படுகிறார்கள். இந்நிலையில், கட்சியின் மாண்பு கருதி இதுபோல குற்றம் சுமத்தப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது விசாரணை நடத்த பாஜக மாநில செயலாளர் திருமதி மலர்கொடி அவர்கள் தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைத்து சாட்டப்படும் குற்றங்களில் வீடியோ பதிவுகளில் உள்ள உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இந்த வீடியோ பதிவின் இறுதியில் தனக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு ஒரு சில நபர்கள் தான் காரணம் என்றும் மதன் கூறியிருக்கிறார். நான் தொடர்ந்து மூன்று முறை வலியுறுத்தியும் கட்சியின் தலைவருக்கும் அமைப்பு செயலாளருக்கும் ஆதாரங்களை காட்சி படுத்தாமல் தன் சொல்லை மட்டும் நம்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய மதன் அவருக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு பாரதிய ஜனதா கட்சி எப்படி பொறுப்பேற்க முடியும்?. அவரவர் செயலுக்கு அவர் அவரவர் தான் பொறுப்பு ஏற்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.